நெய்லா சோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெய்லா சோகன்
நெய்லா சோகன், பாகித்தான் குடிமைப்பணி 1982
பதவியில்
2014 அக்டோபர் 29 – 2018 மே 5
பதவியில்
2009 ஆகத்து 26 – 2013 ஏப்ரல் 29
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 மே 1958 (1958-05-06) (அகவை 65)
இராவல்பிண்டி, பாகித்தான் பாக்கித்தான்
துணைவர்மூசா ஜாவித் சோகன்
பிள்ளைகள்உஸ்மான் டபிள்யூ. சோகன் மற்றும் இப்ராகிம் ஏ.சோகன்
முன்னாள் கல்லூரிஆர்வர்டு பல்கலைக்கழகம், இக்கோல் நஷனேல் சுப்பீரியர் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ், பாரிஸ்
வேலைபாகித்தான் தூதர், பெண்கள் உரிமை வழக்கறிஞர் மற்றும் கலைஞர்

நெய்லா சோகன் (Naela Chohan) (பிறப்பு: 1958 மே 6) நைலா சோகன் என்றும் அறியப்படும் இவர் பாகித்தானின் இராவல்பிண்டியில் பிறந்தார். இவர் ஒரு பாகித்தானிய தூதரும், கலைஞரும் மற்றும் இராஜதந்திரியும் ஆவார். ஒரு அனுபவமுள்ள மற்றும் மூத்த இராஜதந்திரி என்ற முறையில், தூதர் சோகன் ஐந்து வெவ்வேறு கண்டங்களில் எட்டு வெவ்வேறு பாகித்தான் இராஜதந்திர பணிகளில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.[1][2] பாரசீக, பிரஞ்சு மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட ஏழு இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் நைலா சோகான் ஒரு பன்மொழிப் புலமை வாய்ந்தவராவார் [3] .[1][4]

ஒரு சில பிற இராஜதந்திரிகளுடன், பாக்கித்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் மிக உயர்ந்த இடத்திற்கு உயர்ந்துள்ள முதல் மற்றும் மூத்த பெண்களை நெய்லா சோகன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[5] கனடாவின் வாராந்திர வெளியுறவுக் கொள்கை தூதரகம் இதழ் 2008 சனவரியில் இவரை விவரித்தது, "உயரத்தில் சிறிது மென்மையாகவும், பேச்சில் மென்மையாகவும் இருந்தாலும், பாகித்தான் வெளியுறவு சேவையின் மிக சக்திவாய்ந்தவர் நெய்லா சோகன்." என்றது.[6] பாகித்தானின் வெளியுறவு அமைச்சகத்தில் சீனா மேசையில் தனது இராஜதந்திர வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பலதரப்பட்ட ஒத்துழைப்பைக் கருத்தில் கொண்டு வலுவான பாகித்தான்-சீனா கூட்டணியின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.[7][8] பாக்கித்தானில் இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான மாநாட்டை அமல்படுத்துவது தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவரான முதல் பொதுமக்கள் மற்றும் பெண் என்ற பெருமையை உலக இரசாயன ஆயுதங்களை தடை செய்வதில் நெய்லா சோகன் உறுதி பூண்டுள்ளார்.[9] அர்ஜென்டினாவின் புவெனஸ் ஐரிசில் உள்ள பிளாசா டி பாக்கித்தான் உள்ளிட்ட பல பாகித்தான் அடையாளங்களை கருத்தரித்த அல்லது மீட்டெடுத்ததற்கு இவர் பொறுப்பாவார். 1979 ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானிய அரசாங்கத்தால் தெஹ்ரானில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் வெளியுறவு இராஜதந்திரி ஆவார்.[5]

தூதர்[தொகு]

நெய்லா சோஹன் ஆஸ்திரேலியாவுக்கு பாகித்தான் தூதராக பணியாற்றியுள்ளார்,[10] அங்கு இவர் இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதில் பாதுகாப்பு, விவசாய,[11] கல்வி மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்தார்.[12][13][14] இவர் முன்னர் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிற்கான பாகித்தானின் செயலாளராக பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னர் இவர் அர்ஜென்டினா, உருகுவே, பெரு மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளுக்கான பாகித்தானின் தூதராக இருந்தார். அங்கு இவர் பாகித்தானுக்கும் லத்தீன் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான உறவுகளின் குரல் ஆதரவாளராக இருந்து வந்தார்.[15][16] இவர் காயித்-இ-அசாம் பல்கலைக்கழகம் மற்றும் ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தின் கென்னடி அரசுப் பள்ளியின் முன்னால் மாணவியுமாவார்.

