தோரியானைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரியானைட்டு
Thorianite
மடகாசுகரில் கிடைத்த தோரியானைட்டு படிகங்கள் (அளவு: 1.6 x 1.4 x 1.3 செ.மீ)
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுதோரியம் டையாக்சைடு, ThO2
இனங்காணல்
நிறம்அடர் சாம்பல், பழுப்பும் கருப்பும்
படிக இயல்புகனசதுரப் படிகங்கள்,
படிக அமைப்புசமவியல்பு
இரட்டைப் படிகமுறல்ஊடுறுவல் இரட்டை {111} பொதுவானது
பிளப்புதெளிவற்றது
முறிவுஒழுங்கற்ற பிளவு, சங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை6.5 – 7
மிளிர்வுபிசினுடைய துணை உலோகம்
கீற்றுவண்ணம்சாம்பல், சாம்பல் பச்சையும் கருப்பும்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது, மெல்லிய விளிம்புகளில் ஒளி கசியும்
ஒப்படர்த்தி9.7
ஒளியியல் பண்புகள்சமதிருப்பம்
ஒளிவிலகல் எண்n = 2.20 – 2.35
மேற்கோள்கள்[1][2][3]

தோரியானைட்டு (Thorianite) என்பது ThO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும் [4]. இக்கனிமம் 1904 ஆம் ஆண்டில் ஆனந்த குமாரசாமி என்பவரால் யுரேனைட்டு என விவரிக்கப்பட்டது [5]. ஆனால் இலண்டனைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியர் சர் வைந்தம் ரோவ்லாண்டு தன்சுடன் என்பவர் இதை ஒரு புதிய வகை கனிமம் என்று அடையாளப்படுத்தினார் [6]. கனிமத்தின் உட்கூறுகளின் அளவில் தோரியத்தின் சதவீதம் அதிகமாக காணப்படுவதால் இதற்கு தோரியானைட்டு என்ற பெயரிடப்பட்டது; யுரேனியம், இலந்தனம், சீரியம், பிரசியோடைமியம் மற்றும் நியோடைமியம் ஆகிய தனிமங்களின் ஆக்சைடுகளும் ஈலியம் சிறிதளவும் கலந்துள்ளன. இத்தாது பிட்ச்பிளெண்டு தாதுவை விட சற்றே குறைவான கதிரியக்கத்தன்மை கொண்டது, ஆனால் இதன் உயர் ஆற்றல் காமா கதிர் வீச்சு காரணமாக இதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது கடினமாகும். தோரியானைட்டு படிகங்களில் ஒளி புகாது. ஆனால் இதன் மெல்லிய விளிம்புகளில் ஒளி கசியும். இலங்கையின் வண்டல் கற்களில் இது பொதுவாகக் காணப்படுகிறது. அங்கு இது பெரும்பாலும் சிறிய, கனமான, கருப்பு நிற , கனசதுரப் படிகங்களாக தோன்றுகிறது. மிகப்பெரிய படிகங்கள் பொதுவாக 1.5 செ.மீ அளவுக்கு அருகில் இருக்கும். மிகப் பெரிய படிகங்கள் 6 செ.மீ அளவு வரைக்கும் கிடைப்பதாக மடகாசுகரிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியல்[தொகு]

நிறத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட புவியீர்ப்பு மற்றும் இயைபு ஆகிய மூன்று வகையான தோரியனைட்டுகள் வேறுபடுத்தப்பட்டுள்ளன:[7].

•α- தோரியானைட்டு
•β- தோரியானைட்டு
•γ- தோரியானைட்டு

தோரியானைட்டும் யுரேனைட்டும் ஒரு முழுமையான திண்மக் கரைசலாக செயற்கை மற்றும் இயற்கை முறையில் உருவாகின்றன[8]. இரண்டு இனங்களுக்கிடையில் பிரிவு Th: U = 1: 1 என்ற விகிதத்தில் உள்ளது, யுரேனியம் 46.50% அளவிலும் தோரியம் 87.9% அளவு வரையும்கூட மாறுபடுகிறது.

