டைசோடியம் பைரோபாசுப்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைசோடியம் பைரோபாசுப்பேட்டு
டைசோடியம் பைரோபாசுப்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைசோடியம் டையைதரசன் டைபாசுப்பேட்டு
வேறு பெயர்கள்
டைபாசுபாரிக் அமிலம், டைசோடியம் உப்பு
டைசோடியம் டையைதரசன் பைரோபாசுபேட்டு
டைசோடியம் டைபாசுப்பேட்டு
சோடியம் அமில பைரோபாசுப்பேட்டு.
இனங்காட்டிகள்
7758-16-9 Y
ChemSpider 22859 N
EC number 231-835-0
InChI
  • InChI=1S/2Na.H4O7P2/c;;1-8(2,3)7-9(4,5)6/h;;(H2,1,2,3)(H2,4,5,6)/q2*+1;/p-2 N
    Key: GYQBBRRVRKFJRG-UHFFFAOYSA-L N
  • InChI=1/2Na.H4O7P2/c;;1-8(2,3)7-9(4,5)6/h;;(H2,1,2,3)(H2,4,5,6)/q2*+1;/p-2
    Key: GYQBBRRVRKFJRG-NUQVWONBAI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24451
SMILES
  • [Na+].[Na+].[O-]P(=O)(O)OP([O-])(=O)O
UNII H5WVD9LZUD Y
பண்புகள்
Na2H2P2O7
வாய்ப்பாட்டு எடை 221.94 கி/மோல்
தோற்றம் வெண்மையான நெடியற்ற தூள்
அடர்த்தி 2.31 கி/செ.மீ3
உருகுநிலை >600 °செல்சியசு
11.9 கி/100 மி.லி (20 °செல்சியசு)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4645 (அறுநீரேற்று)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
2650 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டைசோடியம் பாசுப்பேட்டு
பெண்டாசோடியம் டிரைபாசுப்பேட்டு
சோடியம் எக்சாமெட்டா பாசுப்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் கால்சியம் பைரோபாசுப்பேட்டு
டைபொட்டாசியம் பைரோபாசுப்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

டைசோடியம் பைரோபாசுப்பேட்டு (Disodium pyrophosphate) என்பது Na2H2P2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டைசோடியம் டையைதரசன் டைபாசுப்பேட்டு இருசோடியம் பைரோபாசுப்பேட்டு, சோடியம் அமிலம் பைரோபாசுப்பேட்டு என்ற பெயர்களாலும் இச்சேர்மத்தை அழைக்கலாம் [1]. சோடியம் நேர்மின் அயனிகளும் பைரோபாசுப்பேட்டு எதிர்மின் அயனிகளும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. வெண்மை நிறத்துடன் தண்ணீரில் கரையக்கூடிய திண்மமாக இச்சேர்மம் உள்ளது. இடுக்கி இணைப்பிடிப்புள்ளாக்கும் சேர்மமாகவும் தாங்கலாகவும் டைசோடியம் பைரோபாசுப்பேட்டு செயல்படுகிறது. உணவுத் தொழிற்சாலைகளில் இச்சேர்மம் பலவகைகளில் பயன்படுகிறது. தண்ணீரிலிருந்து படிகமாகும்போது இது அறுநீரேற்றாக உருவாகிறது. ஆனால் அறை வெப்பநிலைக்கு மேலான வெப்பநிலையில் இது நீரை இழக்கிறது.

பைரோபாசுப்பேட்டு ஒரு பல்லிணைதிற எதிர்மின் அயனியாகும். இது பல்லிணைதிற நேர்மின் அயனிகள் மீது அதிக நாட்டம் கொண்டதாக இருக்கிறது. உதாரணம்: Ca2+ சோடியம் டையைதசன் பாசுப்பேட்டை சூடாக்குவதன் மூலம் இதை தயாரிக்க முடியும்.

2 NaH2PO4 → Na2H2P2O7 + H2O

ரொட்டி தயாரிப்பில் டைசோடியம் பைரோபாசுப்பேட்டு ஒரு புளிப்பேற்றும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. சோடியம் பைகார்பனேட்டுடன் இது வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு வாயுவை இது வெளியிடுகிறது.

