மெரிசே ஓவலெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெரிசே ஓவலெட் மிசானின் [1] ( (/məˈrs/; née  ; இயற்பெயர் ஒவலெட் பிறப்பு ஜனவரி 21, 1983) ஒரு கனடிய-அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், தொழில்முறை மல்யுத்த மேலாளர், நடிகை, தொழிலதிபர், மற்றும் மாதிரி அழகி தற்போது டபிள்யுடபிள்யுஇ உடன் ஒப்பந்தம் செய்து மேரிஸ் எனும் மேடைப் பெயரில், ஸ்மாக்டவுன் பிரிசில் தனது நிஜ வாழ்க்கை கணவர் தி மிஸ்ஸின் மேலாளராக இருந்தார்.

2003 ஆம் ஆண்டில் மிஸ் ஹவாய் டிராபிக் கனடாவை வென்றது உட்பட பல ஆண்டுகளாக வடிவழகு செய்தபின், ஓவெலட் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் திவா தேடல் போட்டியில் பங்கேற்ற பிறகு, ஆகஸ்ட் 2006 இல் தொழில்முறை மல்யுத்த விளம்பர உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டார். 2008 ஆம் ஆண்டில் ஸ்மாக்டவுன் பிரிவிற்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு, உலக மற்போர் மகிழ்கலை நிறுவத்தின் அங்கத்துவ நிறுவனங்களான ஓஹியோ பள்ளத்தாக்கு மல்யுத்தம் மற்றும் புளோரிடா வாகையாளர் மல்யுத்தத்தில் அவர் கல்ந்து கொண்டார். டிசம்பர் 2008 இல், மேரிஸ் தனது முதல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் திவாஸ் வாகையாளர் பட்டத்தினை வென்று ஏழு மாதங்கள் தக்கவைத்துக் கொண்டார் இதன் மூலம் உலக மற்போர் மகிழ்கலை நிறுவன வரலாற்றில் அதிக நாட்கள் இந்தப் பட்டத்தினை தக்க வைத்துக் கொண்ட மூன்றாவது உலக மற்போர் மகிழ்கலை வீரரானார். ஏப்ரல் 2009 இல், அவர் ரா பிரிவிர்கு மாற்றம் செய்யப்பட்டார், மேலும் பிப்ரவரி 2010 இல் இரண்டாவது முறையாக உலக மற்போர் மகிழ்கலை நிறுவன திவாஸ் வாகையாளர் பட்டத்தினை வென்றார், அக்டோபர் 2011 இல் நிறுவனத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர், 2010 ஆம் ஆண்டின் மத்தியில், அவர் என்எக்ஸ்டியின் இணை தொகுப்பாளராகவும், டெட் டிபியாஸின் மேலாளராகவும் ஆனார். ஏப்ரல் 2016 இல், அவர் நிறுவனத்திற்குத் திரும்பி தனது கணவர் தி மிஸின் மேலாளரானார், அவர் மூன்று கண்டஙகளுக்கு இடையிலான வாகையாளர் பட்டம் பெற்ற பெற்ற காலங்களில் நிர்வகித்தார்.

2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஹவுஸ் ஆஃப் மேரிஸ் என்று அழைக்கப்படும் ஒரு ஆடை மற்றும் நகைக்கான திட்டங்களை அவர் அறிவித்தார், நவம்பர் 2016 இல், அவர் மெய்தனமை தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஷோ டோட்டல் திவாஸின் என்பதில் கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியின் ஆறாவது மற்றும் ஏழாவது பருவங்களில் தோன்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

ஓவெலெட் கியூபெக்கிலுள்ள மாண்ட்ரீலில் பிறந்தார், ஆனால் நியூ பிரன்சுவிக் எட்மண்ட்ஸ்டனில் வளர்ந்தார்.[2] உயர்நிலைப் பள்ளியில், ஓவெலட் தனது வகுப்பில் இருந்த ஒரே பெண் ஆவார். இவர் தனது பள்ளியில் அழகுப் போட்டி ஒன்றினை நடத்தினார்.[3] அவர் பலவிதமான ஒப்பனை தயாரிப்புகளையும் உருவாக்கத் தொடங்கினார். ஓவலெட் தனது வடிவழகு வாழ்க்கையை ஒரு அழகுப் போட்டியாளராகத் தொடங்கினார், மிஸ் ஹவாய் டிராபிக் கனடா 2003 ஆம் ஆண்டில் வென்றார் மற்றும் மிஸ் ஹவாய் டிராபிக் 2004 இன் சர்வதேச இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இவர் 2007 ஆம் ஆண்டில் பிளேபாய் கனடா நாட்காட்டியில் அட்டைப் படத்தில் தோன்றினார்.

சான்றுகள்[தொகு]

  1. "Maryse Mizanin". Twitter. பார்க்கப்பட்ட நாள் December 31, 2016.
  2. Kamchen, Richard. "Maryse Ouellet". Slam! Sports. Canadian Online Explorer. Archived from the original on ஏப்ரல் 19, 2012. பார்க்கப்பட்ட நாள் July 4, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Rote, Andrew (July 22, 2008). "Making life beautiful". World Wrestling Entertainment. Archived from the original on August 22, 2008. பார்க்கப்பட்ட நாள் September 19, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரிசே_ஓவலெட்&oldid=3859720" இலிருந்து மீள்விக்கப்பட்டது