நரேஷ் தெரகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரேஷ் தெரகான் (Naresh Trehan) இவர் ஒரு இந்திய இருதய மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். [1] இந்தியாவின் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, 1971 முதல் 1988 வரை அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவ மையமான மன்ஹாட்டனில் பயிற்சி பெற்றார். இந்தியா திரும்பிய இவர் எஸ்கார்ட்ஸ் இருதய நிருவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கினார். [2] இவர் மெடந்தா மருத்துவ நகரத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுகிறார். 1991 முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் விருதுகளான பத்மசிறீ, பத்ம பூசண், உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். மேலும், லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது மற்றும் மருத்துவர் பி. சி.ராய் விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்..

கல்வி மற்றும் தொழில்[தொகு]

1963 ஆம் ஆண்டில் மருத்துவர் தெரகான் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில அனுமதி பெற்றார். [3] நவம்பர் 1969 இல் இவர் அமெரிக்காவுக்குச் சென்று பிலடெல்பியாவில் உள்ள தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழக மருத்துவமனையில் முதல் ஆண்டு குடியிருப்பாளராக ஆனார்.

1988 ஆம் ஆண்டில் தில்லியின் ஓக்லா சாலையில் திறக்கப்பட்ட எஸ்கார்ட்ஸ் இருதய நிறுவன மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனராகவும், நிர்வாக இயக்குநராகவும் மற்றும் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருக்கிறார். [4] தற்போது, தெரகான் 2009 இல் அரியானாவின் குர்கானில் உள்ள மிகப்பெரிய சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான மெடந்தா - மருத்துவ நிறுவனத்தின் தலைவராக உள்ளார். [5] நிறுவப்பட்ட குறைவாக துளையிடும் இருதய அறுவை சிகிச்சைக்கான சர்வதேச சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.

உலகளாவிய சுகாதார நிறுவனத்தின் தலைவராக, தற்போது மெடிசிட்டி என குறிப்பிடப்படும் இந்தியாவின் குர்கானில் ஒரு ஒருங்கிணைந்த சுகாதார பராமரிப்பு வசதியைக் கட்டுவதை தெரகான் மேற்பார்வையிடுகிறார். மெடிசிட்டி 43 ஏக்கர் (170,000 மீ 2) நிலத்தில் பரவியுள்ளது. சீமென்ஸ் மற்றும் பிற நிதி பங்காளிகளுடன் ஒத்துழைத்து, மெடிசிட்டி நவீன மருத்துவத்தை பாரம்பரிய மருத்துவம் மற்றும் முழுமையான சிகிச்சைகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. [6]

சுயசரிதை[தொகு]

இவரது தாயார் ஒரு மகளிர் மருத்துவ நிபுணராவார். இவரது தந்தை ஒரு கண், காது மற்றும் மூக்குத் தொண்டை நிபுணர் ஆவார், இவர்கள் இருவரும் இந்தியாவைப் பிரிக்கும் வரை பைசாலாபாத்தில் பயிற்சி பெற்றனர். இந்தியப் பிரிப்பு வரை இவரது குடும்பம் ஸ்ரீ ஹர்கோவிந்த்பூர், படாலாவைச் சேர்ந்தது [7] இவர் இடது கை வழக்கத்துடன் பிறந்தார், ஆனால் அவமையாதை காரணமாக, இவரது இந்தி ஆசிரியர் இவரது இடது கையை உடைத்து தெரகானை வலது கையால் எழுதும்படி கட்டாயப்படுத்தினார். ஒரு பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மது என்பவரை 1969 செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டு இருவரும் நவம்பரில் அமெரிக்கா சென்றனர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். [8]

மரியாதைகள்[தொகு]

2001 ஆம் ஆண்டில் இருதய மருத்துவத் துறையில் சிறப்பான சேவையை அங்கீகரிப்பதற்காக இந்தியக் குடியரசுத் தலைவரின் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. [9] 1991 ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சை துறையில் சிறப்பான சேவையை அங்கீகரிப்பதற்காக இந்தியக் குடியரசுத்தலைவரின் பத்மசிறீ வழங்கப்பட்டது. [10] மருத்துவர் பி. சி. ராய் விருது 2002 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ கழகத்திடமிருந்து பெற்றார். [11] இந்தியா டுடே பத்திரிகை 2017 பட்டியலில் இந்தியாவின் 50 சக்திவாய்ந்த நபர்களில் # 35 வது இடத்தைப் இவருக்கு வழங்கியது. [12]

குறிப்புகள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 9 January 2015. பார்க்கப்பட்ட நாள் 1 December 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-07. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.
  3. [1]
  4. "About Dr. Trehan". Archived from the original on 2020-01-18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.
  5. "Magic of Medanta". Financial Express. 19 July 2010. http://www.financialexpress.com/news/magic-of-medanta/648319/0. பார்த்த நாள்: 23 April 2013. 
  6. "MediConnect Closes Major Funding Round, Adds Key Members to Its Board of Directors". Archived from the original on 2016-08-16. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.
  7. [1]
  8. http://timesofindia.indiatimes.com/city/delhi-times/Naresh-Trehan--straight-from-the-heart/articleshow/8900702.cms
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-06. பார்க்கப்பட்ட நாள் 2020-01-11.
  10. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  11. "B.C. Roy awards for 55 doctors". The Hindu. 2 July 2008. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
  12. "India's 50 powerful people". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/india-today-top-50-powerful-indians-mukesh-ambani-ratan-tata-kumar-mangalam-birla-gautam-adani-anand-mahindra-srk-amitabh-bacchan/1/928939.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேஷ்_தெரகான்&oldid=3588563" இலிருந்து மீள்விக்கப்பட்டது