Na2H2P2O7 + NaHCO3 → Na3HP2O7 + CO2 + H2O

இதன் செயலின் வேகத்தை பாதிக்கும் வகையில் பல்வேறு தரங்களில் டைசோடியம் பைரோ பாசுப்பேட்டு கிடைக்கிறது. இதன் விளைவாக கிடைக்கும் பாசுப்பேட்டு எச்சம் சுவைற்று அல்லது விரும்பத்தகாத சுவையுடன் இருக்கிறது. வழக்கமாக மிகவும் இனிமையான கேக்குகளில் டை சோடியம் பைரோபாசுபேட்டு பயன்படுத்தப்படுகிறது, இது அந்த விரும்பத்தகாத சுவையை மறைக்கிறது.

டைசோடியம் பைரோபாசுப்பேட்டும் மற்றும் பிற சோடியம் , பொட்டாசியம் பல்பாசுப்பேட்டுகளும் உணவு பதப்படுத்துதலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பிய எண் திட்டத்தில், அவை கூட்டாக ஐ 450 என அடையாளப்படுத்தப்படுகின்றன. டைசோடியத்திற்கு ஐ450 (ஏ) என்ற குறியீடு நியமிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உணவுப் பயன்பாட்டிற்காக இது பொதுவாக பாதுகாப்பானதென அங்கீகரிக்கப்பட்டுள்ளது . புளித்த வேகவைத்த பொருட்களுக்கு பேக்கிங் சோடாவுடன் வினை புரிவதற்கான ஓர் அமில மூலமாக இது கருதப்படுகிறது.

டைசோடியம் பைரோபாசுப்பேட்டு சில வகையான தயாரிப்புகளில் சுவைக்குப் பின சற்று கசப்பான சுவையை விடுகிறது, ஆனால் "போதுமான சமையல் சோடாவைப் பயன்படுத்துவதன் மூலமும், கால்சியம் அயனிகள், சர்க்கரை அல்லது சுவைகளின் மூலத்தையும் சேர்ப்பதன் மூலம் டைசோடியம் பைரோபாசுப்பேட்டின் சுவையை மறைக்க முடியும். உருளைக் கிழங்கு பதப்படுத்தல் செயல்முறையில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

தோல் பதப்படுத்தலில் செயலாக்கத்தின் போது மறைந்திருக்கும் இரும்பு கறைகளை அகற்ற இது பயன்படுத்தப்படுகிறது. ஐதரசன் பெராக்சைடு கரைசல்களை ஒடுக்கமடையாமல் தடுத்து நிலைப்படுத்த இது உதவுகிறது. பால் உற்பத்தி பயன்பாடுகள் சிலவற்றிலும் சல்பாமிக் அமிலத்துடன் சேர்த்து இதைப் பயன்படுத்தலாம். பல்லில் படர்ந்திருக்கும் சீமைச் சுண்ணாம்பு போன்ற பொருளை அகற்ற பற்பசைகளிலும் டைசோடியம் பைரோபாசுப்பேட்டு பயன்படுத்தப்படுகிறது. பன்றி இறைச்சி மற்றும் கோழி இறைச்சி தயாரிப்பில் முடி மற்றும் வெண் செதிள் துணுக்குகள் ஆகியவற்றை அகற்றவும் டைசோடியம் பைரோபாசுப்பேட்டு உதவுகிறது.

பாதுகாப்பு[தொகு]

சுண்டெலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கப்படும்பொது இதன் உயிர் கொல்லும் அளவு கிலோ கிராமுக்கு 2650 மில்லி கிராம் ஆகும். தோல் மற்றும் கண்களில் எரிச்சலுண்டாக்கும் என்பதால் கவனமுடன் கையாள்வது அவசியமாகும். அதிகமான நீரில் கழுவுதலும் மருத்துவ உதவியும் உடனடி முதலுதவி நடவடிக்கைகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lallemand Baking Update: Chemical Leaveners Volume 1 / Number 12" (PDF). www.lallemand.com. Lallemand Inc. 1996. பார்க்கப்பட்ட நாள் 6 January 2018.

புற இணைப்புகள்[தொகு]