ஜபுங் கோயில், கிழக்கு ஜாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜபுங் கோயில், 2017

ஜபுங் கோயில் (Jabung) 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு புத்த கோயில் ஆகும். இக்கோயில் இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவாவில் புரோபோலிங்கோ மாவட்டத்தில் பைட்டன் பகுதியில் ஜபுங் சிசிர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 16.20 மீட்டர் அளவிலான சிவப்பு செங்கல்லால் ஆனது. இந்தக் கோயிலைப் பற்றிய குறிப்பு பஜ்ராஜினபராமிதா புரா (வஜ்ர ஜினா பராமிதா புரா) என்று நகரக்ரேதகமாவில் காணப்படுகிறது. இது கயாம் ஊருக் என்ற மன்னரால் கி.பி. 1359 ஆம் ஆண்டில், அவர் கிழக்கு ஜாவா பகுதி முழுதும் சென்றபோது பார்வையிடப்பட்ட கோயிலாகும். இக்கோயில் பராரட்டனில் சஜாபுங் என்று குறிப்பிடப்படுகிறது. . மஜபாஹித் அரச வம்சத்தைச் சேர்ந்த உறுப்பினரான ப்ரே குண்டலின் என்பவரின் சவக்கிடங்குக் கோயிலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]

இந்த கோயிலின் கட்டிடக்கலை பாணி வடக்கு சுமத்ராவின் பதங் லாவாஸில் உள்ள பகால் கோயிலை ஒத்த நிலையில் அமைந்துள்ளது.

கட்டிடக்கலை[தொகு]

இக்கோயில் வளாகம் 35 x 40 மீட்டர் அளவில் காணப்படுகிறது.1983 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கோயில் மறுசீரமைப்புக்கு உட்பட்டது, மேலும் கோயில் வளாகம் 20.042 சதுர மீட்டர் பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 8 மீட்டர் உயரத்தில் விரிவுபடுத்தப்பட்டது. கோயில் வளாகம் இரண்டு கட்டமைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது; ஒரு முதன்மைக் கோயிலும், முதன்மைக்கோயிலின் கட்டமைப்பிலிருந்து தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள ஒரு மூலைக்கோயிலும் இங்கு உள்ளன. முதன்மைக் கோயிலானதுஉயர்தர சிவப்பு செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாகும். அவற்றில் சில பகுதிகள் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

முதன்மைக் கோயில் 16.20 மீட்டர் உயரத்துடன் 13.13 மீட்டர் மற்றும் 9.60 மீட்டர் அளவைக் கொண்டு அமைந்துள்ளது. ஜபுங் கோயில் மேற்கு நோக்கி உள்ளது, மேற்கு பகுதியில் ஒரு திட்டமிடப்பட்ட கட்டமைப்பு காணப்படுகிறது. இது உயரமான மேல் மேடையில் பிரதான அறை வரை படிக்கட்டுகளின் வழி செல்லும் வகையில் உள்ளது. மூலைக் கோயில், முதன்மைக் கோயிலின் கட்டட அமைப்பின் தென்மேற்கு பகுதியில், 2.55 மீட்டர் அகலமும் 6 மீட்டர் உயரமும் கொண்டு அமைந்துள்ளது. இந்த அமைப்பினை ஒரு கோயில் என்று கூற முடியாது. தற்போது சிவப்பு செங்கல் சுவர்களைக் கொண்டு எஞ்சியிருக்கும் ஒரே ஒரு கோபுரம் ஆகும். ஒரு காலத்தில் இங்கு உள் சுற்றுச்சுவர் இருந்திருக்க வாய்ப்புண்டு.

இந்த கோயில் நான்கு பாகங்களைக் கொண்டுள்ளது. அவை படூர் (அடிப்படை தளம்), கால், உடல் மற்றும் கூரை என்பனவாகும். உடல் அமைப்பு கிட்டத்தட்ட உருளை எண்கோணமானது. அது மூன்று படி செவ்வக தளங்களில் நிற்கிறது. கூரையின் வடிவம் உருளை குவிந்த மேற்பரப்புடைய கோபுரம் போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. அதில் அலங்கரிக்கப்பட்ட கொண்டு சூலூர் மலர் காணப்படுகிறது. எனினும் கூரை மேல் பாகங்களை பெரும்பாலும் அழிக்கப்பட்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது. அல்லது மறுசீரமைப்பு செய்ய இயலாத நிலையில் இருக்கலாம். கர்ப்பகிருகம் எனப்படுகின்ற கருவறையில் (பிரதான அறை) ஒரு பீடம் உள்ளது, அங்கு முன்பு ஒரு புத்தர் சிலை இருந்திருக்கலாம். நுழைவு வளைவின் மேல் பகுதியில் 1276 சாகா பொறிக்கப்பட்டுள்ளது.அந்த ஆண்டு மன்னர் ஹயம் வுருக் ஆட்சி செய்த,1354 ஆம் ஆண்டினைக் குறிக்கும் வகையில் ஒத்து அமைந்துள்ளது. [2]

