சசிகலா தானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விதூசி சசிகலா தானி
பிறப்பு11 நவம்பர் 1959 (1959-11-11) (அகவை 64)
கலகட்டகி
பணிமைசூர் ஸ்டேட் வங்கி, ஜலதரங்கம் கருவியிசைக் கலைஞர்

சசிகலா தானி (Shashikala Dani) இவர் இந்துஸ்தானி இசையில் ஜலதரங்கக் கலைஞர் ஆவார். இவர் ஜலதரங்கம் வாசிக்கும் ஒரு சில இசைக்கலைஞர்களில் ஒருவராக உள்ளார். ஜலதரங்கத்திற்காக அகில இந்திய வானொலியில் தற்போது தரப்படுத்தப்பட்ட ஒரே பெண் நிபுணர் ஆவார். ஜலதரங்கம், ஆர்மோனியம், சித்தார், வயலின், தில்ருபா மற்றும் கைம்முரசு இணை ஆகிய கருவிகளை கச்சேரியில் வாசிப்பது மற்றும் கற்பித்தல் அனுபவமுள்ள பல கருவி கலைஞர் ஆவார். அகில இந்திய வானொலியில் இந்துஸ்தானி மெல்லிசையில் கமகம் வகைக்காக தரப்படுத்தப்பட்ட பாடகர் ஆவார்.

சுயசரிதை[தொகு]

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட் மாவட்டத்தில் உள்ள காலாகாதகி என்ற நகரத்தில் ருக்மிணி மற்றும் தோண்டிபா வாரங் ஆகியோருக்கு சசிகலா பிறந்தார். ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், தனது தந்தை, பண்டிட் டி.ஆர் வாரங்கிடமிருந்து தனது 10 வயதில் இசையினைக் கற்கத் தொடங்கினார். இவருக்கு பல உத்திகள் மற்றும் இந்துஸ்தானி பாரம்பரிய இசை பாடுவது உட்பட ஆர்மோனியம், சித்தார், கைம்முரசு இணை, வயலின், புல்லாங்குழல், தில்ருபா மற்றும் ஜலதரங்கம் போன்ற உபகரணங்களில் பயிற்சி பெற அதிர்ஷ்டம் இருந்தது. இவர் தனது 17 வயதில் தனது முதல் பொது நிகழ்ச்சியை வழங்கினார்.

சசிகலா கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஹூப்ளியில் குடியேறினார். அங்கு இவர் டி. எஸ். ஆர் விருது பெற்றவரும், பத்திரிகையாளருமான லெப்டினன்ட் சிறீ சுரேந்திர தானியின் மகன் சிறீ அருண் தானியை மணந்தார். [1] இவர்களுக்கு சுக்னன் தானி என்ற ஒரு மகன் இருக்கிறார். இவரும் ஒரு இசைக்கலைஞர் ஆவார். மைசூர் ஸ்டேட் வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், இவர் இப்போது ஒரு குறிப்பிடத்தக்க ஜலதரங்கக் கலைஞராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இந்த தனித்துவமான கருவியைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் கடுமையாக பாடுபடுகிறார்.

இசை வாழ்க்கை[தொகு]

குறிப்பாக ஜலதரங்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், இந்த கருவியை மையமாகக் கொண்டு தனது பாரம்பரிய இசை வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் வளர்க்கவும் முடிவு செய்தார். ஜலதரங்கத்தில் அதிக பரிசோதனைகளுக்குப் பிறகு, சசிகலா தனது இசைக்கும் பாணியில் "கயாகி மற்றும் தந்திரகாரி ஆங்ஸ்" [2] ஆகிய இரண்டையும் ஊக்குவித்துள்ளார். இந்துஸ்தானி இசையின் குவாலியர் கரானா பள்ளியில் பயிற்சி பெற்ற இவர், பல ஆண்டுகளாக பல பாணிகளையும் உருவாக்கியுள்ளார். அவரது சிறப்பு "லயகாரி" என்பதாகும். இவர் தற்போது தனது நிறுவனமான சுவர நாத சங்கீத வித்யாலயாவில் இளம் மற்றும் ஆர்வமுள்ள இசை திறமைகளை வழிநடத்துவதில் ஈடுபட்டுள்ளார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]

2020இல் கர்நாடக சங்கீத [http://karnatakasangeetanrityaacademy.com/ நிருத்ய அகாதமியின் "கர்நாடக கலாச்சிரி" என்ற விருது - வழங்கப்பட்டது. [3] [4] [5] [6]
2018இல் இந்துஸ்தானி மெல்லிசையில் கமகத்திற்க்கான அகில இந்திய வானொலியின் பிரசார் பாரதி வழங்கிய "பி தரக் கலைஞர்" என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2016இல் வீர ராணி கிட்டூர் சென்னம்மா விருது பெற்றுள்ளர்.
2002இல் ஜலதரங்கத்திற்க்காக அகில இந்திய வானொலியின் பிரசார் பாரதி வழங்கிய "பி தரக் கலைஞர்" என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2009இல் பத்மவிபூசண் முனைவர் கங்குபாய் ஹங்கல் வழங்கிய "கயானா கங்" என்ற வாழ்நாள் சாதனை விருது இவருக்கு வழங்கப்பட்டது. [7]
1991இல் சென்னையில் தேசிய வங்கிகளுக்கிடையே நடைப்பெற்ற முதல் இசை போட்டியில் வெற்றி பெற்றார்.
கர்நாடக சங்கீத நிருத்யா அகாதமியின்] புலமைப்பரிசிலுக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.(1982 மற்றும் 1985) [8]

குறிப்புகள்[தொகு]

  1. "Surendra Dani bags prestigious TSR award". www.oneindia.com. 2006-12-20. பார்க்கப்பட்ட நாள் 2017-02-04.
  2. "Indian Music Glossary". culturalindia.net. பார்க்கப்பட்ட நாள் 28 October 2019.
  3. "ಕರ್ನಾಟಕ ಕಲಾಶ್ರೀ ಪ್ರಶಸ್ತಿ ಪ್ರಕಟ". ವಿಜಯವಾಣಿ - ದಿನಪತ್ರಿಕೆ.
  4. "18 ಮಂದಿಗೆ ಕರ್ನಾಟಕ ಕಲಾಶ್ರೀ ಪ್ರಶಸ್ತಿ". ವಿಜಯ ಕರ್ನಾಟಕ - ದಿನಪತ್ರಿಕೆ.
  5. "18 ಸಾಧಕರಿಗೆ ಸಂಗೀತ ನೃತ್ಯ ಅಕಾಡೆಮಿ ಪ್ರಶಸ್ತಿ". ಸಂಯುಕ್ತ ಕರ್ನಾಟಕ - ದಿನಪತ್ರಿಕೆ.
  6. "ಸಂಗೀತ ನೃತ್ಯ ಅಕಾಡೆಮಿ ಪ್ರಶಸ್ತಿ ಪ್ರಕಟ". ಕನ್ನಡಪ್ರಭ - ದಿನಪತ್ರಿಕೆ.
  7. "Gangubai to honour musicians". 3 March 2009. http://timesofindia.indiatimes.com/city/hubballi/Gangubai-to-honour-musicians/articleshow/4220101.cms. 
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-20. பார்க்கப்பட்ட நாள் 2020-02-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிகலா_தானி&oldid=3583758" இலிருந்து மீள்விக்கப்பட்டது