எட்மண்ட் கீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எட்மண்ட் கீன் (Edmund Kean 4 நவம்பர் 1787  – 15 மே 1833) இங்கிலாந்தில் பிறந்த ஒரு பிரபலமான பிரித்தானிய மேடை நடிகர் ஆவார்.இவர் லண்டன், பெல்ஃபாஸ்ட், நியூயார்க், கியூபெக் மற்றும் பாரிஸ் ஆகிய இடங்களில் நடித்தார்.   அவரின் குட்டையான தோற்றம் ,குழப்பமான தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சர்ச்சைக்குரிய விவாகரத்து போன்றவற்றால் பரவலாக இவர் அறியப்பட்டார்.

சுயசரிதை[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கீன் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் பிறந்தார். அவரது தந்தை எட்மண்ட் கீனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவரது தந்தை எழுத்தராகப் பணி புரிந்தார். இவரின் தாய் அன்னே கேரி ஒரு நடிகை ஆவார். இவரின் தாய் 18 ஆம் நூற்றாண்டின் இசையமைப்பாளரும் நாடக ஆசிரியருமான ஹென்றி கேரியின் மகளாவார். [1]

நான்கு வயதாக இருக்கும் பொழுது ஜீன் ஜார்ஜஸ் நும்பர் டிரெயின் சைமன் என் கூட்டு நடனம் குழுவில் நடித்தார் குழந்தையாக இருந்த பொழுது சுறுசுறுப்பும் புத்திசாலித்தனம் கொண்டவராக இருந்தார். 1794 ஆண்டில்சில நபர்கள் அவருக்கு பள்ளிக்குச் செல்ல பணம் கொடுத்தனர்.  சிறப்பான முறையில் கல்வி பயின்ற பின்னர்அவர் போர்ட்ஸ்மவுத்தில் ஒரு கேபின் பையனாக அனுப்பப்பட்டார். கேள்விக் குறைபாடு மற்றும் நொண்டி என மிகவும் திறமையாக நடித்து, மதீராவில் உள்ள மருத்துவர்களை ஏமாற்றினார். [1]

இங்கிலாந்து திரும்பியதும், அவர் தனது மாமா, மோசஸ் கீன், ஒரு மிமிக்,மாயக் குரல் மற்றும் பொது பொழுதுபோக்கு கலைஞரின் பாதுகாப்பை நாடினார். அவர் தனது அபிநயக் காட்சி படிப்புகளைத் தொடர்ந்ததோடு, ஷேக்ஸ்பியரின் படைப்புகளை கற்கத் துவங்கினார். மிஸ் சார்லோட் டிட்ஸ்வெல் என்ற நடிகை சிறுவயதிலிருந்தே இவரிடம் கருணை காட்டினார். மேலும் அவருக்கு நடிப்பின் கொள்கைகளை கற்றுக் கொடுத்தார். [1]

அவரது மாமாவின் மரணத்தின் போது.இவரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பினை அவர் ஏற்றுக் கொண்டார். மேலும் அவர் முதன்மையாக ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்களைப் பற்றிய முறையான ஆய்வைத் தொடங்கினார். ஜான் பிலிப் கெம்பிளின் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விளக்கங்கள் மூலம் அவரது அறிவுப்பூர்வமான அதே சமயத்தில் அந்தக் கதாப்பத்திரங்களின் தனித்தன்மையினை குறித்து ஆராய்ந்தார்.

இவரின் திறமை திருமதி கிளார்க் இவரைத் தத்தெடுக்க காரணமாக அமைந்தது. ஆனால் அவர் ஒரு பார்வையாளர் கூறிய கருத்தினால் மனம் வருந்திய இவர் திடீரென்று அவரது வீட்டை விட்டு வெளியேறி தனது பழைய சூழலுக்குச் சென்றார். [1]

அந்தரங்க வாழ்க்கை[தொகு]

நாடக படைப்புகள்[தொகு]

கீனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பல நாடகப் படைப்புகள் வெளிவந்துள்ளன.

1836 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்ட்ரே டுமாஸின் இயக்கிய பெரே நாடகம் மற்றும் 1953 ஆம் ஆண்டில் ஜீன்-பால் சார்த்தரின் கீன். இது1954 ஆம் ஆண்டில் பியர் ப்ராஸூருடன் தயாரிக்கப்பட்டது. பின்னர் 1990 ஆம் ஆண்டில் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. [2]2007 ஆம் ஆண்டில் இந்த நாடகத்தில் ஆண்டனி ஷெர் நடித்தார்.[3] அந்தோனி ஹாப்கின்ஸ் என்பவர் பிபிசி ப்ளே ஆஃப் தி மன்த் என்பதற்காக 1978 ஆம் ஆண்டில் வெளியான கீன்.



சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Chisholm 1911, ப. 705.
  2. "Derek Jacobi".
  3. Thaxter, John (2007-05-31). "Kean Theatre Review". The Stage. பார்க்கப்பட்ட நாள் 2008-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்மண்ட்_கீன்&oldid=2892523" இலிருந்து மீள்விக்கப்பட்டது