மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ministry of Electronics and Information Technology
Ministry மேலோட்டம்
முன்னிருந்த Ministry
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்Sanchar Bhawan
புது தில்லி
22°37′20″N 77°12′50″E / 22.62222°N 77.21389°E / 22.62222; 77.21389
ஆண்டு நிதி6,000 கோடி (US$750 மில்லியன்) (2018-19 est.)[1]
பொறுப்பான அமைச்சர்கள்
Ministry தலைமை
வலைத்தளம்meity.gov.in

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) என்பது இந்திய மத்திய அரசின் நிர்வாக நிறுவனம் ஆகும். இது தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திலிருந்து 19 ஜூலை, 2016 அன்று தகவல் தொழில்நுட்பக் கொள்கை, உத்தி மற்றும் மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு பொறுப்பான ஒரு முழுமையான அமைச்சக நிறுவனமாக உருவாக்கப்பட்டது.[4]

வரலாறு[தொகு]

முன்னதாக "தகவல் தொழில்நுட்பத் துறை" என்று அழைக்கப்பட்ட இது 2012 இல் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை என மறுபெயரிடப்பட்டது. [5] தகவல் தொழில்நுட்பத் துறை 2016, ஜூலை 19 அன்று, முழு அளவிலான அமைச்சகமாக மாற்றப்பட்டது. அன்று முதல் இது மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் என்று அழைக்கப்படுகிறது, இது தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திலிருந்து பிரிக்கப்பட்டதாகும். [6] [7]

திட்டங்கள்[தொகு]

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மின்னணு இந்தியா பயிற்சித் திட்டம் 2019, என்.ஐ.சி (2019 தொகுதி) க்கான மின்னணு இந்தியா(டிஜிட்டல் இந்தியா)வேலை வாய்ப்பு அல்லது பயிற்சித் திட்டம் (வெளி இணைப்பு), வணிக செயல்முறை புற ஒப்படைப்பு உயர்வு திட்டங்கள், மின்னணு வன்பொருள் திட்டங்கள், முனைவர் பட்டத் திட்டங்கள் ஆகியவை இந்த அமைச்சகத்தின் திட்டங்கள் ஆகும்.[8]

பணிகள்[தொகு]

குடிமக்கள் மேம்பாட்டிற்கான மின்-ஆளுமையை ஊக்குவித்தல், மின்னணுத்துறையில் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல்,தகவல் தொழில்நுட்பம் இயக்கச் சேவைகள் வழங்குதல், தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைத் தொழில்கள், இணைய நிர்வாகத்தில் இந்தியாவின் பங்கை மேம்படுத்துதல், மனித வளங்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய பன்முகப்படுத்தப்பட்ட அணுகுமுறையை பின்பற்றுதல், ஆய்வு மற்றும் வளர்ச்சியில் புதுமைகளை ஊக்குவித்தல், மின்னணுச் சேவைகள் மூலம் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான இணைய இடத்தை உறுதி செய்தல் ஆகியன இந்த அமைச்சகத்தின் பணிகள் ஆகும்.[8]

சேவைகள்[தொகு]

இந்தியா முழுவதிலும் செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள்,மின்னணுச் சேவைகள், தகவல் தொழில்நுட்ப இயக்கச் சேவைகள் யாவும் மின்னணுவாக்கம் செய்யப்பட்டு இத்துறையின் உதவியோடு செயல்படுத்தப்படுகின்றன.[9]

முகவாண்மை அமைப்புகள்[தொகு]

பின்வருவது "மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய குடியரசின் மத்திய அரசு" என்பவற்றில் உள்ள அமைப்புகளின் பட்டியல். [10]

தேசிய தகவல் மையம் (என்ஐசி)
தரப்படுத்தல் சோதனை மற்றும் தரச் சான்றிதழ் இயக்குநரகம் (STQC)
சான்றளிக்கும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டாளர் (சி.சி.ஏ)
சைபர் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (கேட்)
குறைகடத்தி ஒருங்கிணைந்த சுற்றுகள் தளவமைப்பு-வடிவமைப்புப் பதிவு
இந்திய கணினி அவசரநிலை பொறுப்புக் குழு (ICERT)
IN பதிவேடு

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழுள்ள நிறுவனங்கள்[தொகு]

