மைக்கேல் ஒண்டாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கேல் ஒண்டாச்சி
Michael Ondaatje
துலான் பல்கலைக்கழகத்தில் ஒண்டாச்சி உரையாற்றுகிறார், 2010
துலான் பல்கலைக்கழகத்தில் ஒண்டாச்சி உரையாற்றுகிறார், 2010
பிறப்புபிலிப் மைக்கேல் ஒண்டாச்சி
12 செப்டம்பர் 1943 (1943-09-12) (அகவை 80)
கொழும்பு, இலங்கை
தொழில்நூலாசிரியர்
மொழிஆங்கிலம்
கல்வி நிலையம்ரொறன்ரோ பல்கலைக்கழகம்
குயீன்சு பல்கலைக்கழகம்
பிசொப் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி இங்கிலீசு பேசன்ட்
குறிப்பிடத்தக்க விருதுகள்ஆளுநர் விருது - கவிதை
மான் புக்கர் பரிசு
கில்லர் பரிசு
செயின்ட் லூயி இலக்கிய விருது
துணைவர்லின்டா இசுப்பால்டிங்
இணையதளம்
www.facebook.com/MichaelOndaatje/

பிலிப் மைக்கேல் ஒண்டாச்சி (Philip Michael Ondaatje, பிறப்பு: 12 செப்டம்பர் 1943) என்பவர் இலங்கையில் பிறந்த கனடிய கவிஞர், புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர், நாவலாசிரியர், பதிப்பாசிரியர்  மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.[1] கில்லர் பரிசு, கவர்னர் ஜெனரல் விருது, புக்கர் பரிசு மற்றும் பிரிக்ஸ் மெடிஸ் எட்ரேஞ்சர் போன்ற பல இலக்கிய விருதுகளைப் பெற்றவர்.[2] ஓர்டர் ஒப் கனடா அதிகாரியாகவும் உள்ளார். மேலும் கனடாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.[2][3]

ஒன்டாட்சேயின் இலக்கிய வாழ்க்கை 1967 ஆம் ஆண்டில் தி டெய்ன்டி மான்ஸ்டர்ஸில் வெளியிடப்பட்ட கவிதையின் மூலம் ஆரம்பமாகியது. பின்னர் 1970 ஆம் ஆண்டில் தி கலெக்டட் வொர்க்ஸ் ஆப் பில்லி தி கிட் என்ற அவரது படைப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.[2] தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றிகரமான தி இங்லீஷ் பேஷண்ட் (1992) என்ற புதினத்திற்காக  2018 ஆம் ஆண்டில் கோல்டன் மேன் புக்கர் பரிசை வென்றார். [4]1996 ஆம் ஆண்டில் இந்த புதினத்தை தழுவி  திரைப்படம் எடுக்கப்பட்டது. [2]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

ஒன்டாட்சே இலங்கையில் கொழும்பில் பிறந்தார். இவர் டச்சு மற்றும் சிங்கள வம்சாவளியை சேர்ந்தவர்.[5][6]இவர் குழந்தையாக இருக்கும் போது அவரது பெற்றோர் பிரிந்தனர். 1954 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தனது தாயுடன் சேரும் வரை உறவினர்களுடன் வாழ்ந்தார். [5]இங்கிலாந்திற்கு செல்லும் முன் கொழும்பு மவுண்ட் லெவனியாவில் உள்ள எஸ். தோமஸ் கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் இங்கிலாந்தில் இடை நிலைக் கல்வியை துல்விச் கல்லூரியில் பயின்றார். 1962 இல் கியூபெக்கிலுள்ள மாண்ட்ரீலுக்கு குடிபெயர்ந்தார். [7]கனடாவிற்கு குடிபெயர்ந்த பின்னர் கியூபெக் லெனாக்ஸ்வில்லில் உள்ள பிஷப் பல்கலைகழகத்தில் மூன்று ஆண்டுகள் படித்தார்[5][7] இறுதி ஆண்டை டொரண்டோ பல்கலைகழகத்தில் பயின்றார். 1965 ஆம் ஆண்டு டொரண்டோ பல்கலைகழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[5] 1967 ஆம் ஆண்டில் ஒன்ராறியோ கிங்ஸடன் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில்  முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.[2]

ஒன்டாசே படிப்பை நிறைவு செய்த பின் லண்டனில் உள்ள மேற்கு ஒன்ராறியோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பித்தார்.[7] 1971 ஆம் ஆண்டில் மேற்கு ஒன்ராறியோவில் இருந்து விலகி யார்க் பல்கலைக்கழகத்தின் க்ளென்டன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்பித்தார்.[2][7]

