தினா சானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினா சானி (Tina Sani) ஒரு பாகிஸ்தான் பெண் பாடகி ஆவார். அவரது பாரம்பரிய இசைப் பாடல்கள் மற்றும் பகுதி-பாரம்பரிய உருது கசல் பாடல்களால் பிரபலமானவராக அறியப்படுகிறார். [1] [2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

தினா சானி, முன்னைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்த டாக்காவில் பிறந்தார். அவரது குடும்பம், அவர் பிறந்த சில ஆண்டுகளில் காபூலுக்கு குடிபெயர்ந்தது. அங்கு அவரது தந்தை நசீர் சாஹ்னி கராச்சிக்குச் செல்வதற்கு முன்பு ஒரு எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்தார். தினா சானி, கராச்சி அமெரிக்கன் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, வணிகக் கலை பயின்றார். புதுதில்லி கரானாவைச் சேர்ந்த உஸ்தாத் ரம்ஜான் கான் மற்றும் உஸ்தாத் சந்த் அம்ரோஹ்வி ஆகியோரின் மகன் உஸ்தாத் நிஜாமுதீன் கான் என்பவரால் அவர் பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றார். தினா கசல் மேஸ்ட்ரோ மெஹ்தி ஹாசனிடமிருந்து சிறப்புப் பயிற்சியையும் பெற்றார். [3]

தொழில்[தொகு]

தினா சானி 1977 இல் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். விளம்பர வணிகத்தின் ஆக்கத்திறன் சார்ந்த அனைத்து அம்சங்களிலும் அவர் ஈடுபட்டிருந்தார். விளம்பரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் இசையைக் கேட்பது மற்றும் மதிப்பீடு செய்வது உட்பட இசை சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்தார். தினா, கராச்சி அமெரிக்கன் பள்ளியின் கலைப் பிரிவிலும் கற்பித்தார்.

பாடும் தொழில்[தொகு]

1980 ஆம் ஆண்டில், ஆலம்கீர் தொகுத்து வழங்கிய இளைஞருக்கான 'தரங்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடுவதற்கு, தயாரிப்பாளர் இஷ்ரத் அன்சாரிஇவரை அறிமுகப்படுத்தியது இவர் தொழில்முறைப் பாடகராக இசையுலகில் நுழைய வழி சமைத்தது. [4]

தெற்காசியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கஜல் பாடகர்களான மெஹ்தி ஹசன், மாலிகா புக்ராஜ், பேகம் அக்தர், முக்தார் பேகம் மற்றும் ஃபரிதா கானம் ஆகியோரின் செல்வாக்கு இவரிடம் காணப்பட்டாலும், கசல் பாடல்களில் தனது சொந்த பாணியை அவர் உருவாக்கியுள்ளார். அர்ஷத் மெஹ்மூத் இசையமைத்த பஹார் ஆயி, போல் கெ லேப் அசாத்ஹெய்ன் தேரே ஆகிய கவிதைகள் உட்பட ஃபைஸ் அகமது எழுதிய கவிதைகளைப் பாடி பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் அதிக வரவேற்பைப் பெற்றார். [2] சமகால கவிஞர்களின் கவிதைகளை அவர் மிக எளிதாகப் பாடுகிறார். பிரபல கவிஞர்களான சௌக், காலிப், மிர் தாகி மிர் மற்றும் ஜலாலுதீன் ரூமி ஆகியோரின் படைப்புகளையும் அதேயளவு இலகுவாகப் பாடக்கூடியவர். [4]

இக்பாலின் ஷிக்வா ஜவாப்-இ-ஷிக்வாவைப் பற்றி அவர் பாடியிருப்பது, அவருக்கு சிறந்த விமர்சனங்களைப் பெற்றுத் தந்துள்ளது. மேலும், இம் முயற்சி, அவர் இதுவரை பாடியதில் மிக நீண்ட கவிதைகளாகவும் உள்ளது.[5]

13 ஆம் நூற்றாண்டின் விசித்திரமான கவிஞரான ரூமி இன் பாரசீக வசனங்களை உருது மொழியில் கொண்டுவருவதற்காக கோனா ஸ்டுடியோவுக்கான(பாகிஸ்தான்) மத்னவியின் ஆரம்ப வசனங்களை தினா சானி பாடினார். [6]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

முதல் பாகிஸ்தான் ஐடல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினர் நீதிபதியாக தினா சானி அழைக்கப்பட்டார்.

தினா சானி, 2016ம் ஆண்டு நடைபெற்ற லாகூர் இசை சந்திப்பின் ஒரு பகுதியாக இருந்தார். இதில் "செம்மொழி இசை பாராட்டு" என்ற அமர்வில் தனது இசை பயணத்தை பகிர்ந்து கொண்டார். இதில், பாக்கிஸ்தானிய இசைத் துறையிலிருந்து தற்போதைய நிலைமை மற்றும் கிளாசிக்கல் இசையின் பற்றாக்குறை குறித்தும் சானி விவாதித்தார். இசையைத் தொடர அவர்களுக்கு ஆதரவளிப்பதில் தொலைக்காட்சியின் பங்கை அவர் பாராட்டினார். [7]

ஹம் டிவியின் சோப் 'சோட்டி சி கலத் ஃபெஹ்மி' மற்றும் ஹோ மான் ஜஹானின் 'குஷ் பியா வாஸன்' போன்ற பல பாடல்களை அவர் பாகிஸ்தான் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறைக்காக பாடியுள்ளார். அவர் ஐந்து அசலான ஒலித்தடம் பாடியுள்ளார். அவற்றுள், பி.டி.வி. யின் மூரத், ஹம் டிவியின் பரி ஆபா மற்றும் ஆரி ஜிந்தகியின் பஹு பேகம் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tribute: Tina Sani pays homage to Faiz Dawn (newspaper), Published 25 December 2011, Retrieved 6 February 2018
  2. 2.0 2.1 Beyond Borders (Tina Sani in India) Indian Express (newspaper), Published 22 August 2009, Retrieved 6 February 2018
  3. 3.0 3.1 I want youngsters to know I just followed my heart, says Tina Sani of her LSA award Dawn (newspaper), 17 April 2017, Retrieved 6 February 2018
  4. 4.0 4.1 In concert: In Tina Sani's company Dawn (newspaper), Published 9 March 2013, Retrieved 6 February 2018
  5. Tina Sani sings Shikwa by Iqbal Dawn (newspaper), Published 17 October 2010, Retrieved 6 February 2018
  6. Omran Shafiqque (31 August 2016). "Tina Sani: A voice of her own". Herald (magazine). பார்க்கப்பட்ட நாள் 6 February 2018.
  7. Burney, Moneeza (3 April 2016). "Music fraternity talks, sings at LMM-2016". images.dawn.com website. பார்க்கப்பட்ட நாள் 6 February 2018.
  8. Tina Sani's Pride of Performance Award listed on Dawn (newspaper) Retrieved 18 June 2019

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினா_சானி&oldid=3800730" இலிருந்து மீள்விக்கப்பட்டது