காங்கிரசு சனநாயகப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காங்கிரசு சனநாயகப் பேரவை
தலைவர்ப. சிதம்பரம்
நிறுவனர்ப. சிதம்பரம்
தொடக்கம்2001
பிரிவுதமிழ் மாநில காங்கிரசு
இணைந்ததுஇந்திய தேசிய காங்கிரசு
இந்தியா அரசியல்

காங்கிரசு சனநாயகப் பேரவை (Congress Jananayaka Peravai, ஆங்கிலம்:Congress Democratic Front) இந்தியாவின், தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சியை ப. சிதம்பரம் 2001 ஆம் ஆண்டு நிறுவினார். 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக - காங்கிரசு கூட்டணியை எதிர்த்து, தமிழ்நாடு மாநில காங்கிரசு தலைவர்களான ஜி. கே. மூப்பனார் அவரது நண்பர் ப. சிதம்பரம் ஆகியோர் இணைந்து தமிழ் மாநில காங்கிரசு என்ற கட்சியை உருவாக்கினார்கள். பின்பு அவ்வாண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தமாகா கூட்டணி ஆதரவுடன் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்து நடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தமிழ் மாநில காங்கிரசு - அதிமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டதால், அதிலிருந்து விலகிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரசு சனநாயக பேரவை என்ற கட்சியை 2001 ஆம் ஆண்டு தொடங்கினார். பின் அவ்வாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எதிர்கட்சியான திமுக அங்கம் வகித்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேஜகூ கூட்டணியில் இடம் பெற்று இருந்தது.[1][2]

2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், ப. சிதம்பரம், சிவகங்கை தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு, 4,00,393 வாக்குகள் (60,01%) பெற்று வெற்றி பெற்றார்.

நவம்பர் 25, 2004 அன்று இக்கட்சியானது, இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது. இந்த இணைப்பு குறித்த விவாதங்கள், நீண்ட காலமாக நடந்தன. ஆனால் இந்த இணைப்பை, தமிழக காங்கிரசு தலைமையால் எதிர்க்கப்பட்டது. இறுதியில் இந்த இணைப்பு தேசிய காங்கிரசு தலைமையால் நிகழ்த்தப்பட்டது.[3]

மேற்கோள்கள்

  1. "காங்கிரசில் இணைகிறது ப.சியின் காங். ஜனநாயக பேரவை". ஒன்இந்தியா தமிழ் (சூன் 5, 2004)
  2. "ப.சிதம்பரத்தின் அரசியல் எழுச்சியும், கடந்து வந்த பாதையும்". News18 (ஆகத்து 22, 2019)
  3. "CJP merges with Congress". The Hindu. 2004-11-26. Archived from the original on 2013-07-20. பார்க்கப்பட்ட நாள் 2013-07-20. {{cite web}}: Unknown parameter |= ignored (help)