சோடியம் பெரயோடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் பெரயோடேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் பெரயோடேட்டு
வேறு பெயர்கள்
சோடியம் மெட்டாபெரயோடேட்டு
இனங்காட்டிகள்
7790-28-5 Y
ChEBI CHEBI:75226 N
ChemSpider 58683 Y
EC number 232-197-6
InChI
  • InChI=1S/HIO4.Na/c2-1(3,4)5;/h(H,2,3,4,5);/q;+1/p-1 Y
    Key: JQWHASGSAFIOCM-UHFFFAOYSA-M Y
  • InChI=1/HIO4.Na/c2-1(3,4)5;/h(H,2,3,4,5);/q;+1/p-1
    Key: JQWHASGSAFIOCM-REWHXWOFAO
  • InChI=1S/HIO4.Na/c2-1(3,4)5;/h(H,2,3,4,5);/q;+1/p-1
    Key: JQWHASGSAFIOCM-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23667635
வே.ந.வி.ப எண் SD4550000
SMILES
  • [O-]I(=O)(=O)=O.[Na+]
பண்புகள்
NaIO4
வாய்ப்பாட்டு எடை 213.8918 கி/மோல்
தோற்றம் வெண் படிகங்கள்
அடர்த்தி 3.865 கி/செ.மீ3 (நீரற்றது)
3/210 கி/செ.மீ3
உருகுநிலை 300 °C (572 °F; 573 K) (நீரற்றது)
175 °C (347 °F; 448 K) (முந்நீரேற்று) (சிதைவடையும்)
கரையும்
கரைதிறன் அமிலங்களில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம் (நீரற்றது)
முக்கோணம் (முந்நீரேற்று)
தீங்குகள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் பெர்குளோரேட்டு, சோடியம் பெர்புரோமேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் பெர் அயோடேட்டு, பெரயோடிக் அமிலம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

சோடியம் பெரயோடேட்டு (Sodium periodate) என்பது NaIO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் நேர்மின் அயனியும் பெரயோடேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மத்தை உருவாக்குகின்றன. பெரயோடிக் அமிலத்தின் சோடியம் உப்பு சோடியம் பெரயோடேட்டு என்ற வகையாகவும் இதை கருதலாம். பல பெரயோடேட்டுகள் போல சோடியம் பெரயோடேட்டும் இரண்டு வெவ்வேறு வகையான வடிவங்களில் காணப்படுகிறது. சோடியம் மெட்டாபெரயோடேட்டும் (NaIO4,) சோடியம் ஆர்த்தோபெரயோடேட்டும் (Na2H3IO6) அவ்விரண்டு வகைகளாகும். பொதுவாக சோடியம் ஆர்த்தோபெரயோடேட்டு என்பது சோடியம் ஐதரசன் பெரயோடேட்டு என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. ஆனால் முழுமையாக வினைபுரிந்த சோடியம் ஆர்த்தோபெரயோடேட்டு உப்பைக் (Na5IO6) கூட தயாரிக்க முடியும். இவ்விரு உப்புகளும் ஆக்சிசனேற்றும் முகவர்களாக மிகுந்த பயனளிக்கும் சேர்மங்களாகும்[1].

தயாரிப்பு[தொகு]

பாரம்பரியமாக பெரயோடேட்டு பொதுவாக சோடியம் ஐதரசன் பெரயோடேட்டு (Na3H2IO6).[2] என்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டது. இது வணிக ரீதியாகக் கிடைக்கிறது, ஆனால் அயோடேட்டுகளை குளோரின் மற்றும் சோடியம் ஐதராக்சைடுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம் [3]. அல்லது இதேபோல் அயோடேட்டுகளுடன் புரோமின் மற்றும் சோடியம் ஐதராக்சைடுடன் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம். :NaIO3 + Cl2 + 4 NaOH → Na3H2IO6 + 2 NaCl + H2O

NaI + 4 Br2 + 10 NaOH → Na3H2IO6 + 8 NaBr + 4 H2O

நவீன தொழில்துறை அளவிலான உற்பத்தியில் அயோடேட்டுகள் மின்வேதியியல் முறையில் ஆக்சிசனேற்றம் செய்யப்படுகின்றன. ஈயம் டையாக்சைடு (PbO2) நேர்மின் வாயாகவும் கீழ்கண்ட திட்டமின்வாய் அழுத்த அளவுகளும் இவ்வினைக்கான நிபந்தனைகளாக கடைபிடிக்கப்படுகின்றன.

H5IO6 + H+ + 2 eIO
3
+ 3 H2O      E° = 1.6 V[4]

சோடியம் ஐதரசன் பெரயோடேட்டுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து நிகழும் நீர்நீக்க வினையின் மூலம் சோடியம் மெட்டாபெரயோடேட்டு தயாரிக்க முடியும்[2].

