தேசிய குடிமக்கள் பதிவேடு (அசாம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC) (ৰাষ্ট্ৰীয় নাগৰিক পঞ্জীকৰণ) இந்தியக் குடிமக்கள் தொடர்பான பதிவுகள் உள்ளடக்கியது. [1] 1951 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது அசாம் மாநிலத்தில் மட்டும் முதன் முறையாக தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்பட்டது.[2][3][4]பின்னர் தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை.

டிசம்பர் 1971-இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போர், 1971 மற்றும் வங்காளதேச விடுதலைப் போரின் போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட வங்காளதேச மக்கள், இந்தியாவின் அசாம், மேற்கு வங்காளம், திரிபுரா, மேகாலயா போன்ற மாநிலங்களில் குடியேறினர். இந்திய அரசு மற்றும் அசாம் மாநில அரசு, அசாமில் குடியேறிய வங்க தேசத்தவர்களுக்கு, இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை போன்ற அனைத்து உரிமைகளையும் வழங்கினார். இதனால் அசாமில் குடியேறிய வங்க தேசத்தவர்களால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, சமூகப் பொருளாதரத்தில் தாங்கள் பாதிக்கப்படுவதாக உணர்ந்த அசாமியர்கள், வங்கதேசத்தவர்களை அசாம் மாநிலத்திலிருந்து வெளியேற்றக் கோரி அனைத்து அசாமிய மாணவர் அமைப்புகள் பெரும்போராட்டங்களும், வன்முறைகளும் மேற்கொண்டனர்.

அசாம் மக்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும், வெளிநாட்டினர் (வங்க தேசத்தவர்) வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடங்கப்பட்ட அசாம் கண பரிசத் கட்சி வென்று அசாம் மாநிலத்தில் 1985 முதல் 1989 மற்றும் 1996 முதல் 2001 இருமுறை ஆட்சி பொறுப்பேற்றது.

அசாமில் வெளிநாட்டவர் எனும் பிணக்கை தீர்க்க இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, அசாமில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை உச்ச நீதிமன்ற கண்காணிப்புடன் இந்திய அரசு 2013-இல் தொடங்கியது. 1951-ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றவர்கள் அல்லது 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவுக்கு முன்பாக இந்தியாவில் வசித்து, வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.[5][6]

இதனால் வங்கதேசத்திலிருந்து அகதிகளாக அசாமில் வந்த மக்களில் இந்துக்கள் பலரின் பெயர் விடுபடுவதாக அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சியினர் கவலை தெரிவித்தனர். இதையடுத்து வெளிநாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்த்துக் கொள்வது என இந்திய அரசு முடிவெடுத்தது. இதற்கு அசாம் கண பரிசத் உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. வெளிநாட்டைச் சேர்ந்த அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என அந்த கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஏற்கெனவே இரண்டு முறை தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டன. இதில் லட்சக்கணக்கானோர் பெயர்கள் விடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு 31 ஆகஸ்டு 2019 அன்று வெளியிடப்பட்டது.[7]

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்துகொள்ள 3,30,27,661 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 3,11,21,004 பேர்கள் மட்டும் பட்டியலில் உள்ளது. மீதமுள்ள 19,06,657 பேர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பதால் அசாமில் சச்சரவு நிலவுகிறது.[8]

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் நோக்கம்[தொகு]

அசாம் மாநிலத்தில் வாழும் இந்தியக் குடிமக்களை கண்டறியவும், அசாமில் சட்டபூர்வமற்ற வாழும் வேற்று நாட்டு குடிமக்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களை கண்டறிந்து வெளியேற்றவும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆனையின் பேரில், 2013-வது ஆண்டு முதல் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கும் பணி துவங்கியது. [9]

பின்னணி[தொகு]

இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948 மற்றும் 1971 வங்காளதேச விடுதலைப் போரின் போது வங்காள தேசத்திலிருந்து (முன்னர் கிழக்கு பாகிஸ்தான்) இலட்சக் கணக்கான மக்கள் இந்தியாவில் குறிப்பாக அசாம் மாநிலத்தில் குடியேறினர்.[10] சட்டத்திற்கு புறம்பான வங்காள தேசத்தவர்களின் இலட்சக்கணக்கான மக்களின் நுழைவால், அசாம் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக உணர்ந்த அனைத்து அசாம் மாணவர்கள் ஒன்றியம் 1979-இல் அசாமில் சட்டவிரோதமாக குடியேறி வாழும் வங்காள தேச மக்களை வெளியேற்ற வேண்டும் எனக்குரல் எழுப்பி ஆறு ஆண்டுகள் தொடர் போராட்டங்கள் செய்தனர். [11] [12]

