ஹேமாவதி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேமாவதி அணை
ஹேமாவதி அணை
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/கர்நாடகம், இந்தியா" does not exist.
நாடுஇந்தியா
அமைவிடம்ஹாசன் மாவட்டம், கர்நாடகா
புவியியல் ஆள்கூற்று12°45′N 76°03′E / 12.75°N 76.05°E / 12.75; 76.05[1]
நோக்கம்நீர்ப்பாசனம் & நீர் விநியோகம்
நிலைசெயல்பாட்டில்
திறந்தது1979
உரிமையாளர்(கள்)கர்நாடக அரசு
அணையும் வழிகாலும்
வகைஅணை
தடுக்கப்படும் ஆறுஹேமாவதி ஆறு
நீளம்15,394 அடி[1]

ஹேமாவதி அணை (ஆங்கில மொழி: Hemavati Dam and Reservoir) என்பது காவிரி ஆற்றின் முக்கிய துணையாறான ஹேமாவதி ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள அணை ஆகும். கொரூர் அணை என்றும் அழைக்கப்படும் இந்த அணையின் நீர் பாசனப் பயன்பாட்டிற்குப் பிறகு இறுதியாக உபரிநீர் கிருட்டிணராச சாகர் அணைக்கு வந்து சேரும். கர்நாடகம், தமிழ்நாடு மக்களின் ஜீவாதாரமாக இந்த அணை விளங்குகிறது.

வரலாறு[தொகு]

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் கொரூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே இந்த அணை அமைந்துள்ளது.[2] ஹாசனிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், சக்கேஷ்பூரிலிருந்து 63 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த ஹேமாவதி அணை உள்ளது.[3] மைசூர் மற்றும் மெதராஸ் இடையே போடப்பட 1924 காவிரி ஒப்பந்தத்தின் படி ஹேமாவதி ஆற்றில் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரின் அளவு குறையாமல் அணை கட்ட முயற்சி எடுக்கப்பட்டது. இதன்படி 1966 இல் தமிழ்நாட்டின் நீர்ப்பாசனத்துறை பொறியாளரும், மைசூர் நீர்ப்பாசனப் பொறியாளரும், மத்திய அரசின் நீர்ப்பாசனப் பொறியாளர் தலைமையில் தமிழக பாதிக்காதவாறு அணை கட்டப்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. கர்நாடக முதல்வராக வீரேந்திர பட்டீல் ஆட்சிகாலத்தில் 1968 இல் அணை கட்டுவதற்கு அடிக்கல் நடப்பட்டது.[4] 1971 ஜூலை 8 ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் இந்த அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.[5] அதே ஆண்டு ஆகஸ்ட் நான்காம் நாள் காவிரிப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைத்திட மத்திய அரசுக்கு ஆணையிட உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. சுமூகப் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்வதற்காக 1972 மே 27 ஆம் நாள் இந்த வழக்கு தமிழக அரசால் திரும்பப் பெறப்பட்டது. இறுதியாக 1979 இல் அணை கட்டிமுடிக்கப்பட்டு, பொதுப் பயன்பாட்டிற்கு வந்தது. பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நீர்பிடிப்பு மாதங்களாகவும், அக்டோபர் முதல் மே வரை நீர் திறப்பு மாதங்களாகவும் உள்ளன. 16,000 ஏக்கர் நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன.[1]

அமைப்பு[தொகு]

இந்த அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளாக 2,810 சதுர கிலோமிட்டருடன் மொத்தம் 37.103 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இதன் நீளம் 4,692 மீட்டரும், உயரம் 58.5 மீட்டருமாகும்.[2] 310 அடி அகலம் கொண்ட மொத்தம் ஆறு செங்குத்து மதகுக்கதவுகளைக் கொண்டது. இந்த அணையின் நீர் சஹுகார் சென்னையா கால்வாயும், சங்கரவள்ளி கால்வாய், ஸ்ரீராமதேவரா கால்வாய், ஹேமகிரி கால்வாய், அக்கிஹபல்லு, மண்டாகிரி போன்ற கால்வாய்கள் வழியாக முன்பருவக் கால சாகுபடிக்கு நீர் திறக்கப்படுகிறது[6]

வெள்ளப் பாதிப்புகள்[தொகு]

2019 ஆகஸ்ட் பருவமழையின் போது அணை நிறைந்து சக்லேஷ்பூர் மற்றும் சிக்மகளூரு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அரசுத் தரப்பு தகவலின்படி 208 வீடுகளும் 2,060 விவசாய நிலங்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.[7]

சுற்றுலா[தொகு]

இயற்கை சூழ்ந்த பகுதியாக இருப்பதால் இந்த அணை சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. மழைக்காலத்தில் குறிப்பாக அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு உகந்த காலங்களாகும்.[2] பரவாசுதேவ மற்றும் யோகநரசிம்ம கோவில்கள் அருகே உள்ளன. அணை அமைந்துள்ளா செட்டிஹள்ளி பகுதியில் 1860 ஆம் ஆண்டு பிரஞ்சு மிசனரியால் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுள்ளது. இது டைட்டானிக் கப்பல் வடிவத்தில் இருக்கும் இந்த ஆலயம் நீர்மட்டம் குறைந்திருக்கும் போது சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Hemavathy Reservoir". waterresources. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  2. 2.0 2.1 2.2 "Gorur Dam". hassan.nic.in. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  3. "HEMAVATHI DAM". trawell.in. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  4. "காவிரி உரிமையில் கலைஞர்". திமுக இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
  5. "MK says govt misleading House on Cauvery". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/MK-says-govt-misleading-House-on-Cauvery/articleshow/11591285.cms. பார்த்த நாள்: 8 November 2019. 
  6. "Water released from Hemavathi dam for Kharif crops". டெக்கான் ஹெரால்ட். https://www.deccanherald.com/state/water-released-from-hemavathi-dam-for-kharif-crops-760275.html. பார்த்த நாள்: 8 November 2019. 
  7. "Fear of inundation grips Hassan as inflow to Hemavathi Dam surges". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/mysuru/fear-of-inundation-grips-hassan-as-inflow-to-hemavathi-dam-surges/articleshow/70611653.cms. பார்த்த நாள்: 8 November 2019. 
  8. "ஹேமாவதி அணை நீர்மட்டம் உயருகிறதுநீர்தேக்கத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் பாதி மூழ்கியது". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Districts/2018/07/03055428/Hemavathi-dam-water-is-rising.vpf. பார்த்த நாள்: 8 November 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமாவதி_அணை&oldid=3293251" இலிருந்து மீள்விக்கப்பட்டது