கோர்கத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோர்கத்ரி (ஆங்கிலம்: Gorkhatri) ( பஷ்தூ: ګورکټړۍ; ஹிந்த்கோ மற்றும் உருது : گورکهٹڑی) (அல்லது கோகுத்ரே) (நேரடியான பொருள் "போர்வீரரின் கல்லறை") என்பது பாக்கித்தானிலுள்ள பெசாவரில் அமைந்துள்ள ஒரு பொதுப் பூங்கா ஆகும். முகலாயர் கால்த்தில் கட்டப்பட்ட ஒரு சாலையோர சத்திரத்தின் பண்டைய இடிபாடுளில் இது கட்டப்பட்டது.

வரலாறு[தொகு]

பண்டைய நகரமான பெசாவரில் உள்ள கோர்கத்ரியை அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவர் இந்திய மன்னர் கனிஷ்கரின் மாபெரும் தூபியான கனிஷ்கரின் தூபியுடன் அடையாளம் காட்டினார். அதே நேரத்தில் பேராசிரியர் டாக்டர் அஹ்மத் அசன் தானி புத்தர் கிண்ணத்தின் புகழ்பெற்ற கோபுரம் நின்ற இடத்துடன் அதை அடையாளம் காட்டினார்.

பொ.ச. 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காந்தார தேசத்திற்கு பயணம் செய்த பிரபல சீன யாத்ரீகௌ சுவான்சாங், அவரது நினைவுக் குறிப்புகளில் நகரத்திற்கும் கனிஷ்கரின் தூபிக்கும் மரியாதை செலுத்தினார். "புத்தரின் மாபெரும் கிண்ணம்" வைக்கப்பட்டிருந்த கோர்கத்ரியைக் குறிக்கிறது என்று பல வரலாற்றாசிரியர்கள் வாதிடும் ஒரு தளத்தைப் பற்றியும் அவர் பேசினார்.

முகலாய பேரரசர் பாபர், தனது சுயசரிதையில் அதன் முக்கியத்துவத்தை பதிவுசெய்தார். பாபர் நாமாவில் இடத்தை பார்வையிட்டதாக குறிப்பிட்டுள்ளார். [1]

16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகள் சகனாரா பேகம், பண்டைய இடத்தில் ஒரு கூடாரம் கட்டினார். அந்த இடத்தை ஒரு போர் வீரர்களின் கல்லறையாக மாற்றி, அதற்கு சராய் சகானாபாத் என்று பெயரிட்டார் . பயணிகளின் வசதிக்காக சராய் சகானாபாத்துக்குள் ஜமா மஸ்ஜித், ஒரு சௌனா குளியல் அறை மற்றும் இரண்டு கிணறுகளையும் கட்டினார்.

1838-1842 வரை பெசாவரின் ஆளுநராக இருந்த கூலிப்படை தளபதி பாவ்லோ அவிதாபிலின் குடியிருப்பு மற்றும் அதிகாரப்பூர்வ தலைமையகமாக சீக்கியர்கள் இந்த இடத்தை மாற்றினர் . அங்கு சிவனுக்காக ஒரு இந்து கோவிலைக் கட்டினார்கள். பேராசிரியர் எஸ்.எம். ஜாபர், தனது "பெசாவர்: கடந்த காலமும் நிகழ்காலமும்" என்ற நினைவுச்சின்ன புத்தகத்தில், இந்து புனித யாத்திரை நடந்த இடத்துடன் அதை அடையாளம் காட்டினார். அங்கு அவர்கள் சர்துகாகர் சடங்கை (தலையை மொட்டையடிப்பது) செய்தனர் எனக் குறிப்பிட்டார்..

திட்டம்[தொகு]

கோர்கத்ரி ஒரு வழக்கமான முகலாய கால கல்லறையான இது பெசாவர் நகரத்தின் மிக உயரமான இடங்களில் ஒன்றாகும். இது 160x160 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு வலுவான கலவையைக் கொண்டுள்ளது. இது இரண்டு முக்கிய நுழைவாயில்களைக் கொண்டுள்ளது: ஒன்று கிழக்கில் அடுத்து மேற்கில் ஒன்று. கோரக்நாத் கோயில் இதன் மையத்தில் அமைந்துள்ளது. வளாகத்தின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள அறைகள் மற்றும் கட்டிடங்களின் வலைப்பின்னலுடன் 1917 இல் கட்டப்பட்ட ஒரு தீயணைப்பு படை கட்டிடம் உள்ளது.

அகழ்வாராய்ச்சிகள்[தொகு]

டாக்டர் பர்சாண்ட் அலி துரானி 1992-93 ஆம் ஆண்டில் கோர்கத்ரியில் முதல் செங்குத்தான் ஒரு அகழ்வாராய்ச்சியைத் தொடங்கினார். ஆனால் போதுமான நிதி இல்லாததால் அவரது அகழ்வாராய்ச்சிப் பணிகளை முடிக்க முடியவில்லை. இருப்பினும், நகர அடித்தளம் குறைந்தது கிமு 3 ஆம் நூற்றாண்டு வரை சென்றது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

கோர்கத்ரியின் வடகிழக்கு பகுதியில் 2007 வரை மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சுற்று அகழ்வாராய்ச்சிகள் பெசாவரின் வயதை இன்னும் இரண்டு நூற்றாண்டுகள் முன்னோக்கித்தள்ளி, அதிகாரப்பூர்வமாக தெற்காசியாவின் மிகப் பழமையான நகரமாக மாறியது.

குறிப்புகள்[தொகு]

  1. Page 141 published by Penguin

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்கத்ரி&oldid=3242322" இலிருந்து மீள்விக்கப்பட்டது