அரு மண் தனிமங்களில் , முக்கியமாக சீரியம் எடையில் 8% வரை தோரியத்திற்கு மாற்றாக இருக்கிறது. சிரியம் இங்கு Ce4+ அயனியாக இருக்கலாம். CeO2 - PrO2 - ThO2 - UO2.வரிசையின் முழுமையான தொடர் அரியப்பட்டுள்ளது. சிறிதளவு Fe3+ அயனியும் சிர்க்கோனியமும் கூட ஓரினச் சார்பைக் கொண்டுள்ளன. ஈயம் அநேகமாக கதிரியக்கத் தன்மை கொண்டிருக்கலாம்.

வகைகள்[தொகு]

•ஆல்டானைட் - 14.9% முதல் 29.0% UO 2 மற்றும் 11.2% முதல் 12.5% PbO வரை கொண்ட வகை தோரியானைட்டு [9] •யுரேனோதோரியானைட்டு [10] •தோரியனைட் செரியன்[11] •தோரியானைட்டு லா [11]

தோற்றம்[தொகு]

கடற்கரை மணல் கனரக கனிம இடங்கள் தீப்பாறைகள் மற்றும் பொதுவாக வண்டல் படிவுகளில் தோரியானைட்டு காணப்படுகிறது . •இலங்கை - தென் மாகாணத்தின் காலி மாவட்டம், நீரோடை சரளைகளில்; பலாங்கொடை இலங்கையின் சபரகமுவா மாகாணம் அருகில், இருக்கும் தீப்பாறைகளில் இது கிடைக்கிறது.
இந்தியாதிருவிதாங்கூர் ( கேரளா ) கடற்கரை மணலில்
•மடகாசுகர் - பெட்ரோகா மற்றும் அந்தோலோபின் வண்டல் படிவுகளில் காணப்படுகிறது. [1] டலனாரோ வில் மிகப் பெரிய படிகங்கள்;
•உருசியா - சைபீரியா கருப்பு மணலில் , சைபிரியாவின் யெனீசி மலைத்தொடரில்
. •அமெரிக்காவின் கிழக்கு , பென்சில்வேனியாவில், ; மொன்டானாவின் எலினாவுக்கு அருகில் * கனடா - அதாபாசுகா ஏரிக்கு கிழக்கே சார்லபோயிசு ஏரியில் தீப்பாறையில் யுரேனைட்டுடன் கிடைக்கிறது
. •தென் ஆப்ரிக்கா - கிழக்கு டிரான்சுவாலில்
•காங்கோ ஜனநாயக குடியரசு - கசாய் பகுதி.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.
  2. Mindat.org
  3. Webmineral data
  4. Frondel, C. (1958). Systematic Mineralogy of Uranium and Thorium. United States Government Printing Office. https://archive.org/details/bub_gb_5KoPAAAAIAAJ. 
  5. Coomaraswamy, A.K. (1904). "Uraninite". Spolia Zeylanica Pt. 6 (2): 57. 
  6. Dunstan, Wyndham R. (1904-03-31). "The occurrence of Thorium in Ceylon". Nature 69 (1796): 510–511. doi:10.1038/069510d0. Bibcode: 1904Natur..69..510D. https://zenodo.org/record/1429437. 
  7. Kobayashi, M. (1912). "On the composition of thorianite". Tohoku Imp. Univ. Sci. Repts. 1 (Ist Ser): 201–206. 
  8. Palache, C.; H. Berman; C. Frondel (1944). Dana's System of Mineralogy, Volume 1. John Wiley and Sons, New York. பக். 620–622. 
  9. {{Cite journal • | volume = II • | issue = 6 • | pages = 105–107 • | last = Bespalov • | first = M.M. • | title = On discovery of a new mineral of the thorianite group [in Russian] • | journal = Sovietskaya Geologiya • | year = 1941 • }}
  10. {{Cite web • | title = Uranothorianite mineral information and data • | accessdate = 2007-06-28 • | url = http://www.mindat.org/min-4114.html • }}
  11. 11.0 11.1 {{Cite web • |title = Minerals with crystal structure determined • |accessdate = 2007-06-27 • |url = http://sdpd.univ-lemans.fr/minknown.html#T • |url-status = dead • |archiveurl = https://web.archive.org/web/20070927022021/http://sdpd.univ-lemans.fr/minknown.html#T • |archivedate = 2007-09-27 • }}

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியானைட்டு&oldid=3596035" இலிருந்து மீள்விக்கப்பட்டது