ஏஜீ லீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏஜீ லீ
ஏஜீ லீயின் புகைப்படம்
2014இல் ஏஜீ லீ
பிறப்புஏப்ரல் ஜீனெட் மென்டெஸ்
மார்ச்சு 19, 1987 (1987-03-19) (அகவை 37)
யூனியன் நகரம், நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா
பணி
  • எழுத்தாளர்
  • மன நல ஆர்வலர்
  • தொழில்முறை மல்யுத்த வீரர்
செயற்பாட்டுக்
காலம்
  • 2007–2015 (தொழில்முறை மல்யுத்தம்)
  • 2017–தற்பொழுது (எழுத்தாளர்)
வாழ்க்கைத்
துணை
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை
மற்போர் பெயர்
  • A. J.[1]
  • A. J. Lee
  • April Lee
  • Miss April
Billed height5 அடி 2 அங்குலம்[2]
Billed weight115 பவுண்டு[3]
Billed fromUnion City, New Jersey[2]
பயிற்சியாளர்
  • சே லீத்தல்
முதல் போட்டி2007
ஓய்வு பெற்றதுApril 3, 2015
வலைத்தளம்
theajmendez.com

ஏப்ரல் ஜீனெட் மென்டெஸ் (April Jeanette Mendez பிறப்பு மார்ச் 19, 1987) ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் முன்னாள் தொழில்முறை மல்யுத்த வீரர் . ஏ.ஜே. லீ என்ற மேடைப் பெயரில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் மற்போரில் ஈடுபட்டதற்காக உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் பரவலாக அறியப்படுகிரார்.

நியூ ஜெர்சியில் பிறந்து வளர்ந்த மெண்டெஸ் தனது தொழில்முறை மல்யுத்த வாழ்க்கையை 2007 ஆம் ஆண்டில் மாநிலத்தின் சுயாதீன மல்யுத்த சுற்றுகளில் போட்டியிட்டு தனது தொழ்ல்முறை வாழ்க்கையினைத் தொடங்கினார். இவர் 2009 இல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். பின்னர் புளோரிடா வாகையாளர் மல்யுத்தத்தில் இரண்டு ஆண்டுகள் பங்குபெற்றார். 2012 ஆம் ஆண்டில் மூன்று மாதங்கள் ரா பிரிவின் மேலாளராகப் பதவியில் இருந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், இவர் பெண்கள் வாகையாளராக மூன்று முறை பட்டம் வென்றார் மற்றும் 406 நாட்கள் உலக மற்போர் மகிழ்கலை நிறுவன பெண்கள் வாகையாளராக இருந்தார். இதன்மூலம் அதிக நாட்கள் பெண்கள் வாகையாளராக இருந்தவர் எனும் சாதனையைப் படைத்தார். 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சிறந்த பெண் வீராங்கனைக்கான சிலாமி விருது பெற்றார். மேலும் 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரை வாசகர்களால் தேர்வு செய்யப்படும் ஆண்டின் சிறந்த பெண் வீராங்கனை விருதிற்குத் தேர்வானார்.2015 ஆம் ஆண்டில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார்.

