செராய் கடற்கரை

ஆள்கூறுகள்: 10°08′32″N 76°10′42″E / 10.14227°N 76.178255°E / 10.14227; 76.178255
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செராய் கடற்கரை
சேராய் கடற்கரையில் சூரிய உதயம்
சேராய் கடற்கரையில் சூரிய உதயம்
செராய் கடற்கரை is located in கேரளம்
செராய் கடற்கரை
செராய் கடற்கரை
கேரளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°08′32″N 76°10′42″E / 10.14227°N 76.178255°E / 10.14227; 76.178255
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
பெயர்ச்சூட்டுசெராய், வைபின்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அருகில் உள்ள நகரம்கொச்சி

செராய் கடற்கரை (Cherai Beach) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில் கொச்சி நகரத்தின் புறநகர்ப் பகுதியான வைப்பீன் தீவின் வடக்குப் பகுதியில் உள்ள செராயில் அமைந்துள்ள ஒரு கடற்கரை ஆகும். மாநிலத்தில் அதிகம் பயணிகள் வரும் கடற்கரைகளில் ஒன்றான இது   கொச்சி நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ (15 மைல்) தொலைவிலும்,   கொச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ (12 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது .[1]

சுற்றுலா[தொகு]

இந்த கடற்கரை சுமார் 10 கி.மீ நீளம் கொண்டது. இதில் அலைகள் பெரும்பாலும் குறைவாகவும், அலைகள் மென்மையாகவும் இருப்பதால் நீச்சலுக்கு ஏற்றது. இங்கு அடிக்கடி ஓங்கிலை பார்க்க இயலும். உப்பங்கழிகளையும் கடலையும் ஒரே சட்டகத்தில் காணக்கூடிய சில இடங்களில் இதுவும் ஒன்றாகும்.[2] செராய் கடற்கரை கொச்சியிலிருந்து அணுகக்கூடியதாகவும் பரபரப்பற்ற, தூய்மையான கடற்கரையை விரும்புபவர்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது, மேலும் இது பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளை எப்போதும் ஈர்க்கிறது.

சேராய் கடற்கரையின் படங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Cherai Beach, Kochi". Kerala Tourism Development Corporation. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
  2. "Kerala's best beaches for sun, sand and sea". Condé Nast Traveler. Archived from the original on 1 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செராய்_கடற்கரை&oldid=3930252" இலிருந்து மீள்விக்கப்பட்டது