கூர்வாய்த் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூர்வாய்த் தவளை
புதைப்படிவ காலம்:Paleocene - Present,[1] 66–0 Ma
கிழக்கத்திய கூர்வாய்த் தேரை (Gastrophryne carolinensis)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: வாலற்றன
குடும்பம்: மைக்ரோகையலிடே
துணைக்குடும்பம்
கூர்வாய்த் தவளைக் குடும்பம் வாழும் பகுதிகள் (கருப்பு நிறத்தில்)

கூர்வாய்த் தவளை (Microhylidae) என்று பொதுவாக அழைக்கப்படுவது புவியியல் ரீதியாக பரவலாக காணப்படும் தவளைக் குடும்பமாகும். இதில் 683 சிற்றினங்கள் 61 பேரினங்களின் கீழ் உள்ளன. இவை 11 துணைக் குடும்பங்களில் உள்வருகின்றன.[2] தவளைக் குடும்பத்தில் அதிகமான பேரினங்களைக் கொண்ட தவளைக் குடும்பம் இதுவாகும்.[3]

பரிணாமம்[தொகு]

வான் டெர் மீஜ்டன் மற்றும் பலர் செய்த ஒரு மூலக்கூறு கணப்பிறப்புக்குரிய ஆய்வில் (2007) கூர்வாய் தவளைக் குடும்பத்தின் ஆரம்ப உள் வேறுபாடு சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக மதிப்பிட்டுள்ளது, அல்லது கிரெட்டேசியஸ் அழிவு நிகழ்வுக்குப் பிறகு உடனடியாக நிகழ்ந்தது.[1]கூர்வாய்த் தவளைகளின் மிகச் சமீபத்திய பொதுவான மூதாதையரும் அவற்றின் நெருங்கிய ரானாய்டு உறவினர்களும் 116 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கோண்டுவானாவில் வாழ்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.[1]

விளக்கம்[தொகு]

கூர்வாய்த் தவளைகள் பெரும்பாலும் சிறிய அளவிலான தவளைகள் ஆகும். இவற்றில் பல இனங்களின் நீளம் 1.5 cm (0.59 அங்) அளவுக்கும் குறைவானவையாக உள்ளன. சில இனங்கள் 9 cm (3.5 அங்) வரை பெரியவை. இவை மரத்தில் வாழ்பவையாகவோ அல்லது நிலப்பரப்பில் வாழ்பவையாகவோ இருக்கலாம்.[4] மேலும் சில தண்ணீருக்கு அருகில் வாழ்கின்றன. நிலத்தில் வசிப்பவை பெரும்பாலும் காடுகளில் இலைச் சருகுகளுக்கு அடியில் காணப்படுகிறன. எப்போதாவது இரவில் உணவைப் பிடிக்க வருகின்றன. கூர்வாய்த் தவளைகள் இரண்டு முக்கிய வடிவங்கள் கொண்டதாக உள்ளன. அவை அகன்ற உடல் மற்றும் கூர்மையான வாய் என்பவையாகும். இவை சாதாரண தவளையின் அளவினை உடையன. கூர் வாய் கொண்டவை பொதுவாக கரையான்கள் மற்றும் எறும்புகளை சாப்பிடுகின்றன, மற்றவை பெரும்பாலான தவளைகளைகளைப் போன்ற பொதுவான உணவுகளைக் கொண்டுள்ளன. முட்டை இடும் பழக்கம் மிகவும் மாறுபட்டதாக உள்ளது.

இனப்பெருக்கம்[தொகு]

நியூ கினி மற்றும் ஆத்திரேலியாவின் கூர்வாய்த் தவளை இனங்கள் தலைப்பிரட்டை கட்டத்தை அடையாமல் அப்படியே முட்டை முதல் தவளை என்ற நிலைவரை நேரடி வளர்ச்சியடைகின்றன. அதாவது மரங்களில் வாழும் இனங்கள் மரங்களிலேயே முட்டையிடலாம். மேலும் ஒருபோதும் தரைக்கு வந்த ஆபத்துக்கு உள்ளாகத் தேவையில்லை. இவை தலைப்பிரட்டைகளைக் கொண்டிருக்கும் போது, மற்ற குடும்பங்களின் தலைப்பிரட்டைகளைப் போல பொதுவாக பற்கள் அல்லது கொம்பு போன்ற மூக்குகளைக் கொண்டிருப்பதில்லை.[4]

சரகம்[தொகு]

கூர்வாய் தவளைக் குடும்பத்தைச் சேர்ந்த தவளைகள் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, கிழக்கு இந்தியா, இலங்கை, தென்கிழக்காசியா, நியூ கினி மற்றும் ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன. பெரும்பாலானவை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல பகுதிகளில் காணப்பட்டாலும், ஒரு சில இனங்கள் வறண்ட பகுதிகளில் காணப்படுகின்றன. இவை நியூ கினி மற்றும் மடகாஸ்கரில் உள்ள தவளை இனங்களில் பெரும்பான்மையான தவளைகள் இவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 van der Meijden, A., M. Vences, S. Hoegg, R. Boistel, A. Channing, and A. Meyer. 2007. Nuclear gene phylogeny of narrow-mouthed toads (family: Microhylidae) and a discussion of competing hypotheses concerning their biogeographical origins. Mol. Phylogenet. Evol. 44:1017–1030.
  2. Amphibiaweb. "Microhylidae". Amphibiaweb. பார்க்கப்பட்ட நாள் 2 April 2020.
  3. Blackburn, D.C.; Wake, D.B. (2011). "Class Amphibia Gray, 1825. In: Zhang, Z.-Q. (Ed.) Animal biodiversity: An outline of higher-level classification and survey of taxonomic richness". Zootaxa 3148: 39–55. http://mapress.com/zootaxa/2011/f/zt03148p055.pdf. 
  4. 4.0 4.1 Zweifel, Robert G. (1998). Cogger, H.G.. ed. Encyclopedia of Reptiles and Amphibians. San Diego: Academic Press. பக். 102–103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-178560-2. https://archive.org/details/encyclopediaofre0000unse_h2i0. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:


"https://ta.wikipedia.org/w/index.php?title=கூர்வாய்த்_தவளை&oldid=3581791" இலிருந்து மீள்விக்கப்பட்டது