ஹெய்டி ஹார்ட்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹெய்டி ஐ. ஹார்ட்மேன் (Heidi I. Hartmann) ஒரு பெண்ணிய பொருளாதார நிபுணர் ஆவார். இவர் வாஷிங்டனை தளமாகக் கொண்ட மகளிர் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார், இது பெண்களை மையமாகக் கொண்ட, பொது கொள்கை ஆராய்ச்சியை நடத்த உருவாக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி அமைப்பாகும். இவர் பெண்கள் நலன், பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக உள்ளார். டாக்டர் ஹார்ட்மேன் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பேராசிரியராகவும் , பெண்கள், அரசியல் மற்றும் கொள்கை இதழின் ஆசிரியராகவும் உள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1945 ஆகஸ்ட் 14, அன்று நியூ ஜெர்சியின் எலிசபெத்தில் ஹென்றி ஹார்ட்மேன் மற்றும் ஹெட்விக் (பெர்ச்சர்) ஹார்ட்மேன் ஆகியோருக்கு ஹெய்டி ஹார்ட்மேன் பிறந்தார். இவர் சுவர்த்மோர் கல்லூரியில் பயின்றார், அங்கு இவர் 1967 இல் கௌரவங்களுடன் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். அதே ஆண்டில், இவர் ஃபிராங்க் பிளேர் கோக்ரான் என்பவரை மணந்தார். ஜெசிகா லீ என்ற குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர் ஒரு வருடம் கழித்து கோக்ரானை விவாகரத்து செய்தார். ஹெய்டி ஹார்ட்மேன் பின்னர் யேல் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1972 இல் அங்கு இவர் பொருளாதாரத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார். மற்றும் 1974 இல் இந்த பாடப்பிரிவில் முனைவர் பட்டமும் பெற்றார். 1979 ஆம் ஆண்டில், இவர் ஜான் வாரிக் வெல்ஸ் என்பவரை மணந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். அவர்கள் முறையே கேத்ரின் லினா ஹார்ட்மேன் வெல்ஸ் மற்றும் லாரா கேமரூன் ஹார்ட்மேன் வெல்ஸ் ஆவர். [1]

தொழில்[தொகு]

1969 முதல் 1972 வரை கனெக்டிகட்டின் நியூ ஹேவனின் நகர திட்டமிடல் துறையின் கணினி நிரலாளர் மற்றும் ஆராய்ச்சியாளராக ஹார்ட்மேன் 1969 இல் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், இவர் ஒரு வருடம் யேல் பல்கலைக்கழகத்தில் நடிப்பு பயிற்றுவிப்பாளராக இருந்தார். பின்னர். இவர் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு 1974 முதல் 1976 வரை சமூக ஆராய்ச்சிக்கான புதிய பள்ளியில் பொருளாதாரத்தின் வருகை உதவி பேராசிரியராக இருந்தார். ஹார்ட்மேன் தனது திறமைகளை வெளிப்படுத்த வாசிங்டன் டி. சி. க்கு சென்றார். அங்கு இவர் அமெரிக்க சிவில் உரிமைகள் ஆணையத்தின் ஆராய்ச்சி அலுவலகத்தில் மூத்த ஆராய்ச்சி பொருளாதார நிபுணராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் எட்டு ஆண்டுகள் தேசிய அறிவியல் / தேசிய அகாதமியின் பணியாளராக பணியாற்றினார். ஆராய்ச்சி அமைப்பின் கீழே உள்ள 'பப்ளிகேஷன்ஸ்' பிரிவில் பட்டியலிடப்பட்ட பல அறிக்கைகளில் இவர் பணியாற்றினார். ஹார்ட்மேன் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தில் ஒரு அமெரிக்க புள்ளிவிவர சங்க கூட்டுறவு பெண்கள் கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார். [2] பெண்கள், அரசியல் மற்றும் கொள்கை இதழின் ஆசிரியராகவும் உள்ளார். [3]

பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு[தொகு]

பொருளாதாரத்தில் பெண்களின் பகுதி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று ஹார்ட்மேன் நம்புகிறார்: அவை, ஊதியம் மற்றும் குடும்ப பராமரிப்புக்கான வேலை என்பதாகும். பெண்கள் அதிகளவில் வீட்டை விட்டு வெளியேறி வெளியுலகிற்கு வருகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் வீட்டிலுள்ள பெரும்பாலான பணிச்சுமையை இன்னும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு சமத்துவத்தை அடைவதற்கு, தொழிலாளர் சந்தையில் சமூகம் வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபாலரும் தங்கள் வேலை மற்றும் வீட்டு பராமரிப்பை சமமாக நிர்வகிக்கக்கூடியதாக மாற்ற வேண்டும் என்றும் ஹார்ட்மேன் வாதிடுகிறார். [4]

வேலைவாய்ப்பு[தொகு]

கடந்த ஐந்து தசாப்தங்களாக பெண்களின் வேலைவாய்ப்பு முன்னேற்றம் கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஹார்ட்மேன் வாதிடுகிறார். பெண்கள் தொழில் ரீதியாக நுழைந்துள்ளனர். அவை வரலாற்று ரீதியாக அவர்களுக்கு மூடப்பட்டுள்ளன, மேலும் அவர்களின் குடும்ப வருமானத்திற்கும் பொருளாதாரத்திற்கும் முன்பை விட அதிகமாக பங்களிக்க முடிகிறது. மகளிர் கொள்கை ஆராய்ச்சியின் 2014 அறிக்கையின்படி, [2] கடந்த ஏழு ஆண்டுகளில் பெண்களின் தொழில்களுக்கான வளர்ச்சி தொழில்முறை மற்றும் வணிக சேவைகளில் வலுவானது (42,000 வேலைகள் பெண்களால் பெறப்பட்டன). இவற்றையெல்லாம் மீறி, பெண்களின் வேலைவாய்ப்பு என்பது, இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்று ஹார்ட்மேன் நினைக்கிறார். ஏனெனில், சமூகப் பாதுகாப்பு மற்றும் ஊதிய இடைவெளி / பாகுபாடு ஆகியவற்றைக் காணும்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணரலாம் என்பது இவரின் கருத்தாகிறது.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்[தொகு]

ஹார்ட்மேன் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். 1994 ஆம் ஆண்டில், இவர் மேக் ஆர்தர் பெல்லோஷிப் விருதை வென்றார். மேக் ஆர்தர் அறக்கட்டளையின் ஐந்தாண்டு மானியம், பெண்கள் மற்றும் பொருளாதாரம் குறித்த இவரது பணிக்காக வழங்கப்பட்டது. மேலும், இந்நிறுவனம், அவர்களின் ஆராய்ச்சிக்காகவும், எதிர்காலத்தில் மேலும் பலவற்றிற்கான வாய்ப்பிற்காகவும் விதிவிலக்கான படைப்பாற்றலைக் காட்டும் நபர்களுக்கு அளிக்கிறது. ஹார்ட்மேன், இந்த இரண்டு கௌரவ பட்டங்களையும் பெற்றுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

  1. Cicarelli, James, and Julianne Cicarelli. Distinguished Women Economists. Westport, CT: Greenwood, 2003. Print.
  2. 2.0 2.1 "Home".
  3. "Journal of Women, Politics & Policy - Editorial board". Taylor and Francis. பார்க்கப்பட்ட நாள் June 3, 2014.
  4. Hartmann, Heidi. "A Feminist Work and Family Agenda". Institute for Women's Policy Research. 2007. Print.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெய்டி_ஹார்ட்மேன்&oldid=2903695" இலிருந்து மீள்விக்கப்பட்டது