பி. பரமேஷ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. பரமேஷ்வரன்
பிறப்பு1927
சேர்தலா, கேரளா, இந்தியா
இறப்பு (அகவை 93)
தேசியம்இந்தியா
குடியுரிமைஇந்தியர்
கல்விஇளங்கலை வரலாறு
அறியப்படுவதுஇந்துத்துவா சிந்தனையாளர்
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் பிரசாரகர்
நிறுவன இயக்குநர், கேரளா பாரதிய விசாரா கேந்திரம்
தலைவர், விவேகானந்த கேந்திரம்
இயக்குநர், புதுதில்லி தீனதயாள் ஆராய்ச்சி நிறுவனம்
விருதுகள்பத்ம விபூசண் 2018
பத்ம ஸ்ரீ 2004
வலைத்தளம்
http://vicharakendram.org
2018-இல் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம் பத்ம விபூசண் விருது பெரும் பி. பரமேஷ்வரன்

பி. பரமேஷ்வரன் (P. Parameswaran; 1927 – 9 பிப்ரவரி 2020), கேரளா மாநிலம், ஆலப்புழை மாவட்டம், சேர்தலா வட்டம், முகம்மா கிராமத்தில 1927-ஆம் ஆண்டில் பிறந்த பி. பரமேஷ்வரன், சங்கனாச்சேரி, எஸ்.பி. கல்லூரியிலும், பின்னா் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பயின்றவர். 1951-ஆம் ஆண்டில் கல்லூரிக் காலத்தின் போதே, ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தில் இன்ணைந்து பணியாற்றினார். பின்னா் ஆா்.எஸ்.எஸ். அமைப்பில் முழு நேர பிரசாரகராக பணியாற்றி வந்தாா்.

பின்னர் இவர் பாரதியஜன சங்கத்தின் செயலாளராகவும் (1967-1971), துணைத் தலைவராகவும் (1971-1977)[1], புதுதில்லியில் உள்ள தீன்தயாள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (1977-1982) இயக்குநராகவும் இருந்துள்ளார். மிசா காலங்களில் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் கேரளா மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் கேரள மக்களிடையே தேசியவாத எண்ணங்களை வளர்ப்பதற்காக 1982 ஆம் ஆண்டில் கேரளா பாரதிய விசாரா கேந்திரம் என்ற அமைப்பை நிறுவினார். இவர் விவேகானந்த கேந்திரத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர்.

பெற்ற விருதுகள்[தொகு]

மறைவு[தொகு]

இவர் தமது 93 வயதில் உடல்நலக் குறைவால் 9 பிப்ரவரி 2020-இல் மறைந்தார். [3] [4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hindu nationalist wave sweeping Kerala: P Parameswaran". OnManorama.
  2. "Government announces recipients of 2018 Padma awards". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 January 2018. பார்க்கப்பட்ட நாள் 26 January 2018.
  3. [https:://www.dinamani.com/latest-news/2020/feb/09/veteran-rss-pracharak-p-parameswaran-passes-away-3353286.html ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரன் காலமானார்]
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. "Vice President Venkaiah Naidu, PM Modi condole death of RSS veteran P Parameswaran". 9 February 2020.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._பரமேஷ்வரன்&oldid=3771565" இலிருந்து மீள்விக்கப்பட்டது