இதன் விளைவாக அனைத்து அசாம் மாணவர்கள் ஒன்றியமும், இந்திய அரசு மற்றும் அசாம் மாநில அரசுகளும் இணைந்து, அசாமில் வாழும் வெளிநாட்டவர்களை வெளியேற்றுவது தொடர்பாக 15 ஆகஸ்டு 1985 அன்று இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி முன்னிலையில் அஸ்ஸாம் அக்கார்ட் என்ற ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.[13]

பின்னர் இவ்வொப்பந்தம் முறிந்ததால் அசாமில் மாணவர்கள் கலவரம் வெடித்தது.[14] தன் விளைவாக 25 மார்ச் 1971 அன்றிலிருந்து அசாமில் வாழும் வங்காள தேசத்தவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற, அசாமி மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க சட்டப்படி முடிவு எடுக்கப்பட்டது.[15]

இதன் தொடர்ச்சியாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க, முதன்முறையாக அசாம் மாநிலத்தின் காமரூப் மாவட்டம் மற்றும் பார்பேட்டா மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணி மீண்டும் 2010-இல் செயல்ப்படுத்தப்பட்டது. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பவே நான்கு வாரங்களில் இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டது. [16]

2013-இல் இந்திய உச்ச நீதிமன்றம், அசாம் மாநிலத்தில் வாழும் சட்டவிரோத குடியேறிகளை கண்டறிய மீண்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என ஆனையிட்டது. [17] [18] இதனால் 6 டிசம்பர் 2013 முதல் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் கடினமான பணி துவங்கியது.[19] [20].

தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிப்தற்கான வழிகாட்டுதல்கள்[தொகு]

இந்திய குடிமக்கள் சட்டம், 1955-இல் கூறியவாறு தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும்.[21] மேலும் பதிவேட்டை புதுப்பிக்கும் போது குடியுரிமை (குடியுரிமைப் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை) விதிகள், 2003-ஐ (The Citizenship (Registration of Citizens and Issue of National Identity Cards) Rules, 2003) கவணத்தில் கொள்ள வேண்டும். 24 மார்ச் (நடு இரவு) 1971 அன்றும், அதற்கு முன்னர் உள்ள 1971-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் போன்ற ஆவணங்களை சரிபார்த்து, 1951 குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும்.

குடிமக்கள் பதிவேட்டில் பதவி செய்வதற்கான தகுதிகளும், வரையறைகளும்[தொகு]

  • 1951-ஆம் ஆண்டில் இந்திய தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இருக்க வேண்டும்.
  • 24 மார்ச் 1971[22] (நடு இரவுக்கு) முன்னதாக இந்திய வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும்.
  • மேற்படி பட்டியலில் பெயர் உள்ளவர்களில் வழித்தோன்றல்கள்.
  • 1 சனவரி 1966 முதல் 25 மார்ச் 1971க்கு முன்னர் அசாமில் குடியேறி முறையாக அரசிடம் பதிவு செய்து கொண்ட வெளிநாட்டு அகதிகள் மற்றும் அவர்களது வழித்தோன்றல்கள்.
  • D வாக்காளர்களும் பதிவேட்டில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
  • 24 மார்ச் 1971 (நடுஇரவு) முன்னர் இந்திய அரசு அல்லது அசாம் அரசின் ஆவணங்களைக் கொண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயரை பதிவு செய்யலாம்.
  • 24 மார்ச் 1971 பிறகு அசாமில் குடியேறிய பிற இந்திய மாநிலத்தவர்கள் மற்றும் அவர்களது வழித்தோன்றல்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரை பதிவு செய்யலாம்.
  • அசாம் மாநிலத்தின் அனைத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தேசிய குடிமக்கள பதிவேட்டில் பதிவு செய்ய தகுதியுடைவர்கள் ஆவர்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டுதற்கான ஆவணங்கள்[தொகு]

’அ’ பிரிவு ஆவணங்கள் பட்டியல்[தொகு]

இப்பிரிவில் சமப்பிக்கப்படும் ஆவணங்கள் அனைத்தும் 24 மார்ச் 1971 (நடு இரவு) முன்னதாக இருக்க வேண்டும்.

