சி. என். அகமது மெளலவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. என். அகமது மெளலவி
பிறப்பு1905 (1905)
செரூர், ஏறநாடு வட்டம், மலப்புறம் மாவட்டம், கேரளம், இந்தியா
இறப்பு27 ஏப்ரல் 1993(1993-04-27) (அகவை 88)
கோழிக்கோடு, கேரளம்
பணிகட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி
பெற்றோர்
  • ஆசான் குட்டி (தந்தை)
  • கதீஜா (தாயார்)
விருதுகள்1989 கேரளா சாகித்திய அகடாமி சக ஊழியர்

சி. என். அகமது மெளலவி (C. N. Ahmad Moulavi) (1905 - 1993) என்பவர் ஒரு மலையாள இலக்கியத்தின் இந்திய எழுத்தாளர் ஆவார். மலையாளத்தில் திருக்குர்ஆனை முதல் முழுமையான வெளியீட்டின் மொழிபெயர்ப்பாளராக நன்கு அறியப்பட்டவர். இஸ்லாம் பற்றிய பல புத்தகங்களை எழுதியவர் மற்றும் மலபார் பிரதேசத்தின் முஸ்லிம்களிடையே கல்வி பரப்புவதற்கு பங்களித்ததாகவும் கூறப்படுகிறது. 1959-64 காலகட்டத்தில் கேரள சாகித்ய அகாதமியின் உறுப்பினரான மௌலவி 1989 ஆம் ஆண்டில் அகாதமியால் புகழ்பெற்ற சக ஊழியராக கௌரவிக்கப்பட்டார்.

சுயசரிதை[தொகு]

பாகியாத் சாலிகாத் அரபு கல்லூரி

சி. என். அகமது மெளலவி செரூர், தென்னிந்திய மாநிலமான கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் ஏறநாட்டிலிலுள்ள ஒரு கிராமத்தில் நாதன்கோடன் ஆசான் குட்டி மற்றும் ஆழுவாத் கதீஜா ஆகியோருக்கு பிறந்தார். [1] ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்த இவர், தனது சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தார். மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே ஆரம்பக் கல்வியைப் பெற முடிந்தது. அதன் பிறகு இவர் ஒரு விவசாயப் பண்ணையில் வேலை செய்ய வேண்டியிருந்தது. தனது பதினாறாவது வயதில், மீண்டும் படிக்கச் சென்றார். முதலில் குஞ்சலம் முசலியாரின் கருவரக்குண்டு கிராண்ட் தார்ஸிலும், பின்னர் கட்டுகண்டன் குஞ்சாகமது முசலியாரின் கீழும் படித்தார். இதைத் தொடர்ந்து சென்னை ஜமாலியா அரபு கல்லூரி மற்றும் பம்பாயில் கே.டி.இப்ராஹிம் மௌலவியின் கீழும் படித்த்துள்ளார். 1928 இல் வேலூரில் உள்ள பாகியாத் சாலிகாத் அரபு கல்லூரிக்குச் சென்று அங்கிருந்து 1931 இல் அப்சல் உல் உலமா தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர், கேரளா திரும்பி மத பயிற்றுவிப்பாளராக மலப்புரம் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். பின்னர், தனது சொந்த ஆடைத் தொழிலைத் தொடங்க வேண்டி 1944 இல் இப்பணியை விட்டு விலகினார்.

மௌலவி அன்சாரி என்ற பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். இது 14 இதழ்களை வெளியிட்ட பின்னர் செயலிழந்தது. 1955ஆம் ஆண்டில் நியூ அன்சாரி என்ற புதிய பெயரில் இவர் பத்திரிகையை மீண்டும் தொடங்கினாலும், இதன் வெளியீடு நீண்ட காலம் நீடிக்கவில்லை. [1] 1964 இல் கிழக்கு எரநாடு கல்விச் சமூகம் உருவாக்கப்பட்டபோது, மௌலவி அச்சமூகத்தின் நிறுவனத் தலைவரானார். 1965 ஆம் ஆண்டில் முனைவர் கபூர் நினைவு எம்.இ.எஸ் மம்பாட் கல்லூரியைத் தொடங்கிய சமூகம் 1967 இல் முஸ்லிம் கல்விச் சங்கத்திடம் (எம்.இ.எஸ்) ஒப்படைத்தது. [2]

