போலு மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போலு மாகாணம் (Bolu Province, துருக்கியம்: Bolu ili ) என்பது வடமேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணமானது நாட்டின் தலைநகரான அங்காராவுக்கும் நாட்டின் மிகப்பெரிய நகரமான இசுதான்புல்லுக்கும் இடையிலான ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த மாகாணமானது 7,410 கிமீ², பரப்பளவைக் கொண்டுள்ளது, மற்றும் இதன் மக்கள் தொகை 271,208 ஆகும். [ மேற்கோள் தேவை ]

இது ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட பொலு நகரத்தை மையமாகக் கொண்ட மாகாணமாகும். இது கண்ணைக்கவரும் காடுகள் நிறைந்த மலை மாவட்டத்தைக் கொண்டது.

இங்கு சிறிய அளவிலான வேளாண் நிலங்களும், ஏராளமான காடுகளும் உள்ளன. இங்கு நல்ல பாலாடைக்கட்டி மற்றும் பாலேடு, பால் உற்பத்தி உள்ளிட்ட சில பால் பண்ணை தொழில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உள்ளுரிலேயே விற்கப்பட்டு நுகரப்படுகின்றன. குறிப்பாக போலுவில் பெருமளவு போக்குவரத்து சார்ந்த வர்த்தகம் உள்ளது. காரணம் இசுதான்புல் - அங்காரா நெடுஞ்சாலையில் போலு மலை முக்கிய நிலப்பரப்பு ஆகும். 2007 ஆண்டு போலு மலை சுரங்கம் திறக்கப்படும்வரை, பெரும்பாலான பயணிகள் உணவு மற்றும் ஓய்வுக்காக இங்கு நின்று சென்றனர். போலுவுக்கு உயர்தர உணவு வகைகளின் நீண்ட பாரம்பரியம் உள்ளது. வருடாந்திர சமையல் போட்டிகள் மெங்கனில் நடத்தப்படுகின்றன.

நிலவியல்[தொகு]

போலு ஆறு ( போலி சு ) மற்றும் கோகா ஆறு ஆகியவை இந்த மாகாணத்தில் பாய்கின்றன.

மாகாணத்தில் காடுகள், ஏரிகள் மற்றும் மலைகள், மூன்று வகை மான் இனங்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நிறைந்துள்ளன. மற்றும் வார இறுதியில் விடுமுறை நாட்களில் வனநடை மற்றும் மலை ஏற்றம் செய்பவர்கள் மத்தியியல் இம்மாகாணம் பிரபலமாக உள்ளது.

மாகாணத்தின் சில பகுதிகள் நிலநடுக்கத்துக்கு ஆளாகின்றன.

வரலாறு[தொகு]

போலு முதன்முதலில் எப்போது நிறுவப்பட்டது என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. சுமார் 100,000 ஆண்டுகள் பழமையான சில தொல்பொருள்கள் இப்பகுதியியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை இப்பகுதியில் வசித்தத மக்களின் பழமையைக் காட்டுகின்றன.

இப்போது போலு மாகாணத்தில் உள்ள பகுதிகளானது கிழக்கு பித்தினியா மற்றும் தென்மேற்கு பாப்லகோனியாவில் இருந்தவை என இருந்தன. இப்பகுதியானது முன்பு பித்தினிய என்று அழைக்கப்பட்ட காரணமான பித்தினியா நகரமானது இக்காலத்திய போலு நகரம் ஆகும். பொ.ச.மு. 375 வாக்கில், பித்தினியா பாரசீகத்திடமிருந்து சுதந்திரம் பெற்றது, பின்னர் அரசர் பாஸ் இதை கைப்பற்ற பேரரசர் அலெக்சாந்தர் எடுத்த முயற்சியை தோற்கடித்தார்.[1] கி.மு. 88 வரை பஃப்லாகோனியாவின் சில பகுதிகளைக் கொண்ட பித்தினியன் பகுதி சொந்த ராஜ்ஜியத்தைக் கொண்டதாக இருந்தது. ஆனால் பொன்டஸ் இராச்சியத்தின் மன்னராக போன்டஸின் ஆறாவது மித்ரிடேட்ஸ் வந்தபோது இப்குதியை அவரது ஆட்சியியன்கீழ் கொண்டுவந்தார். உரோமைப் பேரரசு உதவியுடன் கடைசி பித்தினிய மன்னர், நான்காம் நிக்கோமெடிஸ் தனது சிம்மாசனத்தை மீண்டும் பெற்றார், ஆனால் அவரது மரணத்துக்குப் பிறகு இராச்சியமானது ரோமுக்கு வழங்கப்பட்டது. இது மூன்றாம் மித்ரிடாடிக் யுத்தத்திற்கும், பொன்டஸின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது, இப்பகுதி ரோமானியப் பேரரசில் இணைக்கப்பட்டது, இது ஒரு மாகாணமாக பப்ளகோனியாவில் பித்தினியாவுடன் இணைந்து இருந்தது. பைசாந்தியப் பேரரசின் கீழ், போலு பகுதி மேற்கு பித்தினியாவிலிருந்து சாகர்யா நதிப்பகுதியைக் கொண்டு பிரிக்கப்பட்டது. இது மேற்கு பித்தினியா என்ற பெயரைப் பெற்றது. சாகர்யா இன்னும் மாகாணத்தின் தெற்கு மற்றும் மேற்கு எல்லையாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Memnon, History of Heracleia, 12
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலு_மாகாணம்&oldid=2868230" இலிருந்து மீள்விக்கப்பட்டது