குழந்தை திடீர் இறப்பு நோயறிகுறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழந்தை திடீர் இறப்பு நோயறிகுறி
Sudden infant death syndrome
ஒத்தசொற்கள்திடீர் சிசு மரணம், கட்டில் சாவு
Safe to Sleep logo
சிறப்புகுழந்தை நோயியல்
அறிகுறிகள்ஒரு வருடத்திற்குள் இறப்பு[1]
வழமையான தொடக்கம்திடீர்[1]
காரணங்கள்அறியப்படவில்லை[1]
சூழிடர் காரணிகள்தூங்கும் நிலை, அதிக வெப்பம் மற்றும் புகையிலை புகையில் வெளிப்படுதல்[2][3]
நோயறிதல்பிணக்கூறு ஆய்வு, மரண விசாரணை [4]
ஒத்த நிலைமைகள்நோய்த்தொற்றுs, மரபணுப் பிறழ்ச்சிகள், இதயநோய், குழந்தை வன்கொடுமை [2]
தடுப்புமல்லாந்து உறங்க வைத்தல், தாய்ப்பாலூட்டல், நோய்த்தடுப்பு
சிகிச்சைகுடும்ப உதவி[2]
நிகழும் வீதம்1,000–10,000 இல் ஒரு குழந்தை[2]

குழந்தை திடீர் இறப்பு நோயறிகுறி (Sudden infant death syndrome) என்பது திடீரென எந்த ஒரு காரணமும் இன்றிக் குழந்தை இறந்து போதலைக் குறிக்கிறது. திடீர் சிசு மரணம், கட்டில் சாவு, திடீர் சாவு எனப் பலவாறான பெயர்களாலும் இந்நோய் அழைக்கப்படுகிறது. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகள் உடல் நலனில் என்ன குறை என்று விளக்க முடியாதபடி திடீரென இறந்து போகிறார்கள்.[1]. முழுமையான பிரேத பரிசோதனையும், விரிவான மரணம் குறித்த விசாரணைக்குப் பின்னரும் தூக்கத்திலேயே குழந்தை இறந்ததற்கான உண்மைக் காரணம் விளக்க முடியாமல், ஆய்வுக்குட்பட்ட நிலையிலேயே இருக்கிறது[4]. திடீர் சிசு மரணம் குழந்தையின் தூக்கத்திலேயே நிகழ்ந்து விடுகிறது [2]. பொதுவாக குழந்தையின் மரணம் 00:00 மணி முதல் 09:00 மணி வரையிலான காலப்பகுதியில் நிகழ்கிறது [5]. பொதுவாக இவ்வகை மரணத்தின்போது மூச்சுத்திணறல் சத்தமோ அல்லது போராட்டத்திற்கான வேறு சான்றுகளோ ஏதுமிருப்பதில்லை [6].

குழந்தைகளின் இத்தகைய திடீர் மரணங்களுக்கான காரணம் தெளிவாக அறியப்படவில்லை [3]. குறிப்பிட்ட அடிப்படை பாதிப்பு, வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நேரம், சுற்றுச்சூழல் அழுத்தம் உள்ளிட்ட இணைப்புக் காரணிகள் போன்ற காரணங்கள் இத்திடீர் மரணங்களுக்கான காரணமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன [2][3]. தூங்கும் நிலை, அதிக வெப்பம் மற்றும் புகையிலை புகையில் வெளிப்படுதல் ஆகியவை சுற்றுச்சூழல் காரணிகளில் அடங்கும் [3]. இணை-தூக்கம் எனப்படும் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் மூச்சுத்திணறல் அல்லது மென்மையான பொருள்களிலினால் தற்செயலாக தோன்றும் மூச்சுத் திணறல் கூட இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம் [2][7][8] 39 வார கர்ப்பத்திற்கு முன்பே குழந்தை பிரசவிக்கப்படுவது மற்றொரு ஆபத்து காரணியாகும் [8]. சிசுக்களில் ஏற்படும் இவ்வகையான தீடீர் மரணம் 80 சதவீதமாகும் [2]. எஞ்சியிருக்கும் 20 சதவீத சிசுமரணங்கள் நோய் தொற்றுகள், மரபியல் கோளாறுகள், இதய நோய் பிரச்சினைகள் போன்றவை காரணமாகின்றன [2]. வேண்டுமென்றே மூச்சுத் திணறல் ஏற்படுத்தி குழந்தையை கொல்வதையும் இவ்வகையான திடீர் மரணம் தவறாகக் கண்டறியப்படலாம். 5 சதவீத்த்திற்கும் குறைவான ,மரணங்கள் இத்தகைய நிகழ்வுகளாக இருக்கும் என்று நம்பப்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Sudden Infant Death Syndrome (SIDS): Overview". National Institute of Child Health and Human Development. 27 June 2013. Archived from the original on 23 February 2015. பார்க்கப்பட்ட நாள் 9 March 2015.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 "The sudden infant death syndrome". The New England Journal of Medicine 361 (8): 795–805. August 2009. doi:10.1056/NEJMra0803836. பப்மெட்:19692691. 
  3. 3.0 3.1 3.2 3.3 "What causes SIDS?". National Institute of Child Health and Human Development. 12 April 2013. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 9 March 2015.
  4. 4.0 4.1 "Centers for Disease Control and Prevention, Sudden Infant Death". Archived from the original on March 18, 2013. பார்க்கப்பட்ட நாள் March 13, 2013.
  5. Optiz, Enid Gilbert-Barness, Diane E. Spicer, Thora S. Steffensen; foreword by John M. (2013). Handbook of pediatric autopsy pathology (Second ). New York, NY: Springer New York. பக். 654. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781461467113. https://books.google.com/books?id=yaPjAAAAQBAJ&pg=PA654. 
  6. Scheimberg, edited by Marta C. Cohen, Irene (2014). The Pediatric and perinatal autopsy manual. பக். 319. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781107646070. https://books.google.com/books?id=t33sAwAAQBAJ&pg=PA319. 
  7. "Ways To Reduce the Risk of SIDS and Other Sleep-Related Causes of Infant Death". NICHD. 20 January 2016. Archived from the original on 7 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2 March 2016.
  8. 8.0 8.1 "How many infants die from SIDS or are at risk for SIDS?". National Institute of Child Health and Human Development. 19 November 2013. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 9 March 2015.