அக்தர் உசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் அக்தர் உசைன் (Dr Akhtar Husain1912-1992 [1] உருது: اختر حسین ) முனைவர் அக்தர் உசைன் ராய்புரி [2] என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு பாகிஸ்தான் அறிஞர், பத்திரிகையாளர் மற்றும் அகராதி எழுத்தாளர் ஆவார் . ட தி டஸ்ட் ஆஃப் தி ரோட்: எ டிரான்ஸ்லேஷன் ஆஃப் கார்ட்-இ-ராவின் புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார். அவர் இறந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.[3][4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அக்தர் உசைன் 1912 இல் பிரித்தானியவின் இந்தியப் பேரரசின் ராய்ப்பூர் மாவட்டத்தில் பிறந்தார்.[5] தற்போது இந்தப் பகுதி இந்தியாவின் சத்தீஸ்கரில் உள்ளது. இவரின் தந்தை சையத் அக்பர் உசைன் ஒரு பொறியாளராக இருந்தார். அவரது தாயார் மும்தாசுன்னிசா பெண்கள் பத்திரிகைகளில் வெளியீட்டாளராக இருந்தார். அக்தருக்கு மூன்று வயதாக இருந்தபோது அவரின் தாய் இருபத்தி ஆறாவது வயதில் இறந்தார்.[1]

ஒரு குழந்தையாக இருந்த சமயத்தில் இருந்தே அக்தர் நூல்களை வாசிப்பதில் விருப்பம் கொண்டவராக இருந்தார்.இவர் செலவைக் குறைப்பதற்காக இந்தியில் நூல்களை வாங்கினார். பெரும்பானமையான நூல்கள் தேவநாகிரி எழுதுக்களால் எழுதப்பட்டிருந்தது. இவருக்கு உருது வாசிக்கத் தெரியத காரணத்தினாலும் இவர் இந்தியில் நூல்களை வாங்கினார். இவரின் பன்னிரெண்டாவது வயதில், பள்ளி நூலகத்தை ஒழுங்கமைக்க உதவுமாறு அவரது பள்ளி ஆசிரியர் அவரிடம் கேட்டார். மேலும் அவரது ஆசிரியர் இந்தியினை கட்டாயமாக படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதைப் படிப்பது மட்டுமல்லாமல் அதனை எழுதவும் கற்றுக் கொண்டார். பராஜித் எனும் கதையினை இவர் இந்தியில் எழுதினார். மேலும் அதனை மாதுரி பதிப்பகம் வெளியிட்டது. அப்போது அவருக்கு வயது 16 ஆகும்.[1]

உருது மற்றும் இந்தி தவிர சமஸ்கிருதம், பெங்காலி, பாரசீக, ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு ஆகிய மொழிகளிலும் இவர் புலமை பெற்றிருந்தார்.[6]

கல்வி மற்றும் தொழில்[தொகு]

தனது உயர் படிப்புகளைத் தொடர உசைன் கல்கத்தா சென்றார். அந்த சமயத்தில் பெங்காலி, இந்தி மற்றும் உருது மொழிகளில் நூல்களை வெளியிடுவதற்கான முக்கிய மையமாகவும் அந்த இடம் இருந்தது. ஆனால் 1932 இல் அங்கிருந்து வெளியேறிய பின்னர், உசைன் வங்காள கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாமின் பிரபலமான படைப்புகளை உருது மொழியில் மொழிபெயர்த்தார்.[1]

1935 வாக்கில், உசைன் காவல்துறை அதிகாரியும் குற்ற புனைகதை புதின எழுத்தாளருமான ஜாபர் உமரின் மகள் ஹமீதாவை திருமணம் செய்தார். அக்தர் உசைன் வரலாற்று 1936 கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் மகாத்மா காந்தி கலந்து கொண்டார்.[1] கவிஞர்களான சாகர் நிஜாமி மற்றும் மஜாஸ் நிஜாமி ஆகியோருடன் அவர் நண்பராக இருந்தார். ஹுசைனின் படைப்புகளைப் படித்த பிறகு இலக்கியத்தின் மீதான இவரின் ஆர்வம் அதிகரித்தது. ஆங்கிலம்-இந்தி அகராதி மற்றும் உருது இதழின் வெளியீட்டில் உதவுமாறு ஹுசைனை ஹூக் ஊக்குவித்தார். உசைன் ஒப்புக்கொண்ட பிறகு, அவர்கள் இருவரும் அவுரங்காபாத்திற்கு குடிபெயர்ந்தனர், அங்கு அவர்கள் அஞ்சுமான்-ஐ தரக்கி-ஐ உருது என்பதனைத் தொடங்கி சுமார் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினர். அந்த நேரத்தில், உசைன் உருது புத்தகங்களையும் "நகுடா" என்ற புனைப் பெயரில் விமர்சனம் செய்தார்.[7]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Dawn Books And Authors. "COLUMN: Stars from the past: Akhtar Husain Raipuri (1912–1992) by Mehr Afshan Farooqi".
  2. TNS Editor. "Raipuri's life and times". TNS - The News on Sunday. Archived from the original on 2018-10-02. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20. {{cite web}}: |last= has generic name (help)
  3. "The Dust of the Road".
  4. "The Dust of the Road A Translation of Gard-e-Raah". Archived from the original on 2016-05-28. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.
  5. Coppola, Carlo. "Iqbal and the Progressive Movement." Journal of South Asian and Middle Eastern Studies 1.2 (1977): 49.
  6. ʻAlī Javād Zaidī, A History of Urdu literature, Sahitya Akademi (1993), p. 404
  7. Dawn Books And Authors. "COLUMN: Stars from the past: Akhtar Husain Raipuri (1912–1992) by Mehr Afshan Farooqi".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்தர்_உசைன்&oldid=3592335" இலிருந்து மீள்விக்கப்பட்டது