உளறுவாய் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உளறுவாய் குருவி
உளறுவாய் குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. subrufa
இருசொற் பெயரீடு
Argya subrufa
(தாமஸ் சி. ஜெர்டன், 1839)
வேறு பெயர்கள்

Turdoides subrufus
Layardia subrufa
Timalia subrufa
Turdoides subrufa
Timalia poecilorhyncha

உளறுவாய் குருவி அல்லது செஞ்சிலம்பன் (Rufous babbler) என்பது மிகத் தொன்மைக் காலமாக வாழும் பறவைகளில் ஒன்றாகும். இது இருக்குமிடம் ஒரே கலகலப்பான சத்தமாகவே இருக்கும். பேபிள் (Babble) என்கிற ஆங்கில வார்த்தைக்கு தொண தொணத்துப் பேசுவது மற்றும் வாயாடி என்று பொருள் உண்டு. இது தென் இந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையைத் தன் இருப்பிடமாகக் கொண்டது. இது Leithrochidae சிரிப்பான் (பறவை) குடும்பத்தை சார்ந்தது. இது அடர் பழுப்பு நிறத்தையும் மற்றும் நீண்ட வாலையும் உடையது. இப்பறவைகள் மலைகளில் புல், காட்டுப் புதர் நிறைந்த காட்டுப் பகுதிகளில் காணப்படும்.

வகைப்பாட்டியல்[தொகு]

செஞ்சிலம்பன் முதலில் எனும் பேரினத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு விரிவான உணர்வுபூர்வமான மரபுவழி சார்ந்த மூலக்கூற்று ஆய்வுக்கு பின் இது Argya எனும் பேரினத்தில் வைக்கப்பட்டது.[2][3]

விவரிப்பு / விளக்கம்[தொகு]

இது பெரியதாகவும் மேலே அடர் ஒலிவ பழுப்பு வண்ணத்திலும் முன் நெற்றியில் சாம்பல் வண்ணத்திலும் காணப்படும். அவைகளின் முன் நெற்றியில் உள்ள சிறகுகளில் இடைஇடையே கருநிறம் ஊடுருவி காணப்படும். இவைகளின் கருவிழி வெளிர் வெள்ளையிலிருந்து மஞ்சள் வண்ணம் வரை காணப்படும். கீழ் பாகமானது பிரகாசமான பொன் வண்ணத்திலும் தொண்டையின் மத்திய பாகத்திலும் வ்யிற்றிலும் சிறிது மங்கியும் காணப் படும். தேர்ந்தெடுக்கப் பட்ட வகையானது (இருப்பிட வகை:மனன்ந்தவாடி)மேற்கு தொடர்ச்சிக்கு வடக்கே உள்ள பாலக்காடு இடைவெளியில் காணப்படுகிறது அதே வேளையில் தெற்கே காணப்படும் ஹைப்பரிதைரா இன்னும் அதிக அளவு வர்ணங்களில் காணப்படுகிறது. இவைகள் 8.7 செ.மீ லிருந்து 9 செ.மீ நீளம் உடைய இறக்கைகளோரடு 24 - 25 செ.மீ நீளம் உடையது. வாலானது 11 - 11.5 செ.மீ நீளம் உடையது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Turdoides subrufa". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Cibois, A.; Gelang, M.; Alström, P.; Pasquet, E.; Fjeldså, J.; Ericson, P.G.P.; Olsson, U. (2018). "Comprehensive phylogeny of the laughingthrushes and allies (Aves, Leiothrichidae) and a proposal for a revised taxonomy". Zoologica Scripta 47 (4): 428-440. doi:10.1111/zsc.12296. 
  3. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Laughingthrushes and allies". World Bird List Version 9.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளறுவாய்_குருவி&oldid=3928097" இலிருந்து மீள்விக்கப்பட்டது