கால்சியம் பாசுப்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் பாசுப்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் பாசுப்பைடு
வேறு பெயர்கள்
போட்டோபோர், பாலிதனோல்
இனங்காட்டிகள்
1305-99-3 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4337964
SMILES
  • [Ca+2].[Ca+2].[Ca+2].[P-3].[P-3]
பண்புகள்
Ca3P2
வாய்ப்பாட்டு எடை 182.18 கி/மோல்
தோற்றம் செம்பழுப்பு படிகத்தூள் அல்லது சாம்பல் கட்டிகள்
அடர்த்தி 2.51 கி/செ.மீ3
உருகுநிலை ~1600 °செ
சிதைவடையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் பாசுப்பீன் வாயுவின் மூலம், நீருடன் அபாயமான வினை
R-சொற்றொடர்கள் R15/29 R28 R50
S-சொற்றொடர்கள் (S1/2) S22 S43 S45 S61
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

கால்சியம் பாசுப்பைடு (Calcium phosphide) என்பது Ca3P2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியத்தின் பல்வேறு வகையான பாசுப்பைடுகளில் கால்சியம் பாசுப்பைடும் ஒன்றாகும். Ca2 + நேர்மின் அயனியும் P3− எதிர்மின் அயனியும் சேர்ந்து உருவான ஓர் உப்பு போன்ற பொருள் என இச்சேர்மம் விவரிக்கப்படுகிறது. மற்றும் சில கால்சியம் பாசுப்பைடுகள் CaP, CaP3, Ca2P2 மற்றும் Ca5P8 போன்ற வாய்ப்பாடுகளை கொண்டுள்ளன. கால்சியம் பாசுப்பைடு செம்பழுப்பு நிறத்துடன் படிகத் தூள் அல்லது சாம்பல் கட்டிகளின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. தீமூட்டும் பயன்பாட்டிற்கான கால்சியம் பாசுப்பைடு போட்டோபோர் என்ற வர்த்தகப் பெயரிலும் கொறிக்கும் விலங்கு கொல்லியாகப் பயன்படுத்தப்படும் பாசுப்பைடு பாலிடனோல் என்ற வர்த்தகப்பெயரிலும் கிடைக்கின்றன [1]. கால்சியம் பாசுப்பைடு 1600 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. கரைவதற்குப் பதிலாக நீருடன் அபாயகரமாக வினையில் ஈடுபட்டு கால்சியம் ஐதராக்சைடையும் பாசுப்பீனையும் கொடுத்து சிதைவடைகிறது.

தயாரிப்பும் கட்டமைப்பும்[தொகு]

கால்சியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது[2]. ஆனால் பொதுவாக கால்சியம் பாசுப்பேட்டு சேர்மத்தை கார்பனை ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தி பல நூறு பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி ஒடுக்கம் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது :[3]

Ca3(PO4)2 + 8 C → Ca3P2 + 8 CO

அறை வெப்பநிலையில் காணப்படும் Ca3P2 சேர்மத்தின் கட்டமைப்பை எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகள் உறுதிபடுத்தவில்லை. உயர்வெப்பநிலையில் இரியட்வெல்து சீராக்க நுணுக்கம் இதை வரையறுக்கிறது. Ca2+ மையங்கள் எண்முக வடிவத்தில் உள்ளன[2].

பயன்கள்[தொகு]

உலோக பாசுப்பைடுகள் கொறிக்கும் விலங்குகளை அழிக்கும் கொல்லியாகப் பயன்படுத்தப்படுகின்றன. உணவு மற்றும் கால்சியம் பாசுபைடு ஆகியவற்றின் கலவையானது கொறித்துண்ணிகள் சாப்பிடக்கூடிய இடத்தில் வைக்கப்படுகிறது. கொறித்துண்ணியின் செரிமான அமைப்பில் உள்ள அமிலம் பாசுப்பைடுடன் வினைபுரிந்து நச்சு வாயுவான பாசுப்பீனை உருவாக்குகிறது. பொதுவான வார்பரின்-வகை இரத்த உறைவுத் தடுப்பிகளை எதிர்க்கும் சக்தி கொண்ட எலிகள் உள்ள இடங்களில் இந்த பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறை பயன்படுத்தப்படலாம். துத்தநாகப் பாசுப்பைடு மற்றும் அலுமினியம் பாசுபைடு போன்ற சேர்மங்கள் கால்சியம் பாசுப்பைடு போன்ற பூச்சிக்கொல்லிகளாகப் பயன்படுகின்றன.

கால்சியம் பாசுப்பைடு பட்டாசுத் தொழிலிலும் பயன்படுத்தப்படுகிறது. கண்னி வெடிகள், சுயமாகப் -பற்றவைக்கும் கடற்படை வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு நீர்-செயல்படுத்தப்பட்ட வெடிமருந்துகளிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.. 1920 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளில் , சார்லசு கிங்சுபோர்ட் சிமித் கால்சியம் கார்பைடு மற்றும் கால்சியம் பாசுப்பைடு ஆகியவற்றின் தனித்தனி மிதக்கும் வீச்சுக்குண்டுகளை பத்து நிமிடங்கள் வரை நீடித்த கடற்படை எரியூட்டுகளாகப் பயன்படுத்தினார். ஒரு மூடிய கொள்கலனில் . எலும்புகளை சிறுநீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் கால்சியம் பாசுப்பைடு பண்டைய கிரேக்க வெடிகளின் ஒரு உட்பொருளாக இருந்தது என ஊகிக்கப்படுகிறது [4].

கால்சியம் பாசுப்பைடு என்பது கால்சியம் கார்பைடில் உள்ள ஒரு பொதுவான அசுத்தமாகும், இதன் விளைவாக உற்பத்தியாகும் பாசுபீனால் அசுத்தமானதாக மாறும் அசிட்டிலீனை இது தன்னிச்சையாக பற்றவைக்கக்கூடும் [5].

பாதுகாப்பு[தொகு]

அமிலங்கள் அல்லது தண்ணீருடனான தொடர்பில், இவ்வேதிப் பொருள் பாசுப்பீனை வெளியிடுகிறது. பாசுப்பீன் நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் உடனடியாக பற்றிக்கொள்ளக் கூடியது ஆகும். எனவே பாசுப்பீன் மூலம் என்று வகைப்படுத்தப்படுவதால் இதை கையாள்வதில் எச்சரிக்கை அவசியம் வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Richard C. Ropp (31 December 2012). Encyclopedia of the Alkaline Earth Compounds. Newnes. பக். 231–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-444-59553-9. https://books.google.com/books?id=yZ786vEild0C&pg=PA231. 
  2. 2.0 2.1 Lilia S. Xie, Leslie M. Schoop, Elizabeth M. Seibel, Quinn D. Gibson, Weiwei Xie, Cava, Robert J. (2015). "A new form of Ca3P2 with a ring of Dirac nodes". APL Materials 3: 083602. doi:10.1063/1.4926545. 
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  4. Colin McEvedy (1992),The New Penguin Atlas of Medieval History, New York: Penguin.
  5. GOV, NOAA Office of Response and Restoration, US. "CALCIUM PHOSPHIDE | CAMEO Chemicals | NOAA". cameochemicals.noaa.gov. பார்க்கப்பட்ட நாள் 2016-08-26.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_பாசுப்பைடு&oldid=3369691" இலிருந்து மீள்விக்கப்பட்டது