இந்தோனேசிய ஹக்கா அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோனேசிய ஹக்கா அருங்காட்சியகம்
Museum Hakka Indonesia
Map
பொதுவான தகவல்கள்
வகைஅருங்காட்சியகம்
இடம்கிழக்கு ஜகார்த்தா, ஜகார்த்தா, இந்தோனேசியா
திறப்பு30 ஆகஸ்டு 2014
வலைதளம்
www.museumhakkaindonesia.com

இந்தோனேசிய ஹக்கா அருங்காட்சியகம் (Indonesian Hakka Museum) (இந்தோனேசிய : அருங்காட்சியகம் ஹக்கா இந்தோனேசியா ) என்பது இந்தோனேசியாயாவில் ஜகார்த்தாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கிழக்கு ஜகார்த்தாவில் உள்ள தமன் மினி இந்தோனேசியா இண்டா என்னும் இடத்தில் உள்ள ஹக்கா மக்களைப் பற்றிய ஒரு அருங்காட்சியகமாகும்.[1]

வரலாறு[தொகு]

இந்த அருங்காட்சியகத்தை 30 ஆகஸ்ட் 2014 ஆம் நாளன்று ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுடோயோனோ திறந்து வைத்தார்.[2]

அமைப்பு[தொகு]

இந்தோனேசியாவில் ஹக்காவின் வரலாறு இந்தோனேசிய சீன வரலாற்றின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. ஆதலால் இந்தோனேசிய சீன வரலாற்றை முதலில் முன்வைப்பது இயற்கையாக அமைகிறது. அதைத் தொடர்ந்து அமைவது இந்தோனேசிய ஹக்காவின் வரலாறு ஆகும். இதற்கிடையில், யோங்டிங் ஹக்கா இந்தோனேசியாவில் ஏராளமான ஹக்கா மக்களைக் கொண்டுள்ளது. அவர்களில் பலர் மருந்தாளுநர்களாக உள்ளார்கள். அவர்களின் மூதாதையர்கள் யோங்டிங் புஜியனின் மலைப்பகுதிகளில் 'துலோ' என்னுமிடத்தில் அவர்களின் தனித்துவமான குடியிருப்புகளில் வாழ்ந்து வந்தனர். இந்த அருங்காட்சியகத்தின் கட்டட வடிவமைப்பானது 'ஜெங் செங் லூ' என்று அழைக்கப்படும் பூர்வீக துலோவின் மாதிரியாக அமைந்துள்ளது.[3] துலோ என்ற வடிவமைப்பானது ஒரு அருங்காட்சியகத்திற்கு சாத்தியமில்லாத, அத்துடன் பொருந்தி வராத வீடாகக் காட்சிக்குத் தெரியலாம்.[4]

துலோ வடிவம்[தொகு]

ஹக்கா சீனர்களால் விரும்பப்படுகின்ற பெரிய, வட்டமான, மண் கட்டிடங்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களை, சில நேரங்களில் நூற்றுக்கணக்கானவர்களை ஒரே கூரையின் கீழ் வாழ உதவி செய்கிறது. அவை பொதுவாக சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள யோங்டிங் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும் அவை மிகவும் அடர்த்தியான வெளிப்புறச் சுவர்களைக் கொண்டு, பலப்படுத்தப்பட்டு மூடப்பட்டுள்ள வகையில் காணப்படுகின்றன. துலோ வடிவ வீடுகளை காஸ்மோபோலிடன் நகராகக் காணப்படுகின்ற இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் காண்பது அரிதாகும். இருந்தபோதிலும் இந்தோனேசிய ஹக்கா அருங்காட்சியகம் நகரின் கிழக்குப் பகுதியில் துலோ வடிவ அமைப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், ஜகார்த்தா துலோ இல்லத்தைப்போல மூன்று தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது. பாரம்பரிய துலோவில் வழக்கமாக மூன்று தளங்கள் காணப்படும்.[4]

காட்சிப்பொருள்கள்[தொகு]

இந்தோனேசியாவிற்கு ஹக்கா சீன சமூகத்தின் பங்களிப்பினை வெளிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கிழக்கு ஜகார்த்தாவில் உள்ள தமன் மினி இந்தோனேசியா இண்டா என்னும் இடத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் ஒரு கலாச்சார சுற்றுலா பூங்காவாகத் திகழ்கிறது. இதில் நாட்டின் 34 மாகாணங்களிலிருந்தும், பிற பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட பாரம்பரிய இந்தோனேசிய பழங்குடி வீடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தோனேசிய ஹக்கா அருங்காட்சியகம், துலோவில் உள்ள இரண்டு சீன அருங்காட்சியகங்களான இந்தோனேசிய சீன அருங்காட்சியகம் மற்றும் இந்தோனேசிய யோங்டிங் ஹக்கா அருங்காட்சியகம் ஆகியவற்றுடன் இணைந்து அமைந்துள்ள நிலையில் சீன இனத்தைச் சேர்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றனர் என்பதையும், இந்தோனேசியாவின் பிற பழங்குடியினருக்கு அவர்கள் சமமான நிலையில் உள்ளனர் என்ற கருத்தையும் முன்வைக்கின்றன.[4]

கட்டிடக்கலை[தொகு]

இந்தோனேசிய ஹக்கா அருங்காட்சியகக் கட்டிடத்தின் கட்டிடக்கலை பாரம்பரிய புஜியன் துலோ வீடுகளைப் பின்பற்றி அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் பின்வரும் மூன்று பிரிவுகளைக் கொண்டு அமைந்துள்ளது:[5]

  • இந்தோனேசியாவின் சீன அருங்காட்சியகம்
  • இந்தோனேசியாவின் ஹக்கா அருங்காட்சியகம்
  • இந்தோனேசியாவின் யோங்டிங் ஹக்கா அருங்காட்சியகம்

பார்வையாளர் நேரம்[தொகு]

இந்த அருங்காட்சியகம் திங்கள் தவிர தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Museum Hakka Indonesia". TMII Pesona Indonesia. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
  2. Prodjo, Wahyu Adityo (10 February 2015). "Mengenal Museum Hakka Indonesia" (in Indonesian). Kompas.com. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. Indonesian Hakka Museum
  4. 4.0 4.1 4.2 Randy Mulyanto, How Hakka Chinese helped build Indonesia, overcoming exclusion and discrimination to serve the country South China Morning Post, 11 September 2019
  5. "Indonesian Hakka Museum". Museum Hakka Indonesia. 2014. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.