பைசாலி மொஹந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசாலி மொஹந்தி
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் ஒடிசி நடனம் குறித்து பைசாலி மொஹந்தி உரை நிகழ்த்துகிறார்
பிறப்பு5 ஆகத்து 1994 (1994-08-05) (அகவை 29)
ஒடிசா, புரி மாவட்டம், புரி
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஐக்கிய இராச்சியம், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் தில்லி லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரி
பணிநடனக் கலைஞர், நடன அமைப்பாளர், பத்தியாளர், வெளியுறவுக் கொள்கை & மூலோபாய விவகார ஆய்வாளர், எழுத்தாளர்

பைசாலி மொஹந்தி (Baisali Mohanty, பிறப்பு: 5, ஆகத்து, 1994) என்பவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குனர், எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் வெளியுறவு மற்றும் பொதுக் கொள்கை ஆய்வாளர் ஆவார். இவர் அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ், தி ஹஃபிங்டன் போஸ்ட், தி டிப்ளமோட் மற்றும் இலண்டனின் ஓபன் டெமோக்ராசி, உள்ளிட்ட பல மதிப்புமிக்க சர்வதேச வெளியீடுகளில் வெளியுறவுக் கொள்கை மற்றும் அலுவல்பூர்வ விவகாரங்கள் குறித்த வழக்கமான பங்களிப்பாளிப்புகளை அளித்துவருகிறார். [1] [2] [3] [4] [5] [6] இவர் ஆக்ஸ்போர்டு ஒடிசி மையத்தின் நிறுவனர் ஆவார். இது ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பிற முன்னணி நிறுவனங்களில் ஒடிசி நடனத்தை மேம்படுத்திலும், பயிற்சியளிப்பதிலும் ஈடுபட்டுள்ளது. [7] [8]

இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற 2015-16 ஆம் ஆண்டிற்கான ஏ.எல்.சி குளோபல் பெலோ ஆவார். [9]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

பைசாலி மொஹந்தி 1994 ஆகத்து 5 ஆம் நாள் ஒடிசாவின் புரியில் புகழ்பெற்ற பெண்ணியவாதி, கவிஞர் மற்றும் எழுத்தாளரான மானசி பிரதான் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் மின் பொறியியலாளரான ராதா பினோத் மொஹந்தி இணையருக்கு மகளாக பிறந்தார். [10]

இவர் புரியில் உள்ள பிளஸ்டு சாக்ரமென்ட் உயர்நிலைப்பள்ளியிலும் , புவனேஸ்வரில் உள்ள கேஐஐடி சர்வதேச பள்ளியிலும் கல்வி பயின்றார். [11] தில்லி லேடி ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியில் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகளில் இளங்கலை பட்டம் பெற்றார். [12]

பின்னர் இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார், அணுசக்தி பண்ணுறவாண்மை குறித்த ஆய்வுக் கட்டுரையை இவர் எழுதினார். [6]

நடன வாழ்க்கை[தொகு]

24 நவம்பர் 2010 அன்று 16 வது சர்வதேச கடற்கரை விழாவில் பைசாலி மொஹந்தி மற்றும் குழுவின் நடனம்

பைசாலி மொஹந்தி ஒடிசி நடனத்தில் புகழ்பெற்றவரான ஒடிசி ஆசானான பத்மசிறீ குரு கங்காதர் பிரதனிடம் அவரது இறப்பு வரை ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலம் பயிற்சி பெற்றார். மற்றொரு பிரபல ஒடிசி ஆசிரியரும் நடன இயக்குனருமான பத்மசிறீ குரு இலியானா சித்தரிஸ்ட்டிடமிருந்து நடன அமைப்பில் மேம்பட்ட பயிற்சியைப் பெற்றார். இவர் ஒடிசி நடனத்தில் விஷரத் பட்டத்தை முதல் தகுதி நிலையில் பெற்றார். [13]

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச மற்றும் தேசிய விழாக்களில் இவரது சொந்த நடன நிறுவனமான "பைசாலி மொஹந்தி மற்றும் ட்ரூப்"பைக் கொண்டு தனி மற்றும் குழு நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். [14] [15]

ஆக்ஸ்போர்டு ஒடிசி மையம்[தொகு]

2015 ஆம் ஆண்டில், இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆக்ஸ்போர்டு ஒடிசி மையத்தை நிறுவி, இந்திய பாரம்பரிய நடனத்தை பல்கலைக்கழகத்தில் பிரபலப்படுத்தினார். [16] [17] [18] ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உறுப்பினர்களுக்காக வழக்கமாக ஒடிசி நடன வகுப்புகளை நடத்துவதோடு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம், இலண்டன் பொருளியல் பள்ளி, இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (யு.சி.எல்), கிங்ஸ் கல்லூரி லண்டன், மான்செஸ்டர் பல்கலைக்கழகம் எடின்பரோ பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிற நிறுவனங்களில் ஒடிசி நடன பட்டறைகளையும் இந்த மையம் நடத்துகிறது. [19] [20]

