செக்சு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sex
நூலாசிரியர்Madonna
நாடுUnited States
வகை
வெளியீட்டாளர்
ISBN978-84-406-3117-6

செக்ஸ் என்பது 1992 ஆம் ஆண்டு அமெரிக்க பாடகர் மடோனா எழுதிய வரவேற்பறை நூல், இதற்கு ஸ்டீவன் மீசல் ஸ்டுடியோ மற்றும் ஃபேபியன் பரோன் ஆகியோர் நிகழ்பட கலைஞராக பணியாற்றினர். இதை இக்ளென் ஓ பிரையன் திருத்தி வார்னர் புக்ஸ், மேவரிக் மற்றும் கால்வே ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டன. இந்நூல் வயது வந்தோருக்கான மென்புணர்ச்சிக்கலை, அடுத்தவரை துன்புறுத்தி அவரை பாலியல் புணர்ச்சியில் ஈடுபடுவது போல் உருவகப்படுத்தி கிளர்ச்சியடைவது போன்ற பாலியல் உள்ளடங்களை கொண்டுள்ளது.

சைமன் & இசுகசுடர் வெளியீட்டாளர் யூடித் ரீகனின் சிற்றின்ப நிழற்பட புத்தகத்தின் அடிப்படையில் மடோனா செக்ஸ் நூலை உருவாக்கினார். 1930 களின் திரைப்பட நடிகை டிட்டா பார்லோவால் ஈர்க்கப்பட்டதால் நூலின் கதாபாத்திரத்துக்கு "மிஸ்டிரஸ் டிட்டா" என்று பெயரிட்டார். கை போர்டின், ஹெல்முட் நியூட்டன் மற்றும் ராபர்ட் மாப்ளெதோர்ப் உள்ளிட்ட பல இசை & பாணி கலைஞர்கள் தாக்கம் இதில் உள்ளது. இந்த புகைப்படங்கள் 1992 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நியூயார்க் நகரத்திலும் மியாமியிலும் உள்ள உணவகங்கள், நாடக- இசை அரங்குகள் மற்றும் நகர வீதிகள் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டன. இந்த புத்தகத்தில் நடிகை இசபெல்லா ரோசெல்லினி, ராப்பர்கள் பிக் டாடி கேன் மற்றும் வெண்ணிலா ஐஸ், பாணியர் நவோமி காம்ப்பெல், ஓரினச்சேர்க்கை நடிகர் ஜோயி ஸ்டெபனோ, நடிகர் உடோ கியர் மற்றும் சமூக இளவரசி டாடியானா வான் ஃபார்ஸ்டன்பெர்க் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். நூலின் அட்டை அலுமினியத்தால் ஆனது, நூல் சுருள் உருளையால் பிணைக்கப்பட்டு மைலார் தாளில் மூடப்பட்டிருக்கும்.

செக்ஸ் விரிவான ஊடக கவனத்தையும் சர்ச்சையையும் ஈர்த்தது. மடோனாவின் வெளியீட்டாளர்கள் புத்தகத்தின் வெளியீட்டோடு அதன் வணிக திறன் குறித்து அச்சமடைந்தனர். மடோனாவின் ஐந்தாவது ஸ்டுடியோ ஆல்பமான எரோடிகா வெளியானதற்கு மறுநாளான அக்டோபர் 21, 1992 அன்று வெளியிடப்பட்டது , இது முதல் நாளில் 150,000 பிரதிகள் விற்றது, மேலும் <i id="mwKw">நியூயார்க் டைம்ஸ்</i> சிறந்த விற்பனையாளர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இது வேகமாக விற்பனையாகும் வரவேற்பறை புத்தகமாக உள்ளது. எரோடிகாவும் புத்தகத்துடன்

இணைத்து வழங்கப்பட்ட்டது.

ஆரம்பத்தில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அவர்கள் மடோனா "வெகுதூரம் சென்றுவிட்டார்" என்று கருதினாலும், பின்னர் மதிப்புரைகள் மிகவும் நேர்மறையாக இருந்தன. துறை அறிஞர்கள் இந்நூல் மடோனாவின் தொழிலில் ஓர் திருப்புமுனை என்றனர். இந்நூல் மடோனாவின்  தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதுடன்  துணிச்சலான பின்னைப்பெண்ணிய படைப்பாக கருதப்பட்டது. . இது அச்சிடப்பட்ட புத்தகங்களில் மிகவும் தேடப்பட்ட ஒன்றாகும்.

