தட்டக்கல் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தட்டக்கல் கோட்டை (Thattakal Fort) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோட்டையாகும். இது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காவேரிப்பட்டணம்-காக்காக்கரை நெடுஞ்சாலைக்கு 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் ஒன்றாகும். இம்மலைக்கோட்டை 2629 அடி உயரமுடையது. இம்மலைக்கோட்டை பாராமகால் கோட்டைகளிலையே சிறந்த வேலைப்பாடு மிக்கது. மலையின் உச்சியில் கோட்டை அரண்களும், இடிபாடுகளுடைய பல கட்டடங்களும், சுனைகளும், சிறிய கோயிலும், பாறையில் செதுக்கப்பட்ட பெரிய அனுமார் சிலையும் காணப்படுகின்றன. மலையைச் சுற்றி ஏராளமான நடுகற்கள் காணப்படுகின்றன [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 307
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டக்கல்_கோட்டை&oldid=3483237" இலிருந்து மீள்விக்கப்பட்டது