முதுகு நாண் பிறவி குறைபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதுகு நாண் பிறவி குறைபாடு
முதுகு நாண் பிறவி குறைபாடு பாதிப்புக்குள்ளான குழந்தை: மாதிரி படம்
சிறப்புகுழந்தைகளுக்கான மருத்துவம், நரம்பியல் அறுவைசிகிச்சை, மறுவாழ்வு மருத்துவம்
அறிகுறிகள்மயிரடர்ந்த தன்மை, குழி, கருமை நிற பகுதி, கீழ் முதுகில் வீக்கம்[1]
சிக்கல்கள்நடக்க இயலாமை, சிறுநீர் கழிக்க மற்றும் மலம் கழிக்க கட்டுப்பாடு இல்லாமை, நீர் பெருந்தலை, முதுகு தண்டுவடம் குறைபாடு,பால் புரத ஒவ்வாமை[2]
காரணங்கள்மரபு மற்றும் சூழ்நிலை காரணிகள்[3]
சூழிடர் காரணிகள்பிரசவ காலத்தில் இலைக்காடி பற்றாக்குறை, குறிப்பிட்ட வலிப்பு நோய் மருந்துகள், உடல் பருமன், நீரிழிவு நோய்[3][4]
நோயறிதல்பனிக்குட நீர் ஆய்வு, மருத்துவப் படிமவியல்[5]
தடுப்புஇலைக்காடி ஊட்ட சத்துக்கள் வழங்குதல்[3]
சிகிச்சைஅறுவை சிகிச்சை[6]
நிகழும் வீதம்15% (முள்ளந்தண்டு நிரல் குறைபாடு), 1000 பிறப்புகளில் 1 முதல் 5 வரை (மற்ற வகை குறைபாடு)[7][8]

முதுகு நாண் பிறவி குறைபாடு என்பது ஒரு பிறவிக் குறைபாடு ஆகும். இது முள்ளந்தண்டு நிரல் அல்லது முள்ளந்தண்டு வடம் சுற்றி அமைந்துள்ள மூளை தண்டுவட முவ்வுறை பகுதி அளவு இணையாமல் இருப்பதாகும். இந்த பிறவிக் குறை முளைய விருத்தி காலத்தில் ஏற்படுகிறது.[1] இந்த குறை மூன்று வகைகளாக பிரிக்கலாம் அவைகள் முறையே முள்ளந்தண்டு நிரல் குறை, மூளை தண்டுவட முவ்வுறை குறை மற்றும் முள்ளந்தண்டு வட குறை ஆகும்.[1]குறைபாடு பொதுவாக இடுப்பு பகுதில் ஏற்படுகிறது. ஆனால் சில அரிய குறைபாடாக முதுகு மற்றும் கழுத்து பகுதியிலும் அமைகிறது.[9]முள்ளந்தண்டு நிரல் குறையானது மிக குறைவான அல்லது எந்த ஒரு நோய் அறிகுறியும் அற்றது.[5] அதாவது முள்ளந்தண்டு நிரல் குறையில் முள்ளந்தண்டு எலும்பு வளராத பகுதியில் மயிரடர்ந்த தன்மை, குழி, கருமை நிற பகுதி, கீழ் முதுகில் வீக்கம் காணப்படுகிறது.[1] மூளை தண்டுவட முவ்வுறை குறை என்பது முள்ளந்தண்டு எலும்பு வளராத பகுதியில் மூளை தண்டுவட முவ்வுறையில் மூளை தண்டுவட திரவம் நிரம்பி ஒரு திசுப்பை ஏற்பட்டு குறைவான நோய் அறிகுறிகள் ஏற்படும்.[1] முள்ளந்தண்டு வட குறை என்பது திறந்த முதுகு நாண் பிறவி குறைபாடு எனவும் அழைக்கப்படுகிறது. இந்தவகை குறைபாடு மிக கடுமையான நோய் அறிகுறிகளை கொண்டதாகும்.[2] அவைகள் முறையை நடக்க இயலாமை, சிறுநீர் கழிக்க மற்றும் மலம் கழிக்க கட்டுப்பாடு இல்லாமை, நீர் பெருந்தலை, முதுகு தண்டுவடம் குறைபாடு,பால் புரத ஒவ்வாமை முதலியானவாகும்.[2] அரிதாக கற்றுக்கொள்ளும் ஆற்றல் குறை ஏற்படும்.[2]

முதுகு நாண் பிறவி குறைபாடு மரபு காரணிகள் மற்றும் சூழ்நிலை காரணிகள் அல்லது இரு காரணிகளின் கலவையால் உண்டாகிறது.[3] முதல் குழந்தை இந்த பிறவி குறையால் பாதிக்கப்பட்டால் அடுத்த குழந்தையும் பாதிக்க 4% அவகாசம் உள்ளது.[4] கருத்தரிப்புக்கு முன்னும் பின்னும் போதிய அளவு இலைக்காடி உயிர்ச்சத்து எடுத்துக்கொள்ளவில்லை எனில் இந்த பிறவி குறைபாடு ஏற்படும்.[3] மற்ற நோய் காரணிகள் வலிப்பு நோய் மருந்துகள், உடற்பருமன், நீரிழிவு நோய் முதலியனவாகும்.[4] நோய் கண்டறிதல் குழந்தை பிறக்கும் முன் அல்லது குழந்தை பிறந்த பின்னும் அறியலாம்.[5]

