சைப்பிரசு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைப்பிரசு பல்கலைக்கழகம்
கிரேக்கம்: Πανεπιστήμιο Κύπρου
துருக்கியம்: Kıbrıs Üniversitesi
வகைபொது
உருவாக்கம்1989
நிருவாகப் பணியாளர்
811
பட்ட மாணவர்கள்7.000
அமைவிடம்,
நிக்கோசியா மாவட்டம்
,
வளாகம்அக்லேண்ட்ஜியா
நிறங்கள்மஞ்சள்
சேர்ப்புமத்தியதரைக்கடல் பல்கலைக்கழகங்கள் ஒன்றியம்
இணையதளம்www.ucy.ac.cy

சைப்பிரசு பல்கலைக்கழகம் (University of Cyprus) (கிரேக்கம்: Πανεπιστήμιο Κύπρου‎; துருக்கியம்: Kıbrıs Üniversitesi) என்பது சைப்பிரசு குடியரசால் 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 1992ஆம் ஆண்டில் முதன் முதலில் மாணவர்களை அனுமதித்தது. இப்பல்கலைக்கழகம் சுமார் 7000 மாணவர்களைக் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

சைப்ரஸ் பல்கலைக்கழகம் 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது மற்றும் 1992 ஆம் ஆண்டில் முதன் முதலில் மாணவர்களை அனுமதித்தது.

சைப்பிரசு குடியரசின் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நுழைவுத் தேர்வுகள் மூலம் பெரும்பாலான இளங்கலை மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. சிறப்பு தேவைகள் அல்லது சூழ்நிலைகள் உள்ள மாணவர்களுக்கு பல இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சைப்பிரசு பல்கலைக்கழகம் திறக்கப்பட்டபோது, 486 இளங்கலை மாணவர்கள் இருந்தனர். 2010–2011ஆம் கல்வியாண்டில், 21 துறைகள் வழங்கும் படிப்புகளில் 4691 இளங்கலை மாணவர்கள் பயின்று வந்தனர். அதே நேரத்தில், இந்தப் பல்கலைக்கழகத்தில் 1549 முதுகலை மாணவர்களும் பயின்று வந்தனர்.

சைப்ரஸ் குடியரசின் நிக்கோசியாவின் தலைநகரில் உள்ள சைப்ரஸ் பல்கலைக்கழகம்
பழைய வளாகத்தின் பிரதான பல்கலைக்கழக சதுக்கம்
தடகள கட்டிடம்

கல்வி நற்பெயர்[தொகு]

சைப்பிரசின் தலைநகரான நிக்கோசியாவை மையமாகக் கொண்டு, கற்பித்தலானது முதன்மையாக கிரேக்க மொழியில் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ அலுவல் மொழிகள் கிரேக்கம் மற்றும் துருக்கிய மொழிகளாகும். ஆனால், ஒரு சில துருக்கிய மொழி பேசுபவர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

சைப்பிரசு பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க தகுதியானவர்கள் சைப்பிரசு குடிமக்கள் அல்லது சைப்ரியாட் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (குறைந்தபட்சம் பெற்றோரில் யாராவது ஒருவர் சைப்ரியாட் வம்சாவளிையச் சார்ந்தவராக இருக்க வேண்டும்) ஆவர். கல்வி வாய்ப்புள்ள மாணவர்கள் ஆறு ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றிருப்பார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு அல்லது சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு பல பதவி நிலைகள் வழங்கப்படுகின்றன.

சைப்ரசின் அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட மதக் குழுக்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் சைப்ரியாட்சின் கிரேக்கர்கள், பிற நாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சைப்ரியாட்டுகள் மற்றும் பிற நாடுகளில் நிரந்தர குடியேற்றக்காரர்களாக இருக்கும் சைப்ரியாட்சுகள், குறைந்த எண்ணிக்கையிலான பதவிகளை (அனுமதிக்கப்பட்ட சைப்ரியாட் மாணவர்களில் 3%) இடைநிலைக் கல்வியின் பொதுச் சான்றிதழ் அல்லது பொது கல்விச் சான்றிதழ் அல்லது பிற சமமான தேர்வுகளில் பெற்ற தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கோரலாம். ஆறு ஆண்டு உயர்நிலைப் பள்ளி பட்டயம் பெற்ற துருக்கிய சைப்ரியாட்டுகள் பல்கலைக்கழகம் நிர்ணயித்த சிறப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் ஆவர்.

வலைத்தள நிர்ணய அளவைகளின் படியான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் இப்பல்கலைக்கழகம் ஐரோப்பிய அளவில் 304 ஆம் இடமும், உலக அளவில் 696 ஆம் இடமும் பெற்றுள்ளது.[1]

நூலகம்[தொகு]

இப்பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் 700,000 இற்கும் அதிகமான அச்சு வடிவ மற்றும் மின்னணு வடிவிலான புத்தகத் தலைப்புகள் காணக்கிடைக்கின்றன. பத்தாயிரக்கணக்கான இணைய மற்றும் அச்சு வடிவிலான பருவ இதழ்களும், 160 அறிவியல் தரவுத்தளங்களும் காணக்கிடைக்கின்றன. இவற்றில் காட்சி கேள்வி ஊடகங்களும், கணினிமயமாக்கப்பட்ட வளங்களும் உள்ளடக்கம் ஆகும். 2017 ஆம் ஆண்டில் இந்த நூலகமானது பிரெஞ்சு கட்டிடக்கலை வல்லுநர் ஜீன் நெளவல் என்பவரால் வடிவமைக்கப்பட்ட புதிய பல்கலைக்கழக வளாகத்திற்கு இடம் பெயர்ந்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Webometrics: Ranking Web of Universities". Archived from the original on 2008-09-15. பார்க்கப்பட்ட நாள் 2019-12-01.
  2. Tom Rovenscraft. "Jean Nouvel Completes Earth work library at University of Cyprus". dezeen.com. பார்க்கப்பட்ட நாள் 1 December 2019.