சுதேசனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதேசனை
Sudeshna
அரசியான சுதேசனா(இடது) திரௌபதியை வாழ்த்துகிறார். மற்றவர்கள் அவரின் அந்தரங்கப் பணியாளர்கள்
தகவல்
துணைவர்(கள்)விராடன்
பிள்ளைகள்உத்தரன், உத்தரை, சுவேதன், சங்ககன்

சுதேசனா அல்லது சுதேசனை இந்து காவியமான மகாபாரதத்தில், மன்னர் விராடனின் மனைவியாக இருந்தார், பாண்டவர்கள் நாடுகடத்தப்பட்ட காலத்தில் அஞ்சாத வாசத்தில் ஒரு ஆண்டு காலம் இங்குதான் மறைத்து வாழ்ந்து வந்தனர். .உத்தரன், உத்தரை, சுவேதன், மற்றும் சங்ககன் ஆகியோரின் தாயாவாள். சுதேசனைக்கு கீசகன் என்ற ஒரு ஒரு சகோதரன் இருந்தான். மேலும் சாதனிகன் என்ற ஒரு மைத்துனரும் உண்டு.

சுதேசனாவின் சொந்த இராச்சியம் பற்றி மகாபாரதத்தில் குறிப்பிடப்படவில்லை. அவரது மூத்த சகோதரர் கீசகன், மத்ஸசய நாட்டு இராணுவத்தின் தளபதியாக இருந்தார். எனவே மறைமுகமாக, சுதேசனா மத்சய வம்சாவளியைச் சேர்ந்தவர். நவீன சொற்களில் இந்த சுதேசனா என்ற சொல் நன்கு பிறந்தவர் என்ற ஒரு பொருளைக் கொண்டுள்ளது.

மகாபாரதத்தில் சுதேசனாவின் பங்கு[தொகு]

பாண்டவர்களின் 13 வது ஆண்டின் காடுறை வாழ்க்கையின் போது, சுதேசனா தான் அறியாமலேயே பாண்டவர்களையும் திரௌபதியையும் விருந்தினராகக் கொள்கிறார். திரௌபதி தன்னை திரௌபதியின் பணிப்பெண்ணாக, சைரந்திரியாகக் காட்டிக்கொள்கிறார். சுதேசனா ஒரு நாள் தனது அறை ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறாள், திரௌபதி சந்தையில் அலைந்து திரிவதைப் பார்க்கிறாள். அவளது அழகைக் கண்டு திகைத்துப்போன சுதேசனா பின்னர் விசாரிக்கிறாள். பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்தை இழந்தபின் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த பணியாட்கள் இப்போது வேலை இல்லாமல், இந்திரபிரஸ்த நகரில் திரௌபதியின் அந்தரங்க சேவைகள் செய்த முன்னாள்அரசவைப் பெண்மணி என்றும் தனது பெயர் சைரந்திரி என்றும் காட்டிக்கொள்கிறார். சைரந்திரி மிகுந்த அழகுடன் அரச மகளிர் போலத் தோற்றமளிப்பதால், சைரந்திரி கூறிய கதையின் மீது சுதேசனை சந்தேகம் கொள்கிறார். பின்னர் சுதேசனா மிகவும் மூட ஐயம் கொண்டவள் என்று தன்னைத் தானே கடிந்து கொண்டு சைரந்திரியை வேலைக்கு அமர்த்துகிறார். சைரந்திரியும் ஒரு விசுவாசமான, திறமையான கைவேலைச் செய்பவர் என்பதை நிரூபிக்கிறார்.[1]

கீசகன் சைரந்திரியை கவனித்து, அவளுடைய அழகைக் கண்டு, சுதேசனையிடம் அவளைப் பற்றி விசாரிக்கிறான். கீசகனின் ஆர்வத்தை சைரந்திரிக்கு சுதேசனா தெரிவிக்கிறார்.கீச்சகனைக் சைரந்திரி கடிந்துகொண்டு, தன்னை ஏற்கனவே ஒரு கந்தர்வன் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, தன்னைத் தொட்ட எந்தவொரு மனிதனையும் அவ்ர்கொன்றுவிடுவார் என்றும் கூறுகிறார்.

தனது மூத்த சகோதரரை மறுக்க முடியாத சுதேசனா, அரசரின் எச்சரிக்கைகள் குறித்து கவனமாக இருக்கும்படிக் கூறுகிறார். ஆனால்தங்கள் நகரத்தின் முதன்மைத் தளபதியை அதிருப்தியடையச் செய்யக்கூடாது என கீசகனின் வீட்டிலிருந்து மதுவை எடுத்து வருமாறு கூறுகிறார். அந்த செயல்மூலம் கீசகனுக்கு சைரந்திரியை அறிமுகப்படுத்துகிறார்.  சைரந்திரியின் எச்சரிக்கைகளை மீண்டும் கவனிக்க அவள் மறுக்கிறாள். சைரந்திரி வரும் தருணத்தில், கீசகன் அவளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயற்சிக்கிறான். சைரந்திரிசுதேசனாவை உதவிக்காகப் பார்க்கிறார், ஆனால் ராணி அமைதியாக இருக்கிறார்.. [2]