விளக்கம்[தொகு]

மாடத்தின் மேல் பகுதியில் காலாவின் தலை சிற்பம்
1866 இல் ஜபுங் கோயில்

கீழ் தளம் அல்லது அடிப்படைத்தளம்[தொகு]

படூர் அல்லது கீழ் தளம் 13.11 மீட்டர் நீளத்திலும், 9.58 மீட்டர் அகலத்திலும் அமைந்துள்ளது.. இந்த மேடையில் கோயிலைச் சுற்றியுள்ள குறுகிய பாதை செல்கிறது. அன்றாட வாழ்க்கையை விவரிக்கும் பல புடைப்புச் சிற்பங்கள் அங்கு காணப்படுகின்றன.

கால் பகுதி[தொகு]

மேற்குப் பகுதியுடன் செவ்வக அமைப்பு, படிக்கட்டுகளைக் கொண்டு அமைந்துள்ளது. அங்கு 1.30 மீட்டர் அளவில் இரண்டு சிறிய வெற்று மாடங்களைப் போன்ற இடங்கள் உள்ளன. கால் பகுதியானது இரண்டு நிலை செவ்வக தளங்களைக் கொண்டுள்ளது.

உடல் பகுதி[தொகு]

உடல் பகுதியில் மனிதர்கள், வீடுகள் மற்றும் தாவரங்களின் உருவங்கள் செதுக்கப்பட்ட நிலையில் உள்ளன. தென்கிழக்கு மூலையில் ஒரு பெண் ஒரு பெரிய மீனின் மீது சவாரி செய்யும் சிற்பம் உள்ளது. இந்து மதத்தில் ஸ்ரீ தஞ்சங் [3] கதையிலிருந்து எடுக்கப்பட்ட சிற்பக் காட்சி அங்கே உள்ளது. அதில் ஒரு மனைவியின் நன்றியுணர்வு மற்றும் நம்பகத்தன்மை பற்றிய கதை உள்ளது. [4] ஸ்ரீ தஞ்சங் வட்டாரத்தில் காணப்படுகின்ற புடைப்புச் சிற்பங்கள் பிலிட்டாரில் உள்ள பெனத்தாரான் கோயில், கேதிரியில் உள்ள சுரவானா கோயில், மற்றும் டிரவுலானில் உள்ள பஜன்கிராத்து என்னுமிடத்தில் உள்ள வாயில் போன்ற இடங்களிலும் காணப்படுகின்றன. அங்குள்ள கதவின் வழியாக 2.60 x 2.58 மீட்டர் மற்றும் 5.52 மீட்டர் உயரமுள்ள முதன்மை அறையான கர்ப்பகிரகம் எனப்படுகின்ற கருவறை (கர்பாக்ரிஹா) உள்ளது.

கூரைப் பகுதி[தொகு]

கூரையின் பெரும்பாலான மேல் பாகங்கள் காணப்படவில்லை. தற்போதுள்ள பகுதிகளிலிருந்து ஆராயும்போது, வல்லுநர்கள் கூரை மலர் வடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்தூபி அங்கு இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

அமைவிடம்[தொகு]

இந்த கோயில் கிராக்ஸான் நகருக்கு கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அல்லது ஜபுங் தீர்த்தா நீச்சல் குளத்திலிருந்து 500 மீட்டர் தென்கிழக்கில், சுரபயா - சிட்டுபோண்டோ நெடுஞ்சாலையில் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. East Java.com: Jabung Temple
  2. "Cakrawala news Candi Jabung Dibangun Saat Hayam Wuruk". Archived from the original on 2011-05-22. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
  3. "Sri Tanjung", Wikipedia (in ஆங்கிலம்), 2019-11-03, பார்க்கப்பட்ட நாள் 2019-12-06
  4. "Candi Jabung Lambangkan Kesetiaan Wanita". Archived from the original on 2011-09-04. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.

வெளி இணைப்புகள்[தொகு]