அப்துர் ரகீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர் அப்துர் ரஹீம் (Abdur Rahim 7 செப்டம்பர் 1867 [1] - 1952), சில நேரங்களில் அப்துல் ரஹீம் என்று உச்சரிக்கப்படுகிறது. பிரித்தானிய இந்தியாவின் மாகாண நீதிபதி மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் முஸ்லிம் லீக்கின் முன்னணி உறுப்பினராக இருந்தார். 1929 ஆம் ஆண்டு முதல் 1934 வரை நிகில் பங்க பிரஜா சமிதி மற்றும் 1935 முதல் 1945 வரை இந்திய பிரித்தானிய இந்தியாவின் மத்திய சட்டமன்றத்தின் தலைவராக இருந்தார்.ஜூலை 20, 1908 ஆம் ஆண்டில் இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.ஆகஸ்ட் 1919 இல், இவர் விரத் திருத்தகை பட்டம் பெற்றார் .[2]

வாழ்க்கை[தொகு]

ரகீம் உயர் கல்வி கற்றவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தார். இவரின் மௌலவி அப்துர் ராப் இவர் மிட்னாபூர் மாவட்டத்தில் ஜமீன்தாராக இருந்தார்.இவர் கொல்கத்தாவில் உள்ள பிரசிடன்சி கல்லூரியிலும் இங்கிலாந்தில் உள்ள இன்சு ஆஃப் கோர்ட்டிலும் கல்வி கற்றார். 1890 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். பின்பு முஸ்லீம் லீக்கில் உறுப்பினர் ஆனார்[3].

தனது தொழிலைத் தாண்டி, ரஹீம் கல்வியிலும் சிறப்பாக செயல்பட்டு செனட் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரானார்.[4] மவுலானா ஆசாத் கல்லூரியின் அடித்தளத்தை வெற்றிகரமாக ஊக்குவித்தவர்களில் இவரும் ஒருவர்.

ஜூலை 20, 1908 ஆம் ஆண்டில் இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[5] மற்றும் செப்டம்பர் 1912 இல் லார்ட் இஸ்லிங்டன், லார்ட் ரொனால்ட்ஷே, ஹெர்பர்ட் ஃபிஷர் மற்றும் பிறருடன் ராயல் கமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[6]

ரஹீம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆனார்,[7] கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[3] ஆகஸ்ட் 1919 இல், இவர் விரத் திருத்தகை பட்டம் பெற்றார் .[2]

இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தபோது, ரஹீம் கல்கத்தா பல்கலைக்கழகத்திற்கு தொடர்ச்சியாக பல சொற்பொழிவுகளை ஆற்றினார். பின்னர் அவை ஹனஃபி, மாலிகி, ஷாஃபி மற்றும் ஹன்பாலி மத் படி முஹம்மது நீதித்துறை கோட்பாடுகள் என்ற தலைப்பில் அந்த உரைகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. இந்த உரைகள் அனைத்தும் தத்துவம் மற்றும் சட்டம் குறித்த சில சமீபத்திய ஐரோப்பிய நூல்களைக் கருத்தில் கொண்டு, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய நீதித்துறை கொள்கைகளை ஒப்பிட்டு வெளியிடப்பட்டது.[8][9]

அரசியலில் நுழைந்த இவர் , வங்காள மாகாண செயற்குழுவில் உறுப்பினரானார். மற்றும் 1921 முதல் 1925 வரை மாகாண நிர்வாகியாக பணியில் இருந்தார்.

3 ஜூன் 1925 ஆம் ஆண்டின் கிங்ஸ் பிறந்தநாள் மரியாதை பட்டியலில் இவர் ஒரு நைட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் இந்தியாவாக இவரது பெயரும் இடம்பெற்றத.[10][11]

அவரது மகள் பேகம் நியாஸ் பாத்திமா பார் அட் லா மற்றும் பாக்கித்தானின் ஐந்தாவது பிரதமரான உசைன் சகீத் சுராவர்தி என்பவரைத் திருமணம் செய்தார. ஜலாலுதீன் அப்துர் ரஹீம் நீட்சே தத்துவவாதி மற்றும் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார் .

வெளியீடுகள்[தொகு]

ஹனஃபி, மாலிகி, ஷாஃபி மற்றும் ஹன்பாலி மத்ஹப் படி முஹம்மது நீதித்துறை கோட்பாடுகள் எனும் நூலினை வெளியிட்டார். இதனை பி.எல்.டி பதிப்பகம் வெளியிட்டது.[9]

குறிப்புகள்[தொகு]

  1. [1]
  2. 2.0 2.1 London Gazette, Issue 31587 of 7 October 1919, p. 12419 பரணிடப்பட்டது 2012-05-27 at the வந்தவழி இயந்திரம்
  3. 3.0 3.1 Salahuddin Ahmed, Bangladesh Past and Present (APH Publishing, 2004), p. 86
  4. A History of the Freedom Movement: 1906–1936, p. 409
  5. London Gazette, Issue 28161 of 24 July 1908, p. 5420 பரணிடப்பட்டது 2012-05-27 at the வந்தவழி இயந்திரம்
  6. London Gazette, Issue 28642 of 6 September 1912, p. 6631 பரணிடப்பட்டது 2013-10-02 at the வந்தவழி இயந்திரம்
  7. S. M. Ikram, Indian Muslims and Partition of India (Atlantic Publishers & Distributors, 1992) p. 308-310
  8. M. Hamidullah, Emergence of Islam, extract at muslim-canada.org
  9. 9.0 9.1 The Principles of Muhammadan Jurisprudence at books.google.com
  10. London Gazette, Issue 33053 (Supplement) of 3 June 1925, p. 3770 பரணிடப்பட்டது 2012-05-27 at the வந்தவழி இயந்திரம்
  11. The Calcutta Review ser. 3, v. 15, 1925 (University of Calcutta, 1925) p. 396
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துர்_ரகீம்&oldid=3353249" இலிருந்து மீள்விக்கப்பட்டது