பின்னர், கீச்சகன் மர்மமான சூழ்நிலையில் இறக்கும் போது (உண்மையில் பீமானால் கொல்லப்பட்டார்), சுதேசனை பயந்துபோய், சைரந்திரியிடம் மன்னிப்பு கேட்கிறார். அவரது வார்த்தைகள் நிறைவேறியதைக் கண்ட சுதேசனா, சைரந்திரி சாதாரண பெண் இல்லை என்பதை அங்கீகரிக்கிறார். சைரந்திரியின் வார்த்தைகள் உண்மையாகிவிடும் என்று நம்பி, கீசகனின் மரணத்திற்கு சைரந்திரிக்கு தண்டனை வழங்குவதை எதிர்த்து சுதேசனா தனது கணவருக்கு ஆலோசனை கூறுகிறார். [3]

சுசர்மாவும், திரிகர்த்தர்களும் மத்சய நாட்டைத் தாக்கும்போது, சுதேசனா தனது கணவரும் இராணுவ வீரர்களும் பின்வாங்குவதைப் பார்க்கிறார். பின்னர், கௌரவர்கள் மற்ற திசையிலிருந்து தாக்கும்போது, எஞ்சியுள்ல சில வீரர்களைக் கண்டுபிடிப்பதற்காக நகரப் பாதுகாப்பை ஒழுங்கமைக்க முயற்சிக்கிறாள். அவரது இளம் மகன் உத்தரன் தனியொரு வீரனாக அவன் கௌரவர்களைத் தோற்கடிப்பான் என்று தற்பெருமை பேசுகிறார், மேலும் வெளியே செல்லவும் தயாராகிறார். கௌரவர்களால் தன் மகன் கொல்லப்படுவான் என்று தெரிந்தும் கொல்லப்படுவான் என்பதை அறிந்த சுதேசனா அவனைக் போக விடாமலிருக்க முயற்சிக்கிறாள்.

சைரந்திரி, பிருகன்னளையை ((உண்மையில் அருச்சுனன் மாறுவேடத்தில் பிருகன்னளையாக உள்லான்) தேரோட்டியாகக் கொண்டு உத்தரனைப் போருக்குப் புறப்படும்படிக் கூறுகிறாள். உத்தரன்அப்படிச் செய்தால் எந்தவித சேதமும் அவனுக்கு வராது என்றும் தெரிவித்தார். தனது தேரை ஒரு பெண்ணின் கையில் கொடுக்க விரும்பாமல், உத்தரன் மறுக்க முயற்சிக்கிறான். இருப்பினும், சைரந்திரி சொன்னால் அது உண்மையாக இருக்க வேண்டும் என்று சுதேசனா உத்தரனைப் போருக்குச் செல்லப் பணிக்கிறார்.. இவ்வாறு,உத்தரன் கௌரவர்களை எதிர்கொள்ளும்போது, அர்ஜுனன்தான் உண்மையில் அனைவரையும் தோற்கடித்து உத்தரனையும் இறக்கவிடாமல் காப்பாற்றுகிறான்., மத்சய நாடு தோல்வியில் விழுவதைத் தடுக்கிறான். [4] [5]

மோதலுக்குப் பிறகு, பாண்டவர்கள் தங்களை வெளிப்படுத்துகிறார்கள். திரௌபதி தனது கூரையின் கீழ் இதுபோன்ற பணியாளாகத் தங்கியதால் சுதேசனா திகிலடைகிறார்.. இருப்பினும், திரௌபதி மற்றும் பாண்டவர்கள் விரைவாக அவர்களை மன்னித்து, தங்குமிடம் கொடுத்த அரச ஜோடிக்கு நன்றி தெரிவித்தனர். இவர்களின் மகள் உத்தரை அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார். விராட மன்னன் உடனடியாக தங்கள் ராஜ்யத்தை மீட்டெடுப்பதற்காகப் பாண்டவர்களுக்கு ஆதரவை வழங்குவதாக உறுதியளிக்கிறார், மேலும் அவரது இராணுவமும் சுதேசனாவின் குழந்தைகளும் குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களுடன் இணைந்து கௌரவர்களுக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.

முதல் நாள், உத்தரன் மற்றும் அவரது சகோதரர் இருவரும் கொல்லப்படுவதால் சுதேசனா இழப்பை சந்திக்கிறார். போரின் முடிவில், அவரது கணவர், குழந்தைகள் மற்றும் முழு மத்சய நாட்டின் இராணுவமும் அழிக்கப்படுகின்றன. இருப்பினும், அவரது பேரன் உத்திரைக்கும் அருச்சுனனுக்கும் பிறந்த பரிட்சித்து மீண்டும் ஒன்றிணைந்த அத்தினாபுரத்தின் புதிய வாரிசு ஆகிறார். பரிக்ஷித்தின் பிறப்புக்கு சுதேசனா இருக்கிறார். கிருஷ்ணரிடம் உத்தரையின் கருவில் உள்ள இன்னும் பிறக்காத பரிட்சித்துவைக் காக்க வேண்டுபவர்களில் அவள் ஒருவராக இருக்கிறாள். [6]

குறிப்புகள்[தொகு]

  1. Rajagopalachari, C (2010). Mahabharata. Bharatiya Vidya Bhavan. பக். 174. 
  2. Rajagopalachari, C (2010). Mahabharata. Bharatiya Vidya Bhavan. பக். 203. 
  3. Rajagopalachari, C (2010). Mahabharata. Bharatiya Vidya Bhavan. பக். 204. 
  4. The Modern review, Volume 84, Ramananda Chatterjee, Prabasi Press Private, Ltd., 1948 - History. 
  5. Rizvi, S. H. M. (1987). Mina, The Ruling Tribe of Rajasthan (Socio-biological Appraisal). B.R. Pub. Corp.. 
  6. C. Rajagopalachar, Mahābhārata, pp 215
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதேசனை&oldid=2931344" இலிருந்து மீள்விக்கப்பட்டது