மௌலவி 1993 ஏப்ரல் 27 அன்று தனது 88 வயதில் கோழிக்கோட்டில் காலமானார். [1]

மரபு மற்றும் கௌரவங்கள்[தொகு]

இஸ்லாமிய தனவித்ரனபாததி (இஸ்லாம் பாரம்பரியத்தில் செல்வத்தின் விநியோகம்) என்ற சர்ச்சைக்குரிய புத்தகம் உட்பட இஸ்லாமிய ஆய்வுகள் குறித்த பன்னிரண்டு புத்தகங்களை மௌலவி வெளியிட்டுள்ளார் . [3] குர்ஆனின் முழுமையான மொழிபெயர்ப்பை மலையாளத்தில் வெளியிட்ட முதல் நபர் [4] இவர் 1963 இல் வெளியிட்டுள்ளார். [5] குர்ஆனின் மொழிபெயர்ப்பு ஒரு தெய்வ நிந்தனையாகக் கருதப்பட்ட நேரத்தில். [6] முஸ்லிம்களிடையே விவாகரத்து மற்றும் பராமரிப்பு போன்ற பல சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி இவர் எழுதினார். [7] இவரது புத்தகமான, புகழ்பெற்ற மாப்பிலா இலக்கிய பாரம்பரியம் என்பது [8] கேரளாவில் உள்ள முஸ்லீம் இலக்கியம் பற்றிய விரிவான படைப்பாஅகும். [9] [10] அரபு-மலையாள இலக்கியத்தின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றிய விவரங்களுடன் இது எழுதப்பட்டது. [11] 1959 முதல் 1964 வரை ஐந்து ஆண்டுகள் கேரள சாகித்திய அகாதமியின் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1989 ஆம் ஆண்டில், இவர் அகாடமியால் ஒரு புகழ்பெற்ற சக ஊழியராக சேர்க்கப்பட்டார். [12] இவரது பிறந்த நூற்றாண்டு 2005ஆம் ஆண்டில் கோழிக்கோட்டில் கொண்டாடப்பட்டது இவரது அனைத்து எழுத்துக்களின் கண்காட்சியும் அதன் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டது. [13]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi. 2019-04-05. Archived from the original on 2019-04-06. பார்க்கப்பட்ட நாள் 2019-04-05.
  2. "MES Mampad College". mesmampad.org. 2019-04-06. Archived from the original on 2019-07-26. பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
  3. "List of works". Kerala Sahitya Akademi. 2019-04-05. Archived from the original on 2019-04-06. பார்க்கப்பட்ட நாள் 2019-04-05.
  4. The Supreme Muslim Council: Islam Under the British Mandate for Palestine. https://books.google.com/books?id=ChEVAAAAIAAJ&pg=PA462. 
  5. MediaoneTV Live (2014-07-03). "C N Ahmed Maulavi: The Malayali Pioneer in Quran Translation". பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
  6. Mappila Muslim Culture: How a Historic Muslim Community in India Has Blended Tradition and Modernity. 27 April 2015. https://books.google.com/books?id=XjSzCAAAQBAJ&pg=PA236. 
  7. The Rights of Women in Islam. https://books.google.com/books?id=Q3uB_umOEbwC&pg=PA169. 
  8. "Mahathaya Mappila Sahitya Paramparyam". kithabi.com. 2019-04-06. Archived from the original on 2018-07-17. பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
  9. Encyclopaedia of Indian Literature: A-Devo. https://books.google.com/books?id=ObFCT5_taSgC&pg=PA106. 
  10. Educational Empowerment of Kerala Muslims: A Socio-historical Perspective. https://books.google.com/books?id=PCBdogPnnqsC&pg=PA30. 
  11. "Contribution of Muslims in the Development of Malayalam Language and Literature". www.ummid.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
  12. "Kerala Sahitya Akademi Fellowship". Kerala Sahitya Akademi. 2019-04-06. Archived from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
  13. "The Hindu : Kerala News : In remembrance". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Kerala Sahitya Akademi Fellowship

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._என்._அகமது_மெளலவி&oldid=3774756" இலிருந்து மீள்விக்கப்பட்டது