கலாமண்டலம் சிவன் நம்பூதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாமண்டலம் சிவன் நம்பூதிரி
பிறப்பு1950
ஷொர்ணூர்
பணிநடனக் கலைஞர்

கலாமண்டலம் சிவன் நம்பூதிரி (Kalamandalam Sivan Namboodiri) இவர் ஒரு இந்திய பாரம்பரிய நாடக கலைஞராவார். கேரளாவைச் சேர்ந்த கூடியாட்டத்தை நிகழ்த்திய சாக்கியர் சமூகத்திற்கு வெளியில் இருந்து வந்த முதல் கலைஞர் சிவன் நம்பூதிரியாவார். கூடியாட்டம் கலைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 2012 ஆம் ஆண்டில், இந்திய அரசால் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. [1]

சுயசரிதை[தொகு]

கூடியாட்டம் முக ஒப்பனை
கேரள கலாமண்டலத்தில் கூத்தம்பலம்
குரு மணி மாதவ சாக்கியார் மற்றும் அவரது குழுவில் தோரனாயுதம் ( இராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்ட பாசாவின் அபிசேக நாடக நாடகத்தின் ஒரு பகுதி) கூடியாட்டம்(1962, சென்னை). இது கேரளாவுக்கு வெளியே முதல் கூடியாட்டம் நிகழ்ச்சி.

1950 ஆம் ஆண்டில் தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள பாலக்காட்டின் ஷோர்னூரில், ஒரு விவசாயியான அம்மன்கோட்டு மானக்கல் மாதவன் நம்பூதிரி, மற்றும் தேவகி அந்தர்ஜனம் ஆகியோருக்கு மூன்று மகன்களில் இளையவராக சிவன் நம்பூதிரி பிறந்தார். [2] [3] [4] இவர் கனயம் மற்றும் வதனம்குரிச்சி ஆகிய ஊர்களில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பைப் பெற்றார். ஆனால், ஒரு ஏழை மாணவராக இருந்ததால், 7 ஆம் வகுப்பிலேயே பள்ளியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. 1965 ஆம் ஆண்டில், தனது 14ஆவது வயதில், கதகளி கற்க கேரள கலாமண்டலத்தில் சேர்ந்தார்.

அந்த காலகட்டத்தில், புகழ்பெற்ற கூடியாட்ட மேதையான, பெயின்குளம் ராமன் சாக்கியார், கலாமண்டலத்தில் கூடியாட்டம் துறையை அமைக்கும் பணியில் இருந்தார். மேலும் நிறுவனத்தின் நிறுவனர் வள்ளத்தோள் நாராயண மேனன் மற்றும் கே.என். பிசரோடியின் வற்புறுத்தலின் பேரில், சிவன் தனது போக்கை மாற்றிக்கொண்டார். கூடியாட்டத்தின் முதல் தொகுப்பின் இரண்டு மாணவர்களில் ஒருவராக, கூடியாட்டம் படித்தார். [5] மேதைகளான பெயின்குளம் ராமன் சாக்கியார், கலாமண்டலம் இராமன்குட்டி நாயர் (கதகளியில் துன்பியலில் புகழ்பெற்றவர்), மற்றும் கலாமண்டலம் கிருட்டிணன்குட்டி போடுவால் (செண்டை நிபுணர்) ஆகியோரிடமிருந்து கலையை கற்ற சிவன்ஒரு அதிர்ஷ்டசாலியாவார். [3] [4]

6 வருட ஆரம்ப படிப்பிற்குப் பிறகு, சிவன் 2 வருட முதுகலை பட்டப்படிப்புக்கு கலாமண்டலத்தில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து புது தில்லியில் இந்திய அரசு கலாச்சாரத் துறையின் உதவித்தொகையின் உதவியுடன் மேம்பட்ட படிப்பினை மேற்கொண்டார். [3] [4]

1975 ஆம் ஆண்டில், கேரள கலாமண்டலத்தில் கூடியாட்டம் பீடத்தில் பயிற்றுவிப்பாளராக சேர்ந்தார். தற்போது அங்கு மிகவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியராக உள்ளார். 1980 ஆம் ஆண்டில், கோழிகோடு பல்கலைக்கழகம் இவரை நாடகப்பள்ளியின் ஒரு பகுதியாக பணியாற்ற அழைத்தது. அங்கிருந்து வருகை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். [4]

சிவன் நம்பூதிரி உள்ளூர் பள்ளியில் சமசுகிருத ஆசிரியரான இந்திரா என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பம் பாலக்காட்டில் வசிக்கிறது. [6]

தொழில் சிறப்பம்சங்கள்[தொகு]

