தர்ம விராடமா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா

ஆள்கூறுகள்: 7°46′58″S 110°22′32″E / 7.782883°S 110.3755°E / -7.782883; 110.3755
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்ம விராடமா அருங்காட்சியகம்
The museum
தர்ம விராடமா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா is located in Yogyakarta
தர்ம விராடமா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
Location in Yogyakarta
நிறுவப்பட்டது30 ஆகத்து 1982 (1982-August-30)
அமைவிடம்யோக்யகர்த்தா, இந்தோனேசியா
ஆள்கூற்று7°46′58″S 110°22′32″E / 7.782883°S 110.3755°E / -7.782883; 110.3755
வகைஇராணுவ அருங்காட்சியகம்

தர்ம விராடமா அருங்காட்சியகம் (Dharma Wiratama Museum) அதிகாரப்பூர்வமாக தர்ம விராடமா மத்திய இராணுவ அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிற இந்த அருங்காட்சியகம் இந்தோனேஷியன் இராணுவ வரலாற்றை மையமாகக் இராணுவ அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் அதன் தொடக்க காலமான 1945 ஆம் ஆண்டு முதல் வரை அதன் 30 செப்டம்பர் 1965 ஆம் நாளன்று நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு நாள் வரையிலான இந்தோனேஷிய அமைதி முயற்சிகளைப் பற்றிய வரலாறு காணப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் யோக்யகர்த்தாவில் உள்ள முன்னாள் தேசிய இராணுவத் தலைமையகத்தில் அமைந்துள்ளது. .

கண்ணோட்டம்[தொகு]

தர்ம விராடமா அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக தர்ம விராட்டாம மத்திய இராணுவ அருங்காட்சியகம் (இந்தோனேசிய: அருங்காட்சியகம் புசாட் டி.என்.ஐ கி.பி. தர்ம விராட்டாமா) என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது 75 சுதிர்மான் தெருவில் உள்ளது. சுதிர்மான் தெரு இந்தோனேஷியாவில் யோகியாகர்த்தாவில் சுதிர்மான் மற்றும் சிக் டி டிரோ தெருக்களின் மூலையில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் 4,289 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காட்சிப்பொருள்களைப் பற்றிய குறிப்புகளும் அருகே அமைக்கப்பட்டுள்ளன. அந்த விளக்கங்களில் சில ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. [1] [2]

வரலாறு[தொகு]

இப்போது அருங்காட்சியகம் அமைந்துள்ள கட்டிடம் டச்சு காலனித்துவ அரசாங்கத்தால் 1904 ஆம் ஆண்டில் மத்திய ஜாவா முழுவதும் அமைந்துள்ள தோட்டங்களை நிர்வகிக்கின்ற பொறுப்பினைக் கொண்ட அலுவலரின் அலுவல்பூர்வ இல்லம் என்ற நிலையில் கட்டப்பட்டது. 1942 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை டச்சு கிழக்கிந்திய ஜப்பானிய ஆக்கிரமிப்பு நடைபெற்ற சமயத்தில் இந்த கட்டிடம் ஜப்பானிய படைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது, இது ஒரு இராணுவ தடுப்பாகப் பயன்படுத்தப்பட்டது. [1]

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடையப் போவது உறுதி என்ற நிலையில், இந்தோனேசியா ஆகஸ்ட் 17, 1945 ஆம் நாளன்று தன் சுதந்திரத்தை அறிவித்தது. அதன் பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து, ராயல் நெதர்லாந்து கிழக்கிந்திய ராணுவத்தில் முன்னர் அலுவலராக இருந்த, டச்சு நாட்டில் பயிற்சி பெற்ற வீரரான ஓரிப் சோமோஹார்ட்ஜோ என்பவர் யோக்யகர்த்தாவை தளமாகக் கொண்டு புதிய தேசிய இராணுவத்தை அமைக்கின்ற பணியில் ஈடுபட்டார். [3] அப்பணியில் ஈடுபட்டபோது அவர் தற்காலிகமாக ஹோட்டல் மெர்டேகாவில் (தற்போது இன்னா கருடா) ஒரு அறையை தன் பயன்பாட்டிற்காக வைத்திருந்தபோதிலும், யோக்கியகர்த்தாவின் சுல்தான், ஹமெங்க்குபுவோனோ IX என்பவர் ஜப்பானியத் தடுப்பாகப் பயன்படுத்து வந்த அதனை இராணுவத்தின் தலைமையகமாக அமைத்துக் கொள்ளும் வகையில் நன்கொடையாக அளித்தார். [4]

இந்த அருங்காட்சியகத்தை ஆகஸ்ட் 30, 1982 ஆம் நாளன்று கோடம் IV / டிபோனெகோரோவின் தளபதியான ஜெனரல் பொனிமான் திறந்து வைத்தார். [5]

சேகரிப்புகள்[தொகு]

கள சமையலறையின் மாதிரி
பதுங்குகுழியின் உட்புறம்

இந்த அருங்காட்சியகத்தில் 20 காட்சியறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பொருளைப் பற்றியதாக அமைந்துள்ளது. அருங்காட்சியக நுழைவாயிலில் அருங்காட்சியகத்தின் வரலாற்றினைப் பற்றிய வரலாற்றுக்குறிப்பு தரப்ப்டுகிறது. அங்கு இராணுவத்தின் தலைமை அலுவலர்களின் படங்கள் காட்சியில் உள்ளன. நுழைவாயிலில் இரு புறத்திலும் உள்ள அறைகள் சுதிர்மான் (கிழக்குப் பகுதி) மற்றும் ஓரிப் (மேற்குப் பகுதி) ஆகியோரின் படங்களைக் கொண்டு அமைந்துள்ளன. இவர்கள் இந்தோனேசிய ராணுவத்தின் முதன்மை ராணுவ வீரர்கள் ஆவர். நுழைவாயிலின் வடது புறத்தில் போர் அறை எனப்படும் அறை உள்ளது. அதில் இந்தோனேசிய தேசிய புரட்சியின்போது நடைபெற்ற போர் தொடர்பான பொருள்கள் காட்சியில் உள்ளன. மேலும் மேடன் பகுதியில் நடைபெற்ற போர், பெல்ம்பாங்க் போர், பாண்டுங் அழிப்பு, செமராங் போர், அம்பரவா போர், சுரபயா போர், மர்கரானா போர், மகாசார் போர் உள்ளிட்ட போர்கள் தொடர்பான பொருள்கள் உள்ளன. மேலும் ராணுவ தளவாடஙகள், புரட்சியின்போது பயன்படுத்தப்பட்ட சமையலறையின் மாதிரி, தகவல் தொடர்பு பற்றிய பொருள்கள் உள்ளிட்டவை காட்சியில் உள்ளன..[5]

குறிப்புகள்[தொகு]