மீடியா லேப் ஆசியா (எம்.எல்.ஏசியா)
தேசிய தகவல் மையச் சேவைகள் (NICSI) - தேசிய தகவல் மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனம்.
இந்தியாவின் தேசிய இணையப் பரிமாற்றம் (NIXI)
இணையப் பெட்டகம்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
சி.எஸ்.சி இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்
இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தன்னாட்சி சங்கங்கள்[தொகு]

கணினி வலையமைப்புக் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ERNET)
மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (சி-டிஏசி)
மின்னணுவியல் தொழில்நுட்பத்திற்கான பொருட்களுக்கான மையம் (சி-மெட்)
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் (NIELIT) - முன்பு DOEACC சொசைட்டி
பயன்பாட்டு மைக்ரோவேவ் மின்னணுப் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி சங்கம் (SAMEER)
இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் (எஸ்.டி.பி.ஐ)
மின்னணுவியல் மற்றும் கணினி மென்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு மன்றம் (ESC)

அமைச்சர்கள்[தொகு]

அமைச்சர்களின் பட்டியலுக்கு, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (இந்தியா)பார்க்கவும். [11]

பெயர் பதவிக்காலம் Political party

(Alliance)

Prime Minister
ரபி அகமது கித்வாய் 15 ஆகஸ்ட் 1947 2 ஆகஸ்ட் 1951 இந்திய தேசிய காங்கிரசு ஜவகர்லால் நேரு
அம்ரித் கௌர் 2 ஆகஸ்ட் 1951 13 மே 1952
ஜெகசீவன்ராம் 13 மே 1952 7 டிசம்பர் 1956
ராஜ் பகதூர் 7 டிசம்பர் 1956 17 ஏப்ரல் 1957
லால் பகதூர் சாஸ்திரி 17 ஏப்ரல் 1957 28 மார்ச் 1958
எஸ்.கே பாட்டில் 29 மார்ச் 1958 24 ஆகஸ்ட் 1959
ஜவகர்லால் நேரு 25 ஆகஸ்ட் 1959 2 செப்டம்பர் 1959
ப. சுப்பராயன் 2 செப்டம்பர் 1959 9 ஏப்ரல் 1962
ஜெகசீவன்ராம் 10 ஏப்ரல் 1963 31 ஆகஸ்ட் 1963
அசோக்குமார் சென் 1 September 1963 13 June 1964
லால் பகதூர் சாஸ்திரி
சத்ய நாராயண் சின்ஹா 13 June 1964 12 March 1967
இந்திரா காந்தி
ராம் சுபா சிங் 13 March 1967 14 February 1969
சத்ய நாராயண் சின்ஹா 14 February 1969 8 March 1971
இந்திரா காந்தி 9 March 1971 17 March 1971
ஷேர் சிங் 18 March 1971 2 May 1971
ஹேமாவதி நந்தன் பகுகுனா 2 May 1971 8 November 1973
ராஜ் பகதூர் 8 November 1973 11 January 1974
காசு பிரம்மானந்த ரெட்டி 11 January 1974 10 October 1974
சங்கர் தயாள் சர்மா 10 October 1974 24 March 1977
மொரார்ஜி தேசாய் 24 March 1977 26 March 1977 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்
பிரகாஷ் சிங் பாதல் 26 March 1977 27 March 1977 சிரோமணி அகாலி தளம் rowspan="1" width="3px" bgcolor="வார்ப்புரு:Akali Dal/meta/color" |
ஜார்ஜ் பெர்னாண்டஸ் 28 March 1977 6 July 1977 ஜனதா கட்சி
பிரிஜ் லால் வர்மா 6 July 1977 28 July 1979
சரண் சிங் 28 July 1979 30 July 1979 மதச்சார்பற்ற ஜனதா கட்சி(S) சரண் சிங்
Zulfiquarullah

(தனிப்பொறுப்பு)