சிவன் நம்பூதிரியின் தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சம் பாரிஸில்ஏற்பட்டது. அவர் கைலாசோதரணம் ( இராவணன் கைலாச மலையை தூக்குவது ) மற்றும் பார்வதிவிராகம் ( பார்வதி தேவி சிவபெருமானிடமிருந்து பிரிதல்) ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளைச் நிகழ்த்தியபோது, கருத்தில் கொள்ள வேண்டிய கலை வடிவங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான யுனெஸ்கோ நடுவர் மன்றம் யுனெஸ்கோவின் மனிதநேயத்தின் வாய்வழி மற்றும் புலனாகாத பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்பு சேர்ப்பதற்கு பரிசீலித்தது. நிகழ்ச்சியைத் தொடர்ந்து கூடியாட்டத்தை சேர்க்க நடுவர் மன்றம் ஒப்புதல் அளித்தது. [7]

1980 இல் கொலோன் விழாவில் ஜெர்மனியில் கூடியாட்ட நிகழ்ச்சியை நிகழ்த்தினார். [8]

மரபுரிமை[தொகு]

கூடியாட்டம் நிகழ்த்திய சாக்கியர் சமூகத்திற்கு வெளியில் இருந்து வந்த முதல் கலைஞர் சிவன் நம்பூதிரி. நிறுவன வழியில் கூடியாட்டம் கற்ற முதல் நபராகவும் இவர் கருதப்படுகிறார் இவர் நுழையும் வரை, கூடியாட்டம் குருகுல முறையின் கீழ் கற்பிக்கப்பட்டது. சிவன் நம்பூதிரிக்கு மற்றொரு முதல் காரணம், இவர் நங்கியார் கூத்து நிகழ்த்திய முதல் ஆண் ஆவார். நம்பியார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் நிகழ்த்தும் நங்கியர்களின் களமாக இருந்தது. கூடியாட்டம் ஆடைகளிலிலும் அதனுடன் இணைந்த இசையிலும் புரட்சியை ஏற்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. [9]

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]

  • பத்மஸ்ரீ - 2012 [1] [9]
  • சிறந்த இளம் கூடியாட்டம் நடிகருக்கான மார்கி தங்கப் பதக்கம் - 1970 [10]
  • சிறந்த இளம் கூடியாட்டம் நடிகருக்கான மார்கி தங்கப் பதக்கம் - 1971
  • சிறந்த இளம் கூடியாட்டம் நடிகருக்கான மார்கி தங்கப் பதக்கம் - 1972
  • கல்கத்தா மலையாள சங்கத்தின் நாட்டியகலா இரத்னம் விருது - 1992
  • இளம் சக ஊழியர் - மனித வள மேம்பாட்டு அமைச்சகம், கலாச்சாரத் துறை, புது தில்லி - 1995
  • கூடியாட்டத்திற்கான கேரள சங்கீத நாடக அகாதமி விருது - 1998
  • பாரம்பரிய சிறப்பிற்கான மிருணாளினி சாரபாய் விருது - 1999 (இவர் இந்த விருதைப் பெற்ற முதல் கலைஞர்)
  • வாசிங்டனின் சிமித்சோனியன் நிறுவனத்திடமிருந்து பாராட்டுக்கான சான்றிதழ்

படைப்புகள்[தொகு]

சிவன் நம்பூதிரியின் செயல்திறன் குறித்து இன்விஸ் மல்டிமீடியா என்ற ஊடகம் கிட்டத்தட்ட ஒரு மணி நேர காணொளிக் காட்ட்சியை வெளியிட்டுள்ளது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Padma Awards Announced". India: Ministry of Home Affairs. 25 January 2012. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
  2. "An inimitable artiste". https://www.thehindu.com/features/friday-review/theatre/an-inimitable-artiste/article2949939.ece. பார்த்த நாள்: 27 October 2018. 
  3. 3.0 3.1 3.2 "Kerala Tourism". பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.
  4. 4.0 4.1 4.2 4.3 "Artist's web site". Archived from the original on 12 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "An inimitable artiste". https://www.thehindu.com/features/friday-review/theatre/an-inimitable-artiste/article2949939.ece. பார்த்த நாள்: 27 October 2018. 
  6. Nayar, V. R. Prabodhachandran (1 March 2012). "An inimitable artiste". The Hindu. https://www.thehindu.com/features/friday-review/theatre/an-inimitable-artiste/article2949939.ece. பார்த்த நாள்: 27 October 2018. 
  7. "The Hindu Interview". பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.
  8. "The Hindu". Archived from the original on 4 பிப்ரவரி 2005. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  9. 9.0 9.1 "Amazon". பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.
  10. "Awards". Archived from the original on 12 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]