பின்னணியும் வளர்ந்ததும்[தொகு]

என்டர்டெயின்மென்ட் வீக்லியின் ஜிசெல் பெனாட்டரின் கருத்துப்படி மடோனா புத்தகத்திற்கான யோசனையை ஏதாவது ஒரு வழியில் பெற்றிருக்கலாம் என இரு வழிகளை கூறுகிறார். ஒன்று, 1991 கோடையில் எ லீக் ஆஃப் தெர் ஓன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு சிற்றின்ப புகைப்படம் எடுத்தல் என்ற கருத்தை அவர் கருத்தரித்தார்.[1] மற்றொன்று, நிழற்படகாமம் உள்ள தொகுப்பை செய்யலாம் என்ற  முன்மொழிவுடன் சைமன் அண்ட் ஸ்கஸ்டரின் துணைத் தலைவரும், தலைமை ஆசிரியருமான ஜூடித் ரீகன், 1991 மார்ச்சில் மடோனா மற்றும் அவரது மேலாளர் ஃப்ரெடி டிமான் ஆகியோரைச் சந்திக்க லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் பறந்தார்.  . மடோனா, ரீகன் மற்ற புகழ் பெற்ற நபர்களை இந்த கருத்துடன் சந்திக்கவில்லை என உறுதிபடுத்திக்கொண்டார். ஏனெனில் இது ஒரு தனித்துவமான யோசனையாக இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தில் ஈடுபட அவர் நினைத்திருந்தார்.[2] கூட்டத்தின் முடிவில் மடோனா புத்தகம் ஆப் எரோடிகா அண்டு  செக்சுவல் பேண்டசி என்ற தலைப்பில்  புத்தகத்தை செய்ய மடோனா "கொள்கை அடிப்படையில்" ஒப்புக் கொண்டார். டீமான் அழைத்து புத்தகத்தின் விவரங்களை ரீகனிடம் கூறுவார் என்றார்.   [3] இருப்பினும், மடோனா இது தொடர்பாக ரீகனை அழைத்து பேசாததால் மடோனா இந்த கருத்தை முன்னெடுத்து செல்ல விரும்பவில்லை என ரீகன் கருதினார். மடோனாவின் விளம்பரதாரர் லிஸ் ரோசன்பெர்க் தங்களுக்கு உடன்பாடு இருப்பதாக ரீகனின் கூற்றை ஒருபோதும் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

இந்த திட்டத்திற்கான சில படங்கள் நியூயார்க்கின் விடுதியும் உணவகமும் உள்ள செல்சியாவில் படமாக்கப்பட்டன.

பெனாட்டரின் கூற்றுப்படி மடோனா எ லீக் ஆஃப் தெர் ஓன் படப்பிடிப்பை முடிப்பதற்கு முன்பு செக்ஸ் (நூல்) வேலை செய்யத் தொடங்கினார்.[1] முதலில் வார்னர் பிரதர்ஸ். இசைத்தட்டு மற்றும் டைம் வார்னர் இயக்குனர்கள் மடோனா நூலை வெளியிட ஒப்புக்கொள்ளவில்லை இறுதியில் அனுமதிக்க விருப்பம் இல்லாமல் இருந்த அவர்கள் வெளியிட ஒப்புப்கொண்டனர் . சிறுவரை புணர்வது, விலங்குகளை புணர்வது மதப் படங்கள் உள்ளிட்டவற்றை புத்தகத்திலிருந்து தடைசெய்யும் ஒப்பந்தத்தில் மடோனா கையெழுத்திட வேண்டியிருந்தது. ஒப்பந்தம் கையெழுத்திட்ட சிறிது காலத்தில் மடோனா டைம்வார்னரை பங்கு தாரராக சேர்த்துக்கொண்டு மாவரிக் நிறுவனத்தை உருவாக்கினார், ஒப்பந்தம் மூலம் இவர் உரிமையாளராக  உள்ள மாவரிக் வழியாக வெளியிடப்படும் எந்த படைப்புக்கும் முழு கலை உரிமையையும் பெற்றார். உடன்பாடு மூலம் டைம் வார்னருக்கு செக்சு (நூல்)  கருத்துக்கு எந்த உரிமையும் இல்லாததாக்கி விட்டார்..[4][5]

  1. 1.0 1.1 Giselle, Benatar (November 6, 1992). "Sex & Money: Inside the making of Madonna's wildly successful erotic fantasy book". Entertainment Weekly. pp. 1–3. Archived from the original on November 6, 2013. பார்க்கப்பட்ட நாள் November 30, 2012.
  2. Taraborrelli 2008
  3. Kilian, Michael (October 7, 1992). "In Time For The Gift-giving Season: Madonna Gets Bookish About". Chicago Tribune இம் மூலத்தில் இருந்து October 7, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121007050158/http://articles.chicagotribune.com/1992-10-07/entertainment/9203310949_1_madonna-book-warner-books-miss-america. பார்த்த நாள்: September 18, 2011. 
  4. Wilker, Deborah (November 5, 1992). "Madonna She's Got Sex For Our Eyes And Erotica For Our Ears". Sun-Sentinel. pp. 1–2. Archived from the original on February 22, 2014. பார்க்கப்பட்ட நாள் December 12, 2012.
  5. McMahon 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்சு_(நூல்)&oldid=2867306" இலிருந்து மீள்விக்கப்பட்டது