லாக்கெட் சாட்டர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாக்கெட் சாட்டர்ஜி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019 மே 23
முன்னையவர்இரத்னா தே
தொகுதிஹூக்ளி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
லாக்கெட் சாட்டர்ஜி

4 திசம்பர் 1974 (1974-12-04) (அகவை 49)[1]
கொல்கத்தா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2015 முதல் தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2015 வரை)
துணைவர்பிரசென்ஜித் பட்டாச்சார்ஜி
பிள்ளைகள்1 மகன்
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம்
வேலைநடிகை, நடனம், அரசியல்வாதி

லாக்கெட் சாட்டர்ஜி (Locket Chatterjee) (பிறப்பு: 1974 திசம்பர் 4 ) இவர் ஒரு வங்காள நடிகையும், இந்திய அரசியல்வாதியுமாவார். இவர் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். மேலும் இவர் ஒரு பாரம்பரிய நடனக் கலைஞரும் கூட. இவர் பரதநாட்டியம், கதகளி, மணிப்பூரி ஆகியவற்றை கற்றிருக்கிறார்.[2] ஆனால் இவர் ஒரு நடிகையாக நன்கு அறியப்பட்டவர். மேற்கு வங்காளத்தின் பாரதிய ஜனதா கட்சியின்]] பெண்கள் பிரிவான பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சாவின் மாநிலத் தலைவராகவும் உள்ளார்.[3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சாட்டர்ஜியின் தந்தை அவரது தாத்தாவைப் போலவே ஒரு புரோகிதர் ஆவார். இவருடைய தாய் அபர்ணா சாட்டர்ஜி இவரை நடனப் பள்ளியில் கொண்டுச் சேர்த்தார். சாட்டர்ஜி எட்டாம் வகுப்பு மாணவியாக இருந்தபோதே மம்தா சங்கர் பாலே குழுவுடன் வெளிநாடு சென்றார்.[4] கங்கையின் வடக்கு கரையின் புறநகர்ப் பகுதியான கொல்கத்தாவின் தக்சினேசுவர் பகுதியில் இவர் வளர்ந்தார்.[5]

பின்னர், கொல்கத்தாவின் பழமையான மற்றும் மதிப்புமிக்க மகளிர் கல்லூரிகளில் ஒன்றான கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஜோகமயா தேவி கல்லூரியில் அறிவியலில் இளங்கலை படித்தார்.[6]

அரசியல் வாழ்க்கை[தொகு]

லாக்கெட் சாட்டர்ஜி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக அரசியல் அரங்கில் நுழைந்தார். பின்னர் இவர் அக்கட்சியினுடனான உறவுகளைத் துண்டித்து 2015இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இவர் மேற்கு வங்காளத்தின் மயூரேசுவரில் இருந்து 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அகில இந்திய திரினாமுல் காங்கிரசு கட்சியின் அபிஜித் ராயிடம் தோற்றார். 2017ஆம் ஆண்டில் ரூபா கங்குலிக்கு பதிலாக மேற்கு வங்கத்தில் [பாரதிய ஜனதா கட்சியின் மகிலா மோர்ச்சாவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்[தொகு]

ரத்னா தே என்பவருக்கு எதிராக ஹூக்ளி மக்களவைத் தொகுதியிலிருந்து 2019 ஆம் ஆண்டு போட்டியிட்டு 6,71,448 (46.06%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2019 செப்டம்பர் 13 அன்று, தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 2019 அக்டோபர் 9 முதல் இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான குழு உறுப்பினராக பணியாற்றுகிறார்.

தொலைக்காட்சி[தொகு]

மா மனாஷா (ஈடிவி பங்களா) [5], போலோபாஷா தேகே ஜெய் (ஈடிவி பங்களா) [7] மற்றும் தருண் மஜும்தார் இயக்கிய துர்கேஷ் நந்தினி ஆகியோரின் பாங்கிம் சந்திர சட்டோபாத்யாயின் புதினத்தின் தொலைக்காட்சி தழுலில் முன்னி பாய் வேடத்தில் லாக்கெட் நடித்தார் [8]

குடும்பம்[தொகு]

லாகெட் சாட்டர்ஜி பிரசென்ஜித் பட்டாச்சார்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.[9]

குறிப்புகள்[தொகு]

  1. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.
  2. "Locket Chatterjee biography". itimes. பார்க்கப்பட்ட நாள் 20 May 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. PTI. "Locket Chatterjee replaces Roopa Ganguly as WB BJP Mahila Morcha president". economictimes.indiatimes.com. Archived from the original on 26 September 2017. பார்க்கப்பட்ட நாள் September 26, 2017.
  4. "At 16, I got married: Locket". Times of India. 21 Feb 2011 இம் மூலத்தில் இருந்து 5 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131005010311/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-21/news-interviews/28618738_1_film-industry-dance-tour-dance-school. பார்த்த நாள்: 20 May 2012. 
  5. 5.0 5.1 "Birthday Girl". Telegraph Kolkata. 25 November 2008. http://www.telegraphindia.com/1111009/jsp/graphiti/story_14600416.jsp. பார்த்த நாள்: 20 May 2012. 
  6. "History of the College - Jogamaya Devi College, Kolkata, INDIA". www.jogamayadevicollege.org. Archived from the original on 3 April 2019. பார்க்கப்பட்ட நாள் 7 September 2012.
  7. Nag, Kushali (15 October 2011). "Real to reel". Telegraph, Kolkata (Calcutta, India) இம் மூலத்தில் இருந்து 5 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131005004238/http://www.telegraphindia.com/1111015/jsp/entertainment/story_14624361.jsp. பார்த்த நாள்: 20 May 2012. 
  8. Nag, Kushali (20 October 2010). "She’s on a roll". Telegraph (Calcutta, India) இம் மூலத்தில் இருந்து 5 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131005000340/http://www.telegraphindia.com/1101020/jsp/entertainment/story_13076751.jsp. பார்த்த நாள்: 20 May 2012. 
  9. http://loksabhaph.nic.in/Members/MemberBioprofile.aspx?mpsno=5043

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்கெட்_சாட்டர்ஜி&oldid=3852116" இலிருந்து மீள்விக்கப்பட்டது