30 July 1979 27 November 1979
சரண் சிங் 27 November 1979 7 December 1979
சியாம் நந்தன் பிரசாத் மிஸ்ரா 7 December 1979 14 January 1980
இந்திரா காந்தி 15 January 1980 16 January 1980 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி
பீஷ்ம நாராயண் சிங் 16 January 1980 3 March 1980
[[சி. எம் ஸ்டீபன்] 3 March 1980 2 September 1982
அனந்த் பிரசாத் சர்மா 2 September 1982 14 February 1983
இந்திரா காந்தி 14 February 1983 31 October 1984
ராஜீவ் காந்தி 31 October 1984 4 November 1984 ராஜீவ் காந்தி
வி.என். காட்கில் 4 November 1984 31 December 1984
ராம் நிவாஸ் மிர்தா(தனிப்பொறுப்பு) 31 December 1984 22 October 1986
அர்ஜுன் சிங் 22 October 1986 14 February 1988
வசந்த் சாத்தே 14 February 1988 25 June 1988
பீர் பகதூர் சிங் 25 June 1988 30 June 1989
கிரிதர் கமாங்(தனிப்பொறுப்பு) 4 July 1989 2 December 1989
வி. பி. சிங் 2 December 1989 6 December 1989 ஜனதா தளம் வி. பி. சிங்
கே.பி உன்னிகிருண்ஷ்ணன் 6 December 1989 23 April 1990 Congress (S)
ஜனேஸ்வர் மிஸ்ரா 30 April 1990 5 November 1990 ஜனதா தளம்
வி. பி. சிங் 6 November 1990 10 November 1990
சந்திரசேகர் 10 November 1990 21 November 1990 சமாஜ்வாடி ஜனதாக் கட்சி (Rashtriya) சந்திரசேகர்
சஞ்சய் சிங் 22 November 1990 21 June 1991
ராஜேஷ் பைலட்(தனிப்பொறுப்பு) 21 June 1991 17 January 1993 இந்திய தேசிய காங்கிரசு பி. வி. நரசிம்ம ராவ்
சுக்ராம்(தனிப்பொறுப்பு) 17 January 1993 16 May 1996
அடல் பிகாரி வாச்பாய் 16 May 1996 1 June 1996 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
பேனி பிரசாத் வர்மா 1 June 1996 19 March 1998 சமாஜ்வாதி கட்சி தேவ கௌடாஐ. கே. குஜரால்
அடல் பிகாரி வாச்பாய் 19 March 1998 21 March 1998 பாரதிய ஜனதா கட்சி அடல் பிகாரி வாச்பாய்
[பூட்டா சிங்]] 21 March 1998 19 April 1998
அடல் பிகாரி வாச்பாய் 19 April 1998 20 April 1998
சுஷ்மா சுவராஜ் 20 April 1998 11 October 1998
அடல் பிகாரி வாச்பாய் 11 October 1998 6 December 1998
[ஜக்மோகன்] 6 December 1998 8 June 1999
அடல் பிகாரி வாச்பாய் 8 June 1999 13 October 1999
இராம் விலாசு பாசுவான் 13 October 1999 1 September 2001 ஐக்கிய ஜனதா தளம்(U)
பிரமோத் மகாஜன் 2 September 2001 28 January 2003 பாரதிய ஜனதா கட்சி
அருண் சோரி 29 January 2003 22 May 2004
தயாநிதி மாறன் 23 May 2004 15 May 2007 திராவிட முன்னேற்றக் கழகம் மன்மோகன் சிங்
ஆ. ராசா 16 May 2007 14 November 2010
மன்மோகன் சிங் 15 November 2010 இந்திய தேசிய காங்கிரசு
கபில் சிபல் 19 January 2011 26 May 2014
இரவி சங்கர் பிரசாத் 26 May 2014 5 July 2016 பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோதி

மாநில அமைச்சர்கள்[தொகு]

  • சுரிந்தர்ஜீத் சிங் அலுவாலியா

குறிப்புகள்[தொகு]

  1. "Budget data" (PDF). www.indiabudget.gov.in. 2019. Archived from the original (PDF) on 2018-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-12-25.
  2. "Who's who | Ministry of Electronics and Information Technology, Government of India". Meity.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-09-15.
  3. "People and Offices". meity.gov.in. Archived from the original on 2017-01-25. பார்க்கப்பட்ட நாள் 2019-12-25.
  4. https://www.facebook.com/meityindia
  5. "Department of Information Technology renamed", என்டிடிவி, 18 April 2012, archived from the original on 18 டிசம்பர் 2014, பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2019 {{citation}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  6. "Deity becomes a new ministry leg up for Ravi Shankar Prasad", economictimes.indiatimes.com
  7. https://csc.gov.in/meity
  8. 8.0 8.1 "Secretary's Office - Ministry of Electronics and Information Technology, Government of India". meity.gov.in.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-29. பார்க்கப்பட்ட நாள் 2019-12-25.
  10. "Deity Organisations". Archived from the original on 21 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 November 2013.
  11. "Former Ministers - Ministry of Electronics and Information Technology, Government of India". meity.gov.in.