முக்தா இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்தா இராமசாமி
பிறப்புவெங்கடாச்சாரி இராமசாமி
1927[1]
இறப்பு1988
பணிதிரைப்பட தயாரிப்பாளர், முக்தா பிலிம்ஸ்
பிள்ளைகள்முக்தா ஆர். கோவிந்த்[2]

முக்தா இராமசாமி (Muktha Ramaswamy) என்பவர் ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளராவார். இவர் பெரும்பாலும் தமிழ் திரையுலகில் பணிபுரிந்துள்ளார். இவர் பிரபல இயக்குனரான முக்தா சீனிவாசனின் அண்ணன் ஆவார்.

வாழ்கை[தொகு]

இவர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின், பாபநாசம் அருகே மணப்புரம் என்ற கிராமத்தில் வெங்கடச்சாரியார், செல்லம்மாள் இணையருக்கு மகன்களாகப் பிறந்தார். 1945 இல் ராமசாமி மாடர்ன் தியேட்டர்சில் தட்டச்சராகப் பணியில் சேர்ந்தார். தட்டச்சராக இருந்த நிலையில் டி. ஆர். சுந்தரத்தின் காரியதரிசி என்ற பொறுப்புக்கு உயர்ந்தார். தன் சகோதிரர் சீனிவாசனை அழைத்துவந்து டி. ஆர் சுந்தரத்திடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டார். பிறகு தனியாக படங்களை இயக்கத் துவங்கினார் சீனிவாசன். பிறகு சகோதிரர்கள் இருவரும் இணைந்து இராமசாமியின் மகளான முக்தா பெயரில் 1960 இல் ‘முக்தா பிலிம்ஸ்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கினர். முதல் படமாக பனித்திரை படத்தை தயாரித்து முக்தா சீனிவாசன் இயக்கினார். அதன் பிறகு இவர்களின் பெயரோடு முக்தா என்ற பெயர் இணைந்தது.[3]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புக்கள்
1961 பனித்திரை தமிழ்
1967 தவப்புதல்வன் தமிழ்
1968 பொம்மலாட்டம் தமிழ்
1969 நிறை குடம் தமிழ்
1971 அருணோதயம் தமிழ்
1973 அன்பைத்தேடி தமிழ்
1978 அந்தமான் காதலி தமிழ்
1979 இமயம் தமிழ்
1982 சிம்லா ஸ்பெஷல் தமிழ்
1982 பரீட்சைக்கு நேரமாச்சு தமிழ்
1983 சிவப்பு சூரியன் தமிழ்
1984 இருமேதைகள் தமிழ்
1985 ஓரு மலரின் பயணம் தமிழ்
1988 கதாநாயகன் தமிழ்

குறிப்புகள்[தொகு]

  1. "Film-maker, writer and a diehard book lover - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
  2. "Srinivasan is back in the business with Muktha Govind". kollyinsider.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
  3. முக்தா பிலிம்ஸ் 60: திரையுலகில் ஒரு நிறைகுடம்! இந்து தமிழ், 2019, திசம்பர், 20

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தா_இராமசாமி&oldid=3567856" இலிருந்து மீள்விக்கப்பட்டது