பெண்கள் உரிமை[தொகு]

இவரது இராஜதந்திர வாழ்க்கைக்கு அப்பால், நெய்லா சோகன் காட்சி கலை ஊடகம் மூலம் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்ப்பவர் ஆவார். மேலும் இவரது கலைக் கண்காட்சிகள் ஐந்து கண்டங்களில் நடந்துள்ளன.[17][18] இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு சோஃப்ரான்ஸ் என்பதாகும். இது பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் 2002 முதல் நிரந்தர காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[19]

குடும்பம்[தொகு]

நெய்லா சோகன், பிரான்சிற்கான பாகித்தான் தூதரும் (2001), யுனெஸ்யும் (2001), கனடாவுக்கான உயர் ஸ்தானிரும் (2007) மற்றும் மலேசியாவில் (1997) பணியாற்றிய தூதருமான மூசா ஜாவேத் என்பவரை மணந்தார். இவருக்கு உஸ்மான் டபிள்யூ. சோகன் மற்றும் இப்ராகிம் ஏ.சோகன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Determinants of Peace in South Asia - Ambassador Naela Chohan
  2. SBS Australia (Urdu Service) பரணிடப்பட்டது 2016-05-13 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2016-05-13 at the வந்தவழி இயந்திரம் Message from Ambassador Chohan to the Pakistani Community in Australia
  3. International Association of Hyperpolyglots பரணிடப்பட்டது 2020-02-24 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2020-02-24 at the வந்தவழி இயந்திரம் Special Interview with Naela Chohan. Accessed 17 November 2016.
  4. Visión Siete Interview #1 Naela Chohan Interview (Spanish) Naela Chohan Interview on Vision Siete Argentina (Spanish)
  5. 5.0 5.1 The Nation Daily Welcome to the Ministry of Foreign Affairs, where the glass ceiling is gone
  6. Embassy Magazine Canada பரணிடப்பட்டது 2015-09-23 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2018-09-30 at the வந்தவழி இயந்திரம் Jeff Davis, Ottawa Canada. January, 2008.
  7. 情对祖国讲 爱向祖国说|巴基斯坦驻澳大使可汗阁下致辞 Ambassador Naela Chohan's views on a strong Pakistan-China Friendship (English/Chinese)
  8. 澳大利亚国立大学举办“一带一路”论坛 Australian National University CSSA China Conference (Chinese)
  9. MEETING OF THE STATES PARTIES TO THE CONVENTION ON THE PROHIBITION OF THE DEVELOPMENT, PRODUCTION AND STOCKPILING OF BACTERIOLOGICAL (BIOLOGICAL) AND TOXIN WEAPONS AND ON THEIR DESTRUCTION, Page 11
  10. Australian Broadcasting Corporation, Interview with Ambassador Naela Chohan "Pakistan turns 70 as a nation." Date accessed 17 August 2017.
  11. Summit focuses on global megatrends பரணிடப்பட்டது 2018-06-22 at the வந்தவழி இயந்திரம் Naela Chohan at the Agricultural Summit in Canberra, Australia
  12. "Naela Chohan calls on the President of Pakistan". Archived from the original on 2015-10-05. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
  13. A Conversation Between Hemispheres: Gender Equality Post-2015 Development Agenda - Naela Chohan Parliament of Australia - UN SDG Convention (English)
  14. Launching of Consulate General of Pakistan in Melbourne. SBS Australia. Accessed 8 April 2018.
  15. Roundable at the Institute for Regional Studies, Pakistan பரணிடப்பட்டது 23 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம்
  16. "Naela Chohan for Enhancing Ties with Latin American Countries". Archived from the original on 2014-10-16. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
  17. Naela Chohan’s ‘Art from the Heart’ exhibition Launch with Laureen Harper Amna Hakim, Rothwell Gallery, Ottawa
  18. Diplomat displays artwork at east-end gallery பரணிடப்பட்டது 2018-09-30 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2018-09-30 at the வந்தவழி இயந்திரம் Laura Cummings, The Labradorian Newspaper, 2009"
  19. "UNESCO Press Release - Bureau of Strategic Planning - Section for Women and Gender Equality (2002)". Archived from the original on 2015-01-14. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்லா_சோகன்&oldid=3926366" இலிருந்து மீள்விக்கப்பட்டது