பிராக் லெஸ்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிராக் எட்வர்டு லெஸ்னர் (Brock Edward Lesnar பிறப்பு:சூலை 12, 1977) ஓர் அமெரிக்க தொழிற்முறை மற்போர் வீரர் மற்றும் தொழில் முறை கால்பந்து வீரர் ஆவார். இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு ரா எனும் குத்துச் சண்டைப்பிரிவில் பிராக் லெஸ்னர் எனும் பெயரில் விளையாடி வருகிறார். பிஸ்மாஅர்க் மாநிலக் கல்லூரியில் கல்வி கற்கும் போது  தொழில்முறை அல்லாத மற்போர் போட்டிகளில் கலந்துகொண்டார். 2000 ஆம் ஆண்டில் மின்னசொட்டா பலகலைக் கழகத்தில் கல்வி கற்கும் போது உலக மற்போர் நிறுவனத்துடன் ஒப்பந்தமானார். பின் ஓ வி ஏ நிறுவனத்துடன் மற்போர் செய்ய ஒப்பந்தமானார். அதில் செல்டன் பெஞ்சமின் eன்பவ்ருடன் இணைந்து மூன்று முறை டேக் டீம் சாம்பியன்  பட்டம் பெற்றார். 2002 ஆம் ஆண்டில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் ஒப்பந்தமாகி ஐந்து மாதங்களுக்குப் பின் உலக மற்போர் மகிழ்கலை வாகையாளர் பட்டம் பெற்றார். அதன்மூலம் மிக இளம்வயதில் இந்தப் பட்டம் பெற்ற வீரர் எனும் சாதனை படைத்தார். அதன்பின்பு ரெஸ்சில்மேனியா 20  இல் இவர் கோல்டுபெர்க்குடன் மோதினார். பின் நேசனல் புட்பால் லீக்கில் கலந்துகொண்டார். 2005 ஆம் ஆண்டில் மீண்டும் நியூ ஜப்பான் புரோ ரெஸ்லிங்  எனும் மற்போர் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகி தனது முதல் போட்டியிலேயே வாகையாளர் பட்டம் சூடினார்.

எட்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் லெஸ்னர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ரெஸ்சில்மேனியா XXX நிகழ்ச்சியில் அண்டர்டேகரை இவர் வென்றார். அதன்மூலம் ரெஸ்சில்மேனியாவில் அண்டர்டேகர் தோல்வியுற்றதே இல்லை எனும் சாதனையை இவர் முறியடித்தார். இவர் உலக மற்போர் வாகையாளர் பட்டத்தினை நான்கு முறை பெற்றுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

பிராக் எட்வர்டு லெஸ்னர்[1] சூலை 12, 1977   இல் வெப்ஸ்டர், சவுத் டகோடாவில் பிறந்தார்.[2] இவரின் தந்தை ரிச்சர்டு லெஸ்னர் தாய் ஸ்டெபனி. தனது பெற்றோருடன் வெப்ஸ்டரில் உள்ள ஓர் பால் பண்ணைஉயில் வாழ்ந்து வந்தார். .  இவர் ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவருக்கு ட்ராய் மற்றும் சாட் ஆகிய இரு மூத்த சகோதரர்களும் பிராண்டி எனும் இளைய சகோதரியும் உள்ளனர்.   தனது 17 ஆம் வயதில் இவர் தேசிய ரானுவ பாதுகாப்பில் வண்ணக் குறைபாடு காரணமாக அலுவகப் பணிபுரிந்தார். கணிப்பொறி தேர்வில் தோல்வியடைந்ததால் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

லெஸ்னர் வெப்ஸ்டர் உயர்நிலைப்பள்ளியில்  கல்வி பயின்றார். அப்போது கால்பந்து மற்றும் தொழில்முறை அல்லாத மற்போரில் ஈடுபட்டார். அப்போது நடைபெற்ற மாநில அளவிலான மற்போர் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார் .பின்பு அவர் பிஸ்மார்க் மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். இரண்டாம் ஆண்டில் தேசிய இளையோர் கல்லூரி தடகள கழக வாகையாளர் பட்டதினைப் பெற்றார்.பின்பு மற்போர் உதவித் தொகை மூலமாக மின்னசொட்ட பலகலைக்கழகத்தில் இவருக்கு இடம் கிடைத்தது. அங்கு இவரின் அறை நண்பரான ஷெல்டன் பெஞ்சமின் eன்பவரைச் சந்தித்தார். அவர்தான் இவரின் உதவிப் பயிற்சியாளரும் பின்னாளில் மற்போர் கூட்டாளியும் ஆனார்.

சான்றுகள்[தொகு]

  1. "Biography for Brock Lesnar". IMDB.com. பார்க்கப்பட்ட நாள் March 23, 2009.
  2. Death Clutch: My Story of Determination, Domination, and Survival by Brock Lesnar (ISBN 978-0062023117)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராக்_லெஸ்னர்&oldid=2866587" இலிருந்து மீள்விக்கப்பட்டது