குழந்தை பிறப்பதற்கு முன்பே இரத்த பரிசோதனை மற்றும் பனிக்குட நீர் பரிசோதனை செய்வதன் மூலம் ஆல்பா ஃபிடோபுரத உயர் அளவின் காரணமாக முதுகு நாண் பிறவி குறைபாடு ஏற்படுகிறது என்று கண்டறியலாம்.[5] மீயொலி ஆய்வின் மூலம் கர்ப்பகாலத்தில் கண்டறியலாம். மருத்துவப் படிமவியல் மூலம் குழந்தை பிறந்த பின் இந்த குறைபாடுகளை கண்டறியலாம்.[5] முதுகு நாண் பிறவி குறைபாடு என்பது நரம்பு குழாய் குறைபாடு வகை சார்ந்த பிறவி குறை ஆகும்.[10]


பெரும்பாலான இந்த பிறவி குறை கருத்தரிப்புக்கு முன்னும் பின்னும் கருவுற்ற தாய் இலைக்காடி உயிர்ச்சத்து உட்கொள்வதால் குழந்தைக்கு வராமல் தவிர்க்கலாம்.[3] இலைக்காடி அமிலம் மாவு உணவு பொருட்களுடன் சேர்த்து உண்பதால் மகளிருக்கு நல்ல பலனளிக்கும்.[11] திறந்த முதுகு நாண் பிறவி குறைபாடு என்ற முள்ளந்தண்டு நிரல் பிறவி குறையை அறுவைசிகிச்சையின் மூலம் சரிசெய்துகொள்ளலாம்.[6] அறுவைசிகிச்சை மூலம் பெருமூளைபுறவழி அமைப்பதால் நீர்பெருந்தலை மற்றும் தண்டுவட குறை சரி செய்யலாம்.[6] சக்கர நாற்காலிகள் மற்றும் ஊன்றுக்கோள் உதவிகளால் அன்றாட உடல் அசைவுகள் மேற்கொள்ளலாம்.[6] சிறுநீர் வடிகுழாய் சில நேரங்களில் பயனுள்ளதாக உள்ளது.[6]

கிட்டத்தட்ட 15% மக்கள் பாதிப்புக்குள்ளாவது முள்ளந்தண்டு நிரல் குறை ஆகும்.[8] மற்ற வகை முதுகு நான் பிறவி குறைபாடு நாடுகளுக்கு ஏற்ப 1000 பிறப்புக்கு 1 முதல் 5 ஏற்படுகிறது.[12] சராசரியாக வளர்ந்த நாடுகளில் ஐக்கிய அமெரிக்க நாடுகள் உட்பட 1000 பிறப்பில் 0.4 பிறப்பு இந்த பிறவி குறை ஏற்படுகிறது.[7][4][13] இந்தியாவில் 1000 பிறப்பில் 1.9 பிறப்புகள் இந்த பிறவி குறை ஏற்படுகிறது.[14] கறுப்பின மக்களை விட காக்கேசிய இனம் சார்ந்த மக்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.[15] இலத்தீன் மொழியில் இதன் சொற்பதம் பிளவுபட்ட முள்ளந்தண்டு எலும்பு என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Spina Bifida: Condition Information". 2012-11-30. Archived from the original on 2015-05-18.
  2. 2.0 2.1 2.2 2.3 "Are there disorders or conditions associated with spina bifida?". 2012-11-30. Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "What causes spina bifida?". 2012-11-30. Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
  4. 4.0 4.1 4.2 4.3 "How many people are affected by or at risk for spina bifida?". 2012-11-30. Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "How do health care providers diagnose spina bifida?". 2012-11-30. Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "What are the treatments for spina bifida & related conditions?". 2012-11-30. Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
  7. 7.0 7.1 Kondo, A; Kamihira, O; Ozawa, H (January 2009). "Neural tube defects: prevalence, etiology and prevention.". International Journal of Urology 16 (1): 49–57. doi:10.1111/j.1442-2042.2008.02163.x. பப்மெட்:19120526. 
  8. 8.0 8.1 "Spina Bifida Fact Sheet National Institute of Neurological Disorders and Stroke". www.ninds.nih.gov. 9 May 2017. பார்க்கப்பட்ட நாள் 30 March 2018.
  9. Deming, Laura (2011). Pediatric life care planning and case management (2nd ). Boca Raton, FL: CRC Press. பக். 392. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781439803585. https://books.google.com/books?id=XHdTydOXpuoC&pg=PA392. 
  10. "Neural Tube Defects (NTDs): Overview". 2012-11-30. Archived from the original on 9 May 2015. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
  11. Castillo-Lancellotti, C; Tur, JA; Uauy, R (May 2013). "Impact of folic acid fortification of flour on neural tube defects: a systematic review.". Public Health Nutrition 16 (5): 901–11. doi:10.1017/s1368980012003576. பப்மெட்:22850218. 
  12. M. Memet Ö̈zek (2008). Spina bifida : management and outcome. Milan: Springer. பக். 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788847006508. https://books.google.com/books?id=cpJcUNVgZGMC&pg=PA58. 
  13. Canfield, MA; Honein, MA; Yuskiv, N; Xing, J; Mai, CT; Collins, JS; Devine, O; Petrini, J et al. (November 2006). "National estimates and race/ethnic-specific variation of selected birth defects in the United States, 1999–2001.". Birth Defects Research. Part A, Clinical and Molecular Teratology 76 (11): 747–56. doi:10.1002/bdra.20294. பப்மெட்:17051527. 
  14. Bhide, P; Sagoo, GS; Moorthie, S; Burton, H; Kar, A (July 2013). "Systematic review of birth prevalence of neural tube defects in India.". Birth Defects Research. Part A, Clinical and Molecular Teratology 97 (7): 437–43. doi:10.1002/bdra.23153. பப்மெட்:23873811. 
  15. Puri, Prem (2011). Newborn surgery (3 ). London: Hodder Arnold. பக். 811. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781444149494. https://books.google.com/books?id=TSvSBQAAQBAJ&pg=PA811.