மெண்டெஸ் தொழில்முறை மல்யுத்தப் போடியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பின்னர் எழுத்துப் பணியில் கவனம் செலுத்தினார். 2017 ஆம் ஆண்டு நினைவுக் குறிப்பு, கிரேஸி இஸ் மை சூப்பர் பவர் போன்ற இவரின் படைப்புகள் நியூயார்க் டைம்சின் அதிகம் விற்பனையான பிரதிகள் பிரிவில் இடம்பெற்றது.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஏப்ரல் ஜீனெட் மென்டெஸ் மார்ச் 19, 1987 இல்,[4] நியூ ஜெர்சியிலுள்ள யூனியன் சிட்டியில் பிறந்தார் .[5] அவரது தாயார் ஜேனட் அசெவெடோ ஒரு இல்லத்தரசி, அவரது தந்தை ராபர்ட் மென்டெஸ் ஒரு வாகனப் பொறியாளராக இருந்தார் . [6] இவர் மூன்று குழந்தைகளில் இளையவர் ஆவார்.[6] [7] மற்றும் புவேர்ட்டோ ரிக்கன் வம்சாவளியைச் சேர்ந்தவர்.[8] தனது குழந்தைப் பருவத்தைப் பற்றிக் கூறும் போது , தான் மற்றும் தனது குடும்பமும் வறுமை, மன நோய் மற்றும் போதைப் பழக்கத்துடன் போராடியதாகக் கூறினார்.[9] இவரின் குடும்பம் பல சமயங்களில் பல இடங்களில் குடிபெயர்ந்தது. சில சமயங்களில் வாடகைக்கு வீடு கிடைக்காத போது மோட்டல்களில் அல்லது இவர்களின் காரில் வாழ்ந்தனர்.[8][10] உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிறுவனத்தில் சேர வேண்டும் எனும் இவரின் சகோதரரின் ஆர்வம் இவரையும் ஒரு தொழில்முறை மல்யுத்த வீரராக மாற வேண்டும் எனத் தீர்மானித்தது.[11][12] லிதா போன்ற பெண் வீரர்களின் செயல்பட்டினால் அதிகம் ஈர்கப்பட்டார்.[13][14] பன்னிரண்டு வயதில் தான் தொழில்முறை மற்போர் வீரராக ஆக வேண்டும் எனத் தீர்மானித்தார். .[11][12] 2005 ஆம் ஆண்டில், மென்டெஸ் நியூ ஜெர்சியின் மேற்கு நியூயார்க்கில் உள்ள நினைவு உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[10] இவர் நியூயார்க் நகரில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தின் டிஷ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் பயின்றார், அங்கு இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புப் பிரிவில் தேர்ச்சி பெற்றார்,[10][13] வறுமை காரணமாக தனது கல்வியினை இடையில் நிறுத்தினார்.[15] பின்னர், மல்யுத்த பயிற்சி பெற முழுநேரமாக ஈடுபடத் தொடங்கினார்.[15] அமெரிக்க இராணுவத்தில் இருந்த தனது சகோதரருக்கு மரியாதை செலுத்துவதற்காக, இவர் ஒரு முறை உருமறைப்பு மல்யுத்த உடையை அணிந்திருந்தார்.[11][13]

சான்றுகள்[தொகு]

  1. "AJ bio". Florida Championship Wrestling. Archived from the original on February 24, 2011. பார்க்கப்பட்ட நாள் January 12, 2018.
  2. 2.0 2.1 "AJ Lee bio". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். Archived from the original on April 6, 2015. பார்க்கப்பட்ட நாள் August 9, 2017.
  3. Wortman, James (May 15, 2013). "The spider's bite: AJ Lee on her excruciating 'Black Widow' submission move". WWE. Archived from the original on March 7, 2016. பார்க்கப்பட்ட நாள் February 18, 2016.
  4. "How old is WWE Divas Champion A.J. Lee?". ProWrestling.net. Last Row Media LLC. March 19, 2014. Archived from the original on April 27, 2016. பார்க்கப்பட்ட நாள் August 9, 2017.
  5. Johnson, Mike (April 6, 2015). "AJ Lee's exit leaves lots of questions – The question of her legacy will not be among them". PWInsider. Archived from the original on September 24, 2016. பார்க்கப்பட்ட நாள் August 9, 2017.
  6. 6.0 6.1 Mendez Brooks 2017.
  7. Wortman, James (April 4, 2013). "WrestleMania Diary: AJ Lee, Day 2". WWE. Archived from the original on April 6, 2016. பார்க்கப்பட்ட நாள் April 6, 2016. her older siblings Robert and Erica
  8. 8.0 8.1 Cardos, Nicole (April 11, 2017). "AJ Mendez Brooks' Memoir Tackles Mental Illness, Family Dysfunction". Chicago Tonight. WTTW. Archived from the original on April 14, 2017. பார்க்கப்பட்ட நாள் August 9, 2017.
  9. Fiorvanti, Tim (April 4, 2017). "AJ Mendez Brooks writes about turning perceived flaws into strengths". ESPN. ESPN Internet Ventures. Archived from the original on April 5, 2017. பார்க்கப்பட்ட நாள் August 9, 2017.
  10. 10.0 10.1 10.2 Monday, Michael (April 3, 2013). "WrestleMania 29: Homecoming for Jersey's tiny 'Diva' AJ Lee". The Star-Ledger. NJ.com. Archived from the original on August 5, 2017. பார்க்கப்பட்ட நாள் August 9, 2017.
  11. 11.0 11.1 11.2 Teodoro, Nick (June 15, 2012). "AJ Lee, the WWE's 'Geek Goddