பண்ணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்கப் பண்ணை நிலங்கள். நடுவண் நங்கூரப் பாசன முறையால் வயல்கள் வட்ட வடிவமாக உள்ளன
பாத்திகள் அமைந்த இடைக்கால ஆங்கிலேயப் பண்ணை வயல்கள்

பண்ணை (farm) என்பது வேளாண்மைக்காக பண்படுத்தப்பட்ட நிலப் பரப்பாகும். இதில் உணவுக்கான பயிர்களும் பிற பயிர்களும் விளைவிக்கப்படும்.; பண்ணை என்பது உணவு விளைச்சலுக்கான அடிப்படை ஏற்பாடாகும்.[1] பண்ணை புஞ்சை நிலங்களுக்கும் காய்கறிப் பண்ணைக்கும் பழப் பண்னைக்கும் பால்பண்ணைக்கும் பன்றிப் பண்ணைக்கும் கோழிப் பண்ணைக்கும் நார்ப்பயிர், உயிர் எரிபொருள், பிற வேளாண்பயிர்களை விளைவிக்கும் நிலங்களுக்கும் பயன்படும் சிறப்பு பெயராகும். . பண்ணை கால்நடைப் பண்ணை, அவற்றின் தீனிக் கொட்டில்கள், பழத்தோட்டங்கள், பண்ணைக் கட்டிடங்கள், விளையாட்டுத் திடல்கள், பண்ணை வீடுகள், வேளாண் கட்டிடங்கள் ஆகிய அனைத்தையும் சுட்டும் சொல்லாகும். தற்காலத்தில் இது நிலத்திலும் கடலிலும் அமைந்த காற்றுப் பண்ணைகள், மீன் பண்ணைகள், இறால் பண்ணைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கும்.

வேட்டை-உணவுதிரட்டும் சமூகங்கள் உணவு விளைவிப்பில் ஈடுபட்டு வேளாண் சமுகங்களாக படிமலர்ந்தபோது, பண்ணைத்தொழில் அல்லது வேளாண்மை தனித்தனியாக உலகின் பல்வேறு வட்டாரங்களில் தோன்றியது. இது 12,000 ஆண்டுகளுக்கு முன்பே மேற்காசியாவின் வளச் செம்பிறைப் பகுதியில் கால்நடை வளர்ப்போடு தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற்காலப் பண்ணைகள் பயிரிடலிலோ அல்லது கால்நடை வளர்ப்பிலோ வட்டாரச் சூழலுக்கு உகந்தபடி ஈடுபட்டு, தம் விளைபொருள்களை களச் சந்தைகளில் விற்றுப் பணமீட்டுகின்றன. இன்று பண்ணைப் பொருள்கள் உ லகமெங்கும் கொண்டுசென்று விற்கப்படுகின்றன.

வளர்ந்த நாடுகளில் தற்காலப் பண்ணைகள் உயர்நிலையில் எந்திரமயமாக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவில், கால்நடைகள் காட்டுப் பகுதி மேய்ச்சல் நிலங்களில் இனப்பெருக்கம் செய்து தீனிக்கொட்டில்களில் உணவளித்து வளர்க்கப்படுகின்றன. இங்கு உ ணவு விளைச்சல் உயர்நிலையில் எந்திர மயமாக்கப்பட்டுள்ளதால் வேளாண்பணியாளர்களின் தேவை மிகவும் குறைந்துவிட்டது. ஐரோப்பாவில், மரபான குடும்பப் பண்ணைகளே பெரிய தொழில்முறைப் பண்ணைகளை விடப் பரவலாக உள்ளன.ஆத்திரேலியாவில், காலநிலைமைகளால் பேரளவு வளர்க்க இயலாததால் பண்ணைகள் மிகப் பெரியனவாக அமைகின்றன. சற்றே குறைந்த வளர்ச்சியுள்ள நாடுகளில்லியல்பாக சிறுபண்ணைகளே பரவலாக உள்ளன. இவை அவற்றை நடத்தும் உ வர்களின் குடும்பத்தைப் பேணவே போதுமானவையாகும். உபரி விளைபொருள்கள் களச் சந்தைகளில் விற்றுப் பணமீட்டப்படுகின்றன.

