புரா கோவா லாவா, பாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரா கோவா லாவா

புரா கோவா லாவா (Pura Goa Lawah)yhthLawah (பாலினேசி "பேட் குகை கோயில்") என்பது இந்தோனேசியா நாட்டின் ஒரு பாலித் தீவில் உள்ள பாலி இந்து சமயம் சார்ந்த புரா அல்லது கோயிலாகும். இக்கோயில் இந்தோனேஷியாவில் பாலியில் குலுங்குங் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. புரா கோவா எனப்படுகின்ற, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் பெரும்பாலும் சோகி கஹங்கன் ஜகத் அல்லது "உலகின் ஆறு சரணாலயங்கள்", என அழைக்கப்படுகின்ற பாலியில் உள்ள உள்ள ஆறு புனிதமான வழிபாட்டுத் தலங்களில் சேர்க்கப்பட்டுள்ள கோயிலாகும். புரா கோவா லாவாவின் வாயில் பகுதி ஒரு குகை திறப்பினைக் கொண்டு அமைந்துள்ளது. அப்பகுதியில் அதிகமாக வெளவால்கள் வசித்து வருகின்றன. ஆதலால் அதன் பெயர் கோவா லாவா அல்லது "பேட் குகை" என்றும் அழைக்கப்படுகிறது.

விளக்கம்[தொகு]

புரா கோவா பாலியில் குலுங்குங் ரீஜன்சியில் பெசிங்காகன் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது புரா கோவா லாவாவின் பெரிய வளாகம் ஜலான் ராயா கோவா லாவா சாலையின் வடக்குப் பகுதியில், கோவா லாவா கடற்கரையில் அமைந்துள்ளது.[1]

புரா கோவா லாவா சில சமயங்களில் சோகமான கஹங்கன் ஜகத் அல்லது "உலகின் ஆறு சரணாலயங்கள்", என்ற நிலையில் பாலியில் உள்ள ஆறு புனிதமான வழிபாட்டுத் தலங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. பாலினிய நம்பிக்கைகளின்படி, அவை தீவின் முக்கிய புள்ளிகள் ஆகும். மேலும் அவை பாலிக்கு ஆன்மீக சமநிலையை வழங்குவதாக நம்பப்படுகிறது. இந்த மிக புனிதமான சரணாலயங்களின் எண்ணிக்கை எப்போதும் ஆறு என்ற எண்ணிக்கை வகையிலேயே அமைந்துள்ளது. இருந்தாலும் அந்தந்தப் பகுதிகளைப் பொறுத்த வரை குறிப்பிடத்தக்க சில கோயில்கள சேர்க்கப்படும்போது அவற்றின் எண்ணிக்கை மாறுபட வாய்ப்பு உண்டு.[2]

வரலாறு[தொகு]

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புரா கோவா லாவா. பீங்கான் பீங்கான் தகடுகள் அலங்காரம் அங்கு காணப்படுகிறது.

புரா கோவா லாவா 11 ஆம் நூற்றாண்டில் மப்பு குதுரனால் நிறுவப்பட்ட கோயிலாகும். பாலி மீது இந்து மதத்தை அறிமுகப்படுத்திய ஆரம்பகால பூசாரிகளில் எம்.பி. குதுரனும் ஒருவர். பூசாரிகளின் தியான மையமாக கோயில் வளாகம் அமைந்துள்ளது.[1]

குசாம்பா போரில் டச்சுக்காரர்கள் 1849 ஆம் ஆண்டு குளுங்குங் இராச்சியத்தைத் தாக்கி நடைபெற்ற போரின்போது இந்த கோயில் முக்கியமான இடத்தை வகித்தது. குசாம்பாப் போர், ஆன்ட்ரியாஸ் விக்டர் மைக்கேல்ஸ் தலைமையில் இராயல் நெதர்லாந்து கிழக்கிந்திய படைக்கும் தேவா அகுங்கு இஸ்த்ரி கன்யா தலைமையில் குலுங்குங் ராச்சியத்திற்கும் இடையில் நடைபெற்றது.[3][4] [5]

கோயிலின் அலங்காரம் காலப்போக்கில் முன்னேறி வருவதைக் காணமுடிகிறது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், புரா கோவா லாவாவின் சிவன் கோயில்கள் மற்றும் வாயில்களில் பீங்கான் மற்றும் பீங்கான் தகடுகள் பெரும்பாலும் காணப்பட்டன. இந்த வகை முறையானது இன்னும் பாலியில் உள்ள பூரா கெஹன் போன்ற பிற பழைய கோயில்களில் காணமுடிகிறது. தற்போது இந்த சிவன் கோயில்கள் மற்றும் வாயில்களில் பீங்கான் மற்றும் பீங்கான் தகடுகள் அலங்காரம் குறைந்த அளவில் காணப்படுகிறது.

கோயில் வளாகம்[தொகு]

புரா கோவா லாவாவில் தங்கத்தால் பொறிக்கப்பட்ட வௌவால் உருவ ஆபரணங்கள்.

புரா கோவா லாவாவின் வளாகம் ஒரு மலைப்பாங்கான நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை கோயிலின் வெளிப்புறக் கருவறை, நடுத்தர கருவறை, மற்றும் உள் பிரதான கருவறை என்பவையாகும். அவை முறையே ஜபா பிசான் அல்லது நிஸ்தானிங் மண்டலா, ஜபா தெங்கா அல்லது மத்யா மண்டலா, மற்றும் ஜீரோ அல்லது உத்தமனிங் மண்டலா என்றழைக்கப்படுகின்றன. [6] [7]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Goa Lawah Temple in Bali". Hotels.com. 2017. Archived from the original on July 10, 2017. பார்க்கப்பட்ட நாள் November 24, 2017.
  2. "Sacred Sites of Bali". Sacred Sites. Archived from the original on 21 July 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-07-20.
  3. Sukiswanti, P. (October 18, 2014). "Perang Kusamba Memakan Korban Jenderal Belanda". Sindonews.com. பார்க்கப்பட்ட நாள் April 12, 2015.
  4. Sujaya, I. M. (May 25, 2015). "Perang Kusamba, Kemenangan Gemilang Laskar Klungkung di Bumi Ilalang". Balisaja.com. பார்க்கப்பட்ட நாள் April 12, 2015.
  5. Vickers 1989.
  6. Stuart-Fox 1999.
  7. Auger 2001.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரா_கோவா_லாவா,_பாலி&oldid=3680077" இலிருந்து மீள்விக்கப்பட்டது