பெரும்பாளைக் கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரும்பாளைக் கீரை
Chard
செந்தண்டுள்ள பெரும்பாளைக் கீரை
செந்தண்டுள்ள பெரும்பாளைக் கீரை
இனம்
பீட்டா வல்காரிசு
பயிரிடும்வகைப் பிரிவு
சிக்ளாக் குழு, பிளாவெசென்சுக் குழு
தோற்றம்
கடற்பீட்ரூட் (பீட்டா வல்காரிசு சிற்றினம். மாரிட்டைமா)
பல.
பெரும்பாளைக் கீரை

பெரும்பாளை (Chard) அல்லது சுவிசு பெரும்பாளை (பீட்டா வல்காரிசு சிற்றினம். வல்காரிசு, சிக்ளாக் குழு, பிளாவெசென்சுக் குழு) (/ɑːrd/) என்பது ஒரு சீமைக் கீரைவகையாகும். இது பிளாவெசென்சுக் குழுவிலும் சிக்ளாக் குழுவிலும் அமையும் பயிரிடும்வகைகளில் ஒன்றாகும். இதன் இலைத்தண்டு மிகப் பெரியதாக அமைகிறது. தண்டையும் தனியாக சமைத்து உண்ணலாம்.[1] சிக்ளாக் குழு வகை புதினா பீட்கீரையாகும்மிதன் கீரை பசுமையாகவோ செந்நிரமாகவோ அமைகிறது; இலையகத் தண்டு வழக்கமாக வெண்ணிறத்திலோ மஞ்சள் நிறத்திலோ செந்நிறத்திலோ இருக்கும்.[2]

அனைத்துக் கீரைகளைப் போலவே பெரும்பாளைக் கீரையும் ஊட்டச்சத்துகள் மிகுந்ததாகும். உடல்நலம் பேணவல்ல இக்கீரையை மக்கள் விரும்பி உண்கின்றனர்.[3] இது பீட்போல உள்ளதால், பல நூற்றாண்டுகளாகச் சமைத்து உண்ணப்படுகிறது. இதன் பொதுப் பெயர்கள் குழப்பந் தருவன;[4] இதற்கு வெள்ளி பீட், நிலைப் புதீனா, பீட் புதீனா, கடற்கேல் பீட், or பீட் கீரை எனப் பல பொதுப் பெயர்கள் வழங்குகின்றன.[5][6]

பயிர் வளர்ப்பும் அறுவடையும்[தொகு]

பெரும்பாளை ஆண்டுக்கு இருமுறை விளையும் பயிராகும். வழக்கமாக, வட அரைக்கோளத்தில், அறுவடைக் காலத்தைக் கணக்கிட்டு ஜூன் முதல் அக்தோபர் மாதத்துக்குள் விதைப்பு நடக்கிறது. இக்கீரையை இளங்கீரையாக அறுவடை செய்யலாம்; அல்லது கீரையும் தண்டும் நன்கு முதிர்ந்த பிறகும் அறுவடை செய்யலாம். அறுவடையைத் தொடர்ந்து மும்முறைகளில் செய்யலாம்.[7] பச்சைக் கீரை எளிதாகக் கெட்டுவிடக் கூடியதாகும்.

பெரும்பாளைக் கீரை மிளிரும் பச்சை நிறத்தில் முகடுடைய பேரலகு(பெருமடல்)களைக் கொண்டதாகும். இதன் இலையும் தண்டும், பயிரிடும் வகையைப் பொறுத்து, வெண்ணிரத்திலோ மஞ்சள் நிறத்திலோ செந்நிறத்திலோ அமையும்.[2]

இது இளவேனிற்கால அறுவடை தாவரமாகும். வட அரைக்கோளத்தில் இது ஏப்பிரலில் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை மே மாதம் முடியும் வரையிலும் தொடர்கிறது. இது கேல், புதினா, சிறுகீரையை விட நீண்ட அறுவடைக் காலமுள்ள வன்மை மிக்க இலைமடல்களைக் கொண்ட கீரைவகை ஆகும். நண்பகல் வெப்பநிலை தொடர்ந்து 30 °C (86 °F) அளவை விட உயரும்போது இக்கீரையின் அறுவடைக் காலம் முடிவுக்கு வரும்.