இவர் ஆக்ஸ்போர்டு ஒடிசி விழாவின் நிறுவனர் ஆவார். இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆக்ஸ்போர்டு ஒடிஸி மையத்தால் நடைபெறும் வருடாந்திர இந்திய பாரம்பரிய நடன விழாவாகும். [21] [22] [23] [24] [25]

விருதுகள்[தொகு]

புது தில்லியின் இண்டியன் ஹபிடட் செண்டரில் 2015 ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்ற நிர்பயா சமரோவில் பைசாலி மொஹந்தி ஒரு விளக்கக் குறிப்புகளை வழங்கினார்

2013 ஆண்டில், சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு புது தில்லியில் நடந்த மகளிர் தின விழாவில் இந்தியாவின் பெண்களுக்கான தேசிய ஆணையம் இவரின் சேவையையும், சாதனைகளையும் பாராட்டியது. [26] அதே ஆண்டில், 2012 தில்லி கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவருக்கு அஞ்சலி செலுத்தி தில்லி பல்கலைக்கழக நடன போட்டியில் இவரது குழு அனைத்து பிரிவுகளிலும் முதல் பரிசை வென்றது. [27]

2017 ஆம் ஆண்டில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கைலாசு சத்தியார்த்தியால் இந்திய பாரம்பரிய நடனத்திற்கு இவர் செய்த பங்களிப்புக்காக மதிப்புமிக்க ஆர்யா விருது வழங்கப்பட்டது. [28] [29]

குறிப்புகள்[தொகு]

  1. "Orissa POST E-Paper". Archived from the original on 5 May 2016. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
  2. https://www.forbes.com/sites/realspin/2016/10/04/has-modis-mantra-of-reform-perform-and-transform-failed-desperately/#50a3cfac73fa
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-19. பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  4. http://thediplomat.com/2016/11/can-the-nuclear-deal-with-japan-get-india-into-the-nuclear-suppliers-group/
  5. "Archived copy". Archived from the original on 23 June 2016. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. 6.0 6.1 "Puri girl Baisali makes it to Oxford Varsity". பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
  7. "Odissi beats to resonate at Oxford University". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-24. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
  9. "Oxford India Society - About". Archived from the original on 26 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Odisha: Odia girl Baisali Mohanty in class of Aung San Suu Kyi, Oriya Success Orbit, Odisha Latest Headlines". Archived from the original on 8 May 2016. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  11. "The Pioneer". பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
  12. "Odisha: Odia girl Baisali Mohanty in class of Aung San Suu Kyi, Oriya Success Orbit, Odisha Latest Headlines". Archived from the original on 8 May 2016. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
  13. "Odisha girl Baisali selected for Master's Degree at Oxford University, Oriya Success Orbit, Odisha Latest Headlines". Archived from the original on 8 May 2016. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
  14. "A Beautiful Fusion of Classical Dances". Telangana Today. https://telanganatoday.com/beautiful-fusion-classical-dances. 
  15. "Archived copy". Archived from the original on 24 April 2016. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  16. http://www.telegraphindia.com/1160504/jsp/odisha/story_83592.jsp
  17. "Archived copy". Archived from the original on 2016-05-06. பார்க்கப்பட்ட நாள் 2016-06-07.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  18. "Archived copy". Archived from the original on 2 June 2016. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  19. http://www.telegraphindia.com/1160113/jsp/odisha/story_63528.jsp
  20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-19. பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  21. "Archived copy". Archived from the original on 15 August 2016. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  22. http://www.dailypioneer.com/state-editions/bhubaneswar/odishi-fest-at-oxford-varsity-from-today.html
  23. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-19. பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  24. http://www.citynewsline.co.uk/news/odissi-festival-to-be-held-at-oxford-university-on-may-27[தொடர்பிழந்த இணைப்பு]
  25. http://www.dailypioneer.com/state-editions/bhubaneswar/odishi-at-oxford-enthrals-foreigners.html
  26. "Odissi Centre to open at Oxford University from 2016". Archived from the original on 12 May 2016. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  27. "Baisali Mohanty wins DU dance competition". பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
  28. "12 women achievers get Arya Award". The Pioneer. http://www.dailypioneer.com/print.php?printFOR=storydetail&story_url_key=12-women-achievers-get-aarya-awards&section_url_key=state-editions. 
  29. "12 women achievers awarded by Kailash Satyarthi". Pragativadi இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107022121/http://pragativadi.com/12-odia-women-achievers-awarded-kalilash-satyarthi/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசாலி_மொஹந்தி&oldid=3565433" இலிருந்து மீள்விக்கப்பட்டது