பாசுகலைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1652 ஆம் ஆண்டில், பிரான்சு நாட்டைச் சேர்ந்த பிலேசு பாசுகல் எனும் அறிஞர், பற்கள் கொண்ட தட்டுருளிகளை பயன்படுத்தி கூட்டல், கழித்தல் ஆகிய கணக்குச் செயல்களை செய்திடும் பாசுகலைன் எனும் கருவி ஒன்றை வடிவமைத்தார். 200 பொமுவில் உருவாக்கப்பட ஆன்டிகைதேரா கருவியானது விசைமுறை வாயிலாக சில கணக்குகள் செய்யவல்லக் கருவியாக இருந்தாலும், பொதுமுறைக் கணக்குகளான கூட்டல் கழித்தல் ஆகியவற்றை செய்யவல்லதக பாசுகலைன் இருந்ததால் இது ஞாலத்தின் முதல் விசைமுறைக் கணக்கிடும் கருவியாக கருதப்படுகிறது. அதுபோல 1621 ஆம் ஆண்டு வில்ஃகெம் இசுகிகார்ட் எனும் செர்மானியர் உருவாக்கியிருந்த அரத்தமேட்டிக்கம் ஓர்கானம் எனும் கருவியானது ஒரு எண்ணும் கருவியாக மட்டுமே இருந்தது. பிரான்சு நாட்டின் பெரும் செல்வந்தரான பிலேசின் தந்தையான எடியெனெ பாசுகல், ஒரு வழக்கறிஞராகவும் வரிவசூலிக்கும் அதிகாரியாகவும் இருந்தார். தன் தந்தை பேற்கொள்ளும் கணக்குகளுக்கு உதவியாக பிலேசு பாசுகல், இந்த பாசுகலைன் கணக்கிடும் கருவியை அவரது பதினெட்டாவது அகவையில் உருவாக்கினார். கூட்டப்படத் தேவையான எண்களை பாசுகலைனின் முகப்பிலுள்ள 5 முதல் 8 தட்டுறுளிகளை, அவைகளின் விளிம்பில் பொறிக்கப்பட்டுள்ள 0-9 எண்களை சுழற்றி உள்ளீடு அளிக்கலாம். பாசுகலைனின் எளிய வடிவமைப்பை பின்பற்றி கால்குமீட்டர், அடியேட்டர், கோல்டன் செம் ஆடிங் மெசின், லைட்னிங் ஆடிங் மெசின் போன்ற பல கூட்டல்-கழித்தல் கருவிகள் தயாரிக்கப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுகலைன்&oldid=3585741" இலிருந்து மீள்விக்கப்பட்டது