பரனூர் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°43′51″N 79°59′2″E / 12.73083°N 79.98389°E / 12.73083; 79.98389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரனூர்
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
பரனூர் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தேசிய நெடுஞ்சாலை - 45, பரனூர், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்12°43′51″N 79°59′2″E / 12.73083°N 79.98389°E / 12.73083; 79.98389
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுPWU
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்1965[1]
முந்தைய பெயர்கள்தென்னிந்திய இரயில்வே
அமைவிடம்
பரனூர் is located in தமிழ் நாடு
பரனூர்
பரனூர்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
பரனூர் is located in இந்தியா
பரனூர்
பரனூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

பரனூர் தொடருந்து நிலையம் (Paranur Koil railway station, நிலையக் குறியீடு:PWU) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை புறநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொடருந்து நிலையம் ஆகும்.

இது சென்னையின் புறநகர்ப் பகுதியான பரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரை சந்திப்பிலிருந்து 55 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் காட்டாங்குளத்தூரில் தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 42மீ உயரத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1]

நிலையம்[தொகு]

மகேந்திரா உலக நகரம் இந்த நிலையத்தை 15 மில்லியன் செலவில் உருவாக்கியது. இது நிலையத்தையும் பராமரிக்கிறது. இந்த திட்டத்தில் பயணச்சீட்டு கொடுக்கும் இடம், காத்திருப்பு அறை மற்றும் கழிப்பறைகள், நீரூற்றுகள், நடைமேடைகள், மேம்பாலங்கள் மற்றும் நிலையத்தைச் சுற்றியுள்ள தடங்கள் ஆகியவற்றை பராமரித்தல் மற்றும் முக்கிய கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.[2]

போக்குவரத்து[தொகு]

இந்த நிலையம் ஒவ்வொரு நாளும் சுமார் 20,000 பயணிகளை கையாளுகிறது. மகேந்திரா உலக நகரப் பணியாளர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.[2]

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. 2.0 2.1 Frederick, Prince (15 July 2012). "On the right track". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/features/metroplus/on-the-right-track/article3639754.ece. பார்த்த நாள்: 25 Aug 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]