பசிபிகா அருங்காட்சியகம், பாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செஸ்ஸா மிஸ்ட்கோவ்ஸ்கியின் கிடந்த நிர்வாண நிலை ஓவியம்

பசிபிகா அருங்காட்சியகம் (Museum Pasifika) (நுசா துவா பாலி ) இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள ஒரு கலை அருங்காட்சியகம் ஆகும்..[1] பாலி பகுதியில் உள்ள அருங்காட்சியகங்கள் உபுத் கியானார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. பாலி நகரில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமாக உள்ள ஒரு அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் சர்வதேச தரமான ஓவியங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

துவக்கம்[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் ஆசிய பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு வகையான கலாச்சார கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் 2006 ஆம் ஆண்டில் மொயெரியான்டோ பி மற்றும் பிலிப் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகம் பசிபிகா நுசா துவா பாலி அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது.

சிறப்பு[தொகு]

நுசா துவா பாலி என்ற இடம் ஆடம்பரமான ரிசார்ட், சுத்தமான வெள்ளை மணலைக் கொண்ட கடற்கரைகள், அருமையான சூரிய உதயம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ள பாலி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு ஆரம்ப கால நிலையிலுள்ள வீரருக்கு கடல் விளையாட்டு உள்ளிட்ட பல வாய்ப்புகளை இந்த அருங்காட்சியகம் வழங்குகிறது. மிகவும் புகழ்பெற்ற கலைஞரின் கைவண்ணத்தை வெளிப்படுத்துகின்ற ஓவியங்களைக் காணச் சிறந்த இடமாகவும் இந்த அருங்காட்சியகம் உள்ளது. ஆசியா பசிபிக் பகுதியிலிருந்து 600 க்கும் மேற்பட்ட கலைப் படைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளதால் இந்த அருங்காட்சியகம் பசிபிகா அருங்காட்சியகம் என்ற பெயரினைப் பெற்றுள்ளது.பாலி நகரில் உள்ள பிற அருங்காட்சியகங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது பசிஃபிகா அருங்காட்சியகம் ஒரு புதிய அருங்காட்சியகம் என்றே கொள்ளலாம். அருங்காட்சியகத்தில், ஆசியா-பசிபிக் கலைஞரின் கலைப் படைப்புகள் அதிகம் உள்ளன. 2004 ஆம் ஆண்டில், இந்த அருங்காட்சியகம் ஆசிய-பசிபிக் கலை மையமாக செயல்பட்டு வந்தது. அக்காலகட்டத்தில் அது ஒரு அருங்காட்சியகம் என்ற வரையறைக்குள் வரவில்லை.[2]

வளர்ச்சி நிலை[தொகு]

2006 ஆம் ஆண்டில், ஆசியா-பசிபிக் கலை மையம் என்ற பெயரானது பசிபிகா அருங்காட்சியகம் என்று மாற்றம் பெற்றது. இங்கு காட்சிப்படுத்தப்படுள்ள காட்சிப்பொருள்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வர ஆரம்பித்தது, மேலும் இந்த அருங்காட்சியகம் நுசா துவா பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது, இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம் ஆனது ஆகிய காரணங்களால் கலை மையத்திலிருந்து இவ்வாறாக அருங்காட்சியகம் பெயர் மாற்றம் பெற்றது. அருங்காட்சியகத்தில் காட்டசப்படுத்தப்பட்டுள்ள கலை சேகரிப்புகள் பெரும்பாலும் நிரந்தரமான காட்சிப் பொருள்களாக இருந்தபோதிலும், இந்த அருங்காட்சியகத்தில் பெரும்பாலும் பாலினீஸ் கலைஞர் அல்லது பிற நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களால் நடத்தப்படுகின்ற கலைக் கண்காட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக ஆரம்பித்தது. பாலி நகரில் உள்ள பசிபிகா அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் பார்வையாளர்கள் பள்ளி மாணவர்கள் ஆவர். கலை ஆர்வலர்களும் அதிக எண்ணிக்கையில் இங்கு வருகின்றனர்.[2]

காட்சிக்கூட அறைகள்[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் 25 நாடுகளைச் சேர்ந்த 200 கலைஞர்கள் படைத்த 600 கலைப்பொருள்கள் உள்ளிட்ட கலைப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் அதிக எண்ணிக்கையிலான காட்சிக்கூடங்கள் உள்ளன.

  • காட்சிக்கூட அறை 1: இந்தோனேசியக் கலைஞர்களின் படைப்புகள்
  • காட்சிக்கூட அறை 2: இந்தோனேசியாவில் உள்ள இத்தாலியக் கலைஞர்களின் படைப்புகள்
  • காட்சிக்கூட அறை 3: இந்தோனேசியாவில் உள்ள டச்சுக் கலைஞர்களின் படைப்புகள்
  • காட்சிக்கூட அறை 4: இந்தோனேசியாவில் உள்ள பிரெஞ்சு கலைஞர்களின் படைப்புகள்
  • காட்சிக்கூட அறை 5: இந்தோனேசியாவில் உள்ள இந்தோ-ஐரோப்பிய கலைஞர்களின் படைப்புகள்
  • காட்சிக்கூட அறை 6: தற்காலிக கண்காட்சி
  • காட்சிக்கூட அறை 7: இந்தோசீனா தீபகற்பத்தைச்சேர்ந்த நாடுகளான லாவோஸ், வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாட்டின் கலைஞர்களின் படைப்புகள்
  • காட்சிக்கூட அறை 8: பாலினீசியா மற்றும் டஹிடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களின் படைப்புகள்
  • காட்சிக்கூட அறை 9: வனுவாட்டின் முதன்மைக் கலை மற்றும் அலோய் பிலியோகோ மற்றும் நிக்கோலாய் மைக்கௌடச்கின் ஆகியோரின் பசிபிக் தீவுகளின் ஓவியங்கள்
  • காட்சிக்கூட அறை 10: ஓசியானியா மற்றும் பசிபிக் பகுதிகளைச் சார்ந்த தபா
  • காட்சிக்கூட அறை 11: ஆசியா: ஜப்பான், சீனா, தாய்லாந்து, மலேசியா மற்றும் மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல கலைப்படைப்புகள்

நுழைவுக்கட்டண விவரம்[தொகு]

பசிபிகா அருங்காட்சியகம் ஐ.டி.டி.சி ஏரியா பிளாக் பி, நுசா துவா - பாலி, இந்தோனேசியா என்பதாகும். அருங்காட்சியகத்திற்கு நுழைவுக்கட்டணம் செலுத்த வேண்டும். நுழைவு கட்டணம், ஐடிஆர் 100.000/பெரியவர் ஒருவர், இது 8 அமெரிக்க டாலருக்கு நிகராகும். கட்டணம் செலுத்துவோருக்கு இலவச பானம் வழங்கப்படுகிறது. பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.

குறிப்புகள்[தொகு]

  1. Treasures of Bali, A Guide to Museums in Bali. 
  2. 2.0 2.1 Museum Pasifika Nusa Dua Bali

வெளி இணைப்புகள்[தொகு]