புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1991
முதல்வர்முனைவர்.எம் அருமை செல்வம்
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்[1]
இணையதளம்https://sjctnc.edu.in

புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அல்லது செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (St. Joseph's College of Arts & Science) தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தன்னாட்சி பெற்ற கலைக் கல்லூரி ஆகும். 1991ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரியானது, தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2] கலை, அறிவியல் மற்றும் பொருளாதார பிரிவுகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை இக்கல்லூரி கற்பித்து வருகிறது.

தோற்றம்[தொகு]

பாரம்பரியமிக்க இந்த கல்லூரியின் வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. பாரிஸ் மாநகரத்தில் இருந்து இந்தியாவிற்கு அருட்தொண்டாற்ற வந்த அருட்தந்தையர் பலரின் முயற்சியால் 1868 ஆம் ஆண்டு முதன்முதலில் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் 1884 ஆம் ஆண்டு அந்த பள்ளி கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதைய பள்ளி செயலாளராக இருந்த அருட்தந்தை தர்பேஸ் அவர்கள் இந்த உயர்நிலைப்பள்ளி, கல்லூரியாக உயர்த்தப்படுவதற்க்கும் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவதற்கும் காரணமானவர் ஆவார். பிரிக்கப்படாத தென்னாற்காடு மாவட்டத்தின் மாவட்ட கணக்காயர் இன் குறிப்பின்படி அந்த காலகட்டத்தில் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியே அந்த மாவட்டத்தில் இருந்த ஒரே கலை மற்றும் அறிவியல் கல்லூரி என அறியமுடியுகிறது. ஆனால் 1909ஆம் ஆண்டு நிர்வாகம் மற்றும் நிதிப்பற்றாக்குறை காரணமாக இக்கல்லூரி உயர்நிலைப் பள்ளியாக தரம் குறைக்கப்பட்டது. அதிலிருந்து மறுபடியும் கல்லூரியாக உயர்த்துவதற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் அருட் சகோதரர்கள் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி 1991ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி முதல் உயர்திரு அருட்தந்தை ஆர் இரட்சகர் அவர்களின் முயற்சியால் இந்த கல்லூரி மறுபடியும் அப்போதைய தமிழ்நாட்டின் கவர்னரான பீஷ்மா நரேன் சிங் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. [3] 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி புனித வளனார் கலை அறிவியல் கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் நிரந்தரமாக இணைக்கப்பெற்றது. மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவினரால் 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. மேலும் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி 12 B குறீயிட்டினைப் பெற்றது. 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தன்னாட்சி கல்லூரிகளுக்கான தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் தர சான்றிதழ் பெற்றது. தற்போதைய கல்லூரி செயலாளர் அருட்திரு ஜி பீட்டர் ராஜேந்திரம் அவர்கள் தலைமையில், இக்கல்லூரி இயங்கி வருகிறது.

கல்வி துறைகள்[தொகு]

ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பயிலும் இந்த கல்லூரியில் கலை அறிவியல் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் இளங்கலை முதுகலை மற்றும் முனைவர் பட்ட பிரிவுகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

அறிவியல்[தொகு]

கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், உயிரியல், உயிர்வேதியியல், நுண்ணுயிரியல், புள்ளியியல், உயிர்வேதியியல், விலங்கியல், கணினி பயன்பாடுகள், உளவியல் போன்ற அறிவியல் படிப்புகளில் இளங்கலை பட்டமும், முதுகலை பட்டமும் பெற வகுப்புகள் நடைபெறுகின்றன.

கலை மற்றும் வணிகம்[தொகு]

பொருளாதாரம், வங்கி மேலாண்மை, வணிக மேலாண்மை, வணிகவியல், வரலாறு, ஆங்கிலம், தமிழ், கணினி பயன்பாடு, உளவியல், சமூக சேவை போன்ற கலை மற்றும் வணிக பிரிவுகளில், இளங்கலைப் பட்டத்திற்கும், முதுகலைப் பட்டத்திற்கும் பயிற்றுவிக்கப் படுகின்றன.

சேவைகள்[தொகு]

புனித வளனார் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மட்டுமல்லாது விளையாட்டு, தொலைதூரக்கல்வி, ஆலோசனை மையம், பெண்கள் நலன் மற்றும் மாணவர் சங்கம் போன்றவைகளின் மூலம் சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் 1996 ஆம் ஆண்டு கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட புதிதில் கிட்டத்தட்ட ஆயிரத்து 150 க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் புத்தகங்களின் எண்ணிக்கை, நாளிதழ்கள் மற்றும் தினசரி நாளிதழ்களின் எண்ணிக்கை அதிகரித்து 2006 ஆம் ஆண்டு நூலகத்திற்கு என தனி கட்டிடம் அமைக்கப்பட்டது. தற்சமயம் 31,500 க்கும் மேற்பட்ட நூல்கள், 72 சஞ்சிகைகள் மற்றும் 8 தினசரி நாளிதழ்கள் வாங்கப்பட்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் படுத்தப்படுகிறது.[3]

முன்னாள் மாணவர்கள்[தொகு]

கடலூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சார்ந்த மாணவர்கள் இந்தக் கல்லூரியின் மாணவர்கள் இந்தக் கல்லூரியின் சார்ந்த மாணவர்கள் இந்தக் கல்லூரியின் மாணவர்கள் இந்தக் கல்லூரியின் கல்லூரியின் மூலம் பயனடைந்து வருகின்றனர். அவர்களில் பலரும் கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர்களாகவும், கணினி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அரசு துறைகள் மற்றும் வங்கி துறைகள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு பெற்று முன்னேறி உள்ளனர். மேலும் பலர் சொந்தமாக தொழில் தொடங்கியுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Annamalai University". annamalaiuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.
  2. "Affiliated College of Thiruvalluvar University" (PDF).
  3. 3.0 3.1 3.2 alumni/ "முன்னாள் மாணாக்கர்=". {{cite web}}: Check |url= value (help)

இவற்றையும் காணவும்[தொகு]