பணி[தொகு]

ஒன்டாட்சேயின் படைப்புகளில் புனைகதை, சுயசரிதை, கவிதை மற்றும் திரைப்படம் என்பன அடங்கும். இவர் 13 கவிதை புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.  தி கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் பில்லி தி கிட் , தேர் இஸ் எ ட்ரிக் வித் அ நைப் ஆகிய படைப்புகளுக்காக கவர்னர் ஜெனரல் விருதையும், 2000 ஆம் ஆண்டு அனில்ஸ் கோஸ்ட் என்ற படைப்புக்காக கில்லர் பரிசு, பிரிக்ஸ் மெடிசிஸ், கிரியாமா பசிபிக் ரிம் புத்தக பரிசு என்பவற்றை வென்றார். ஐரிஷ் டைம்ஸ் சர்வதேச புனைகதை பரிசு மற்றும் கனடாவின் கவர்னர் ஜெனரல் விருதையும் வென்றார். இவரின் இங்கிலிஷ் பேஷண்ட் (1992)என்ற புதினம் புக்கர் பரிசு, கனடா ஆஸ்திரேலியா பரிசு, கவர்னர் ஜெனரல் விருது ஆகியவற்றை பெற்றுக் கொண்டார். மேலும் இந்த புதினம் திரைப்படமாக மாற்றப்பட்டதுடன் சிறந்த திரைப்படத்திற்கான அகாடமி விருதையும், பல பிற விருதுகளையும் வென்றது.[8]1987 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட டொரொண்டோவில் ஆரம்பகாலத்தில் குடியேறியவர்களைப் பற்றிய புதினமாகிய இன் ஸ்கின் ஒப் அ லயன் 1988 ஆம் ஆண்டின் சிட்டி ஆப் டொரண்டோ புத்தக விருதை வென்றது.

1976 ஆம் ஆண்டு கம்மிங் த்ரூ ஸ்லாட்டர் என்ற புதினம் புக்ஸ் இன் கனடா பெர்ஸ்ட் நவல் விருதை வென்றது. இலங்கையில்  அவரது குழந்தைப்பருவத்தின்  அரை கற்பனையான நினைவுக் குறிப்புகளை ரன்னிங் இன் தி பேமிலி என்ற புத்தகமாக வெளியிட்டார். ஒன்டாசேயின்  டிவிசாடெரோ புதினம் 2007 ஆம் ஆண்டின் கவர்னர் ஜெனரல் விருதை வென்றது. மேலும் 2011 ஆம் ஆண்டில் இந்த புதினத்தை நாடகத்தை உருவாக்க டேனியல் ப்ரூக்ஸுடன் இணைந்து பணியாற்றினார்.[9] இவரின் வோர் லைட் என்ற புதினம் 2018 ஆம் ஆண்டின் மேன் புக்கர் பரிசுக்கு பட்டியலிடப்பட்டது.[10]

மரியாதைகள்[தொகு]

1988 ஆம் ஆண்டு சூலை 18 இல் ஆர்டர் ஒப் கனடாவின் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவால் இலங்கை ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை சிலந்திக்கு பிரிக்னோலியா ஒன்டாட்சே என்ற அவரது பெயர் வைக்கப்பட்டது.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. Aaron, Jane (2016). The compact reader. Macmillan Education. p. 63.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Michael Ondaatje | The Canadian Encyclopedia". www.thecanadianencyclopedia.ca. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  3. "Michael Ondaatje - Literature". literature.britishcouncil.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
  4. "Golden man booker prize". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. 5.0 5.1 5.2 5.3 Michael Ondaatje." In An Anthology of Canadian Literature in English, edited by Donna Bennett and Russell Brown, 928-30. 3rd ed. Toronto, ON: Oxford University Press, 2010.
  6. "Comparative Cultural Studies and Michael Ondaatje's Writing". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  7. 7.0 7.1 7.2 7.3 "(Philip) Michael Ondaatje." In Gale Online Encyclopedia. Detroit: Gale, 2016. Literature Resource Center (accessed November 30, 2016)
  8. "Michael Ondaatje's Passage From Ceylon". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  9. "Michael Ondaatje's Passage From Ceylon". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  10. "Man Booker prize 2018 longlist – in pictures". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  11. "New spider species named for Michael Ondaatje". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_ஒண்டாச்சி&oldid=3792234" இலிருந்து மீள்விக்கப்பட்டது