கீரையின் உட்பொருட்கள்[தொகு]

பெரும்பாளைக் கீரை, சமைத்து உப்பிடாததில் அமையும் ஊட்டச்சத்துகள் பின்வருமாறு:

  • நீர்=92.65 கி
  • கி.கலோரி=84
  • புரதம்=1.88கிg
  • கொழுப்பு=0.08 கி
  • மாவு=4.13 கி
  • நாரிழை=2.1 கி
  • சர்க்கரை=1.1 கி
  • கால்சியம்_மி.கி=58
  • இரும்பு_மி.கி=2.26
  • மகனீசியம்_மி.கி=86
  • பொட்டாசியம்_மி.கி=549
  • சோடியம்_மி.கி=179
  • நாகம்_மிகி=0.33
  • மாங்கனீசு_மி.கி=0.334
  • C உயிர்ச்சத்து_மி.கி=18
  • தயாமின்_மி.கி=0.034
  • இரிபோஃபிளேவின்_மி.கி=0.086
  • நியாசின்_மி.கி=0.36
  • பான்டோதீனிக்_மிகி=0.163
  • B6 உயிர்ச்சத்து _மி.கி=0.085
  • ஃபோலேட்_ug=9
  • கோலைன்_மி.கி=28.7
  • A உயிர்ச்சத்து _ug=306
  • பீட்டாக் கரோட்டீன்_ug=3652
  • A உயிர்ச்சத்து _iu=6124
  • உலூட்டீன்_ug=11015
  • E உயிர்ச்சத்து _மி.கி=1.89
  • K உயிர்ச்சத்து_ug=327.3
குறிப்பு=அமெரிக்கத் தரவுத் தளம் இணைப்பு பரணிடப்பட்டது 2017-07-23 at the வந்தவழி இயந்திரம்

உணவுப் பயன்பாடு[தொகு]

அப்போது பறித்த கீரையைப் பச்சையாகவே காய்குவைகள், நறுஞ்சுவைநீர்கள், மூட்டையாப்பங்கள் ஆகியவற்ரில் நேரடியகப் பயன்படுத்தலாம்.[8] The raw leaves can be used like a tortilla wrap.[8] பெரும்பாளைக் கீரைகளும் தண்டுகளும் வழக்கமாக சமைத்து உண்ணப்படுகின்றன. சமைப்பதால் அதன் கடுப்பும் காரமும் குறைகிறது.[8]

ஊட்டச்சத்துகள்[தொகு]

பெரும்பாளைக் கீரையின் 100 கிராமில் 19 கி.கலோரி உணவுச் சத்துகளும் 19% அளவினும் கூடுதலான அன்றாட ஊட்டப் பொருள்களும் உயிர்ச்சத்துகள் A, K, and C ஆகியன முறையே 122%, 1038%, 50%, அளவுகளிலும் அமைகின்றன.[3] பச்சைக் கீரையில் கணிசமான அளவு ஈ உயிர்ச் சத்தும் மகனீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு போன்ற கனிமச்சத்துகளும் உள்ளன.[3] ஆனால், பச்சைக் கீரையில் குறைந்த அளவே புரதமும், கொழுப்பும், உணவு நார்ப்பொருளும் மாவுப் பொருள்களும்(கரிம நீரகவேற்றுகளும்) அமைகின்றன.[3]

சமைத்த கீரையில் உயிர்ச்சத்துகளும் கனிமச்சத்துகளும் குறைந்தாலும், அது இன்னமும் கணிசமான அன்றாட ஊட்டப் பொருள்களை வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Librarie Larousse, தொகுப்பாசிரியர் (1984). Larousse Gastronomique: The World's Greatest Cooking Encyclopedia. The Hamlyn Publishing Group Limited. 
  2. 2.0 2.1 "Swiss chard varieties". Cornell Garden Based Learning. Ithaca, NY: Cornell University. 2016.
  3. 3.0 3.1 3.2 3.3 "Nutrition Facts and Analysis for Chard per 100 grams, USDA National Nutrient Database, version SR-21". Conde Nast. 2014. பார்க்கப்பட்ட நாள் 2013-04-15.
  4. "Swiss chard". Growing Guide. Ithaca, NY: Cornell University. 2006.
  5. "Beta vulgaris (Leaf Beet Group)". Missouri Botanical Garden, St. Louis, MO. 2017. பார்க்கப்பட்ட நாள் 19 January 2017.
  6. "Production guidelines for Swiss chard" (PDF). Department of Agriculture, Forestry and Fisheries, Republic of South Africa. Archived from the original (PDF) on 6 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Dobbs, Liz (2012). "It's chard to beet". The Garden (Royal Horticultural Society) 137 (6): 54. 
  8. 8.0 8.1 8.2 "All about Swiss chard". UnlockFood.ca, Dietitians of Canada. 2019. பார்க்கப்பட்ட நாள் 5 November 2019.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chard
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பாளைக்_கீரை&oldid=3853101" இலிருந்து மீள்விக்கப்பட்டது