சொற்பிறப்பியல்[தொகு]

1920 களில் கோவேறு கழுதை வண்டிப் பெட்டியுடன் உழவர் அறுவடை செய்தல், அயோவா, ஐக்கிய அமெரிக்கா

வேளாண் நிலவுடைமை எனும் பொருளில் பண்ணை எனும் சொல் பண்ணையிடு எனும் வினைச் சொல்லில் இருந்து உருவகியதாகும். இது வரிகட்டவேண்டிய நிலக்கிழாரின் வேளாண் நில வளாகத்தைக் குறித்தது. இச்சொல் இடைக்கால இலத்தீனச் சொல்லாகிய firma, பிரெஞ்சுமொழிச் சொல்ல்லாகிய ferme, ஆகியவற்றை வேர்ச்சொல்லாக கொண்டு பிறந்தது. இச்சொற்களின் முதற்பொருள் ஒப்பந்தம் அல்லது உடன்பாடு என்பதாகும்.[2] from the classical Latin adjective firmus meaning strong, stout, firm.[3][4] இடைக்காலத்தில் அனைத்து தனியார் நில வளாகங்களும் வேளாண்தொழிலில் ஈடுபட்டிருந்தன; இதுவே நிலக்கிழார்களின் வருவாய் வாயிலாக விளங்கியது. எனவே பண்ணைநிலம் வேளாண்தொழிலையும் ஆகுபெயராகக் குறித்தது.

வரலாறு[தொகு]

முந்து வரலாற்றுக் காலத்தில் தோன்றிப் பரவிய வேளாண்மை வட்டாரங்களைக் காட்டும் உலக வரைபடம்: வளச் செம்பிறை வட்டாரம் (இமு11,000 ), யாங்சி, மஞ்சளாற்றுப் படுகைகள் (இமு 9,000), புதிய கினியா தீவு (இமு 9,000–6,000), நடுவண் மெக்சிகோ (இமு 5,000–4,000), வடக்குத் தென்னமெரிக்கா ஐமு 5,000–4,000), ஆப்பிரிக்கச் சகாரா உள்பகுதி (இமு 5,000–4,000 BP,), கிழக்கு வட அமெரிக்கா (இமு 4,000–3,000).[5]

மாந்தரின வரலாற்றில் வேளாண்மை பல்வேறு காலங்களிலும் இடங்களிலும் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. வேட்டையில் இருந்து கால்நடை வளர்ப்புக்கும் உணவு திரட்டிய நிலையில் இருந்து உணவு விளைவிக்கும் வேளாண்மைக்கும் ஒருங்கே சமூகங்கள் மாறிய காலம் புதியகற்காலப் புரட்சி எனப்படுகிறது. இப்புரட்சி முதலில் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு ஓலோசீன் எனும் புவியியல் கால கட்டத்தில் தொடங்கியது[6] around 12,000 years ago.[7] இதுவே உலகின் முதல் வேளாண்மைப் புரட்சியாகும். இதர்கு அடுத்த வேளாண்புரட்சிகள் 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரித்தானிய வேளாண்புரட்சியும் 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் நிகழ்ந்த பசுமைப் புரட்சியும் ஆகும். வேளாண்மை நடுவண் கிழக்குப் பகுதியில் இருந்து ஐரோப்பாவுக்குப் பரவியது. கி.மு 4,000 ஆண்டளவில் நடுவண் ஐரோப்பாவில் எருதுகள் இழுக்கும் வண்டிப் பெட்டிகள் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டன.[8]

பண்ணை வகைகள்[தொகு]

சிறப்புவகைப் பண்ணைகள்[தொகு]

பால் பண்னை[தொகு]

பால் கறக்கும் எந்திரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Gregor, 209; Adams, 454.
  2. Larousse Dictionnaire de la Langue Francaise Lexis, Paris, 1993
  3. Patrick Hanks, தொகுப்பாசிரியர் (1986). Collins dictionary of the English language. London: Collins. 
  4. James Robert Vernam Marchant, Joseph Fletcher Charles, தொகுப்பாசிரியர். Cassell's Latin dictionary. Funk & Wagnalls. 
  5. Diamond, J.; Bellwood, P. (2003). "Farmers and Their Languages: The First Expansions". Science 300 (5619): 597–603. doi:10.1126/science.1078208. பப்மெட்:12714734. Bibcode: 2003Sci...300..597D. http://faculty.bennington.edu/%7Ekwoods/classes/enviro-hist/diamond%20agriculture%20and%20language.pdf. 
  6. "International Stratigraphic Chart". International Commission on Stratigraphy. Archived from the original on 2013-02-12. பார்க்கப்பட்ட நாள் 2012-12-06.
  7. Graeme Barker (25 March 2009). The Agricultural Revolution in Prehistory: Why did Foragers become Farmers?. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-955995-4. https://books.google.com/books?id=fkifXu2gx4YC. பார்த்த நாள்: 15 August 2012. 
  8. "A History of Farming". www.localhistories.org. பார்க்கப்பட்ட நாள் 2016-04-04.

நூல்தொகை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Farms
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணை&oldid=3791369" இலிருந்து மீள்விக்கப்பட்டது