  •       1951 தேசிய குடிமக்கள் பதிவேடு சான்றிதழ்
  •       வாக்காளர் பட்டியலில் பெயர்
  •       வீடு, நிலம் & குத்தகை ஆவணங்கள்
  •       இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்
  •       நிரந்தர இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்
  •       அகதி பதிவு சான்றிதழ்
  •       இந்திய அல்லது மாநில அரசுகள் வழங்கிய ஏதேனும் உரிமங்கள் / சான்றிதழ்கள்
  •       அரசு பணி / பணிச் சான்றிதழ்
  •       வங்கி / அஞ்சலக கணக்குகள் / ஆயுள் காப்பீட்டு ஆவணங்கள்
  •       பிறப்புச் சான்றிதழ்
  •       கல்வி நிலையச் சான்றிதழ்கள்
  •       நீதிமன்ற ஆவணங்கள்/ நடப்பில் உள்ளவைகளும்
  •       குடும்ப அட்டைகள் (Ration Card)

’ஆ’ பிரிவு ஆவணங்கள்[தொகு]

24 மார்ச் 1971 (நடு இரவு) பிறகு பிறந்தவர்கள், தங்கள் முன்னோர் அசாமில் வாழ்ந்ததற்கான

  •          பிறப்புச் சான்றிதழ்
  •          வீடு, நிலம் மற்றும் குத்தகை பத்திரங்கள்
  •          கல்வி நிலையச் சான்றிதழ்கள்
  •          வங்கி/அஞ்சலக/எல் ஐ சி ஆவணங்கள்
  •          திருமணச் சான்றிதழ்
  •          வாக்காளர் பட்டியல்
  •          குடும்ப அட்டை
  •          ஏற்கும்படியான சட்டபூர்வமான இதர ஆவணங்கள்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. [தேசிய குடிமக்கள் பதிவேடு ஏன்? எதற்கு? எப்படி? - பின்னணி தகவல்கள்
  2. "National Register of Citizens in Assam: Issue of illegal foreigners continues to be a major political one".
  3. "Assam: Overhaul of National Register of Citizens sparks controversy". after
  4. "National Register of Citizens in Assam: Issue of illegal foreigners continues to be a major political one - The Economic Times". Economictimes.indiatimes.com. 2015-06-14. பார்க்கப்பட்ட நாள் 2015-09-05.
  5. Bhardwaj, Sandeep (2014-04-13). "1971 India-Pakistan War: Genocide". Revisiting India. பார்க்கப்பட்ட நாள் 2015-09-05.
  6. Karmakar, Rahul (2018-07-21). "Who is Prateek Hajela, who’s making the headlines in Assam?" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/who-is-prateek-hajela-whos-making-the-headlines-in-assam/article24483668.ece. 
  7. What is NRC: All you need to know about National Register of Citizens
  8. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் வெளியீடு: 19 லட்சம் பேர் நீக்கம்
  9. தேசிய குடிமக்கள் பதிவேடு ஏன்? எதற்கு? எப்படி? - பின்னணி தகவல்கள்
  10. Deka, Dr. Kaustubh. "Bengali Muslims who migrated to Assam in 1871 are not 'illegal Bangladeshis'" (in en-US). Scroll.in. https://scroll.in/article/664077/bengali-muslims-who-migrated-to-assam-in-1871-are-not-illegal-bangladeshis. 
  11. "Must Read: NRC For India— A Paradigm Shift from Vote Bank Politics to "India for Indians" - The Fearless Indian" (in en-GB). The Fearless Indian. 2018-08-14 இம் மூலத்தில் இருந்து 2018-08-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180816130100/https://thefearlessindian.in/must-read-nrc-india-paradigm-shift-vote-bank-politics-india-indians/amp/. 
  12. "Assam Agitation". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  13. "From Assam Accord to NRC discord: A timeline". The Economic Times. 2018-08-02. https://economictimes.indiatimes.com/news/et-explains/from-assam-accord-to-nrc-discord-a-timeline/articleshow/65237816.cms. 
  14. "32 years after it was signed, separate office set up to implement Assam Accord" (in en). Hindustan Times. 2017-12-10. https://www.hindustantimes.com/india-news/32-years-after-it-was-signed-separate-office-set-up-to-implement-assam-accord/story-Vh2JBFlzapjIIVyMbchQeI.html. 
  15. "Assam Accord and its Clauses". Government of Assam. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  16. "National Register of Citizens to be updated in Assam" (in en-IN). The Hindu. 2013-03-18. https://www.thehindu.com/todays-paper/tp-national/national-register-of-citizens-to-be-updated-in-assam/article4520748.ece. 
  17. "Couple who set NRC ball rolling" (in en). The Telegraph இம் மூலத்தில் இருந்து 2018-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180820172656/https://www.telegraphindia.com/states/north-east/couple-who-set-nrc-ball-rolling-248806. 
  18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. பார்க்கப்பட்ட நாள் 2019-09-01.
  19. "MINISTRY OF HOME AFFAIRS Office of The Registrar General, India Order New Delhi, the 5th December, 2013" (PDF). NRC Assam. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  20. "All you need to know about NRC". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-02.
  21. "8-003a". indiancitizenshiponline.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-07-03.
  22. அஸ்ஸாம்: ' குடியுரிமை மதத்தை பொறுத்தது அல்ல, தேதி சம்பந்தப்பட்டது'

வெளி இணைப்புகள்[தொகு]