Na3H2IO6 + 2 HNO3 → NaIO4 + 2 NaNO3 + 2 H2O

கட்டமைப்பு[தொகு]

I41/a என்ற இடக்குழுவுடன் இலேசாக சிதைந்த IO−4 அயனிகளைக் கொண்ட நாற்கோண படிக வடிவத்தில் சோடியம் மெட்டாபெரயோடேட்டு காணப்படுகிறது. இக்கட்டமைப்பிலுள்ள I–O பிணைப்புகளின் சராசரி தொலைவு 1.775 ஆங்சுட்ராம் ஆகும். Na+ அயனிகளை எட்டு ஆக்சிசன் அணுக்கள் 2.54 மற்றும் 2.60 ஆங்சுட்ராம் தொலைவில் சூழ்ந்துள்ளன.

Pnnm என்ற இடக்குழுவுடன் செஞ்சாய்சதுர படிக வடிவத்தை சோடியம் ஐதரசன் பெரயோடேட்டு ஏற்கிறது. அயோடின் மற்றும் சோடியம் அணுக்கள் இரண்டும் 6 ஆக்சிசன் அணுக்களின் எண்முக கோண வடிவத்தில் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் NaO6 எண்முகம் வலுவாக சிதைந்துள்ளது. IO6 மற்றும் NaO6 குழுக்கள் பொதுவான செங்குத்துகள் மற்றும் விளிம்புகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன [5].

C2/m என்ற இடக்குழுவுடன் ஒற்றை சாய்வு வடிவத்தில் சோடியம் பெரயோடேட்டு படிகமாகிறது என தூள் விளிம்பு விளைவு சோதனைகள் தெரிவிக்கின்றன[6].

பயன்கள்[தொகு]

அருகிலுள்ள இரண்டு ஆல்டிகைடு குழுக்களை வெளியேற்றும் டையால்களுக்கு இடையில் சாக்கரைடு வளையங்களை திறப்பதற்காக சோடியம் பெரயோடேட்டு கரைசலைப் பயன்படுத்தப்படலாம். இந்த செயல்முறை பெரும்பாலும் சாக்கரைடுகளை பெயரிடுவதற்கு ஒளிரும் மூலக்கூறுகள் அல்லது பயோட்டின் போன்ற பிற குறிச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இந்த செயல்முறைக்கு அருகிலிருக்கும் டையால்கள் தேவைப்படுகின்றன. டி.என்.ஏ மூலக்கூறுக்குப் பதிலாக ஆர்.என்.ஏ மூலக்கூறின் 3′-முனைகளை பெயரிடுவதற்கு பெரும்பாலும் தெரிவு செய்யப்பட்ட பெரயோடேட்டு ஆக்சிசனேற்றம் பயன்படுத்தப்படுகிறது. ரைபோசில் அருகிலுள்ள டையால்கள் இருக்கின்றன. ஆனால் டியாக்சிரைபோசில் அருகாமை டயால்கள் இல்லை.

கரிம வேதியியலில் டையால்களை இரண்டு ஆல்டிகைடுகளாக பிளப்பதற்கு சோடியம் பெரயோடேட்டு பயன்படுத்தப்படுகிறது [7]

.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பேரியம் நைட்ரேட்டு மற்றும் பொட்டாசியம் பெர்குளோரேட்டு போன்றவற்றை தடங்காட்டும் வெடிபொருள்களில் பயன்படுத்த சோடியம் மெட்டா பெரயோடேட்டு இடப்பெயர்ச்சி செய்யுமென 2013 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவம் அறிவித்த்து [8]. .

மேற்கோள்கள்[தொகு]

  1. Andrew G. Wee, Jason Slobodian, Manuel A. Fernández-Rodríguez and Enrique Aguilar "Sodium Periodate" e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis 2006. எஆசு:10.1002/047084289X.rs095.pub2
  2. 2.0 2.1 Riley, edited by Georg Brauer ; translated by Scripta Technica, Inc. Translation editor Reed F. (1963). Handbook of preparative inorganic chemistry. Volume 1 (2nd ). New York, N.Y.: Academic Press. பக். 323–324. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:012126601X. 
  3. Hill, Arthur E. (October 1928). "Ternary Systems. VII. The Periodates of the Alkali Metals". Journal of the American Chemical Society 50 (10): 2678–2692. doi:10.1021/ja01397a013. 
  4. Parsons, Roger (1959). Handbook of electrochemical constants. Butterworths Scientific Publications Ltd. பக். 71. https://archive.org/details/ost-chemistry-parsons-handbookofelectrochemicalconstants. 
  5. Jansen, Martin; Rehr, Anette (1988). "Na2H3IO6, eine Variante der Markasitstruktur" (in German). Zeitschrift für anorganische und allgemeine Chemie 567 (1): 95–100. doi:10.1002/zaac.19885670111. 
  6. Betz, T.; Hoppe, R. (May 1984). "Über Perrhenate. 2. Zur Kenntnis von Li5ReO6 und Na5ReO6 – mit einer Bemerkung über Na5IO6" (in German). Zeitschrift für anorganische und allgemeine Chemie 512 (5): 19–33. doi:10.1002/zaac.19845120504. 
  7. McMurry, John. Organic chemistry (8th ed., [international ed.] ). Singapore: Brooks/Cole Cengage Learning. பக். 285–286. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780840054531. 
  8. "Picatinny to remove tons of toxins from lethal rounds". U.S. Army. பார்க்கப்பட்ட நாள் 31 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_பெரயோடேட்டு&oldid=2868471" இலிருந்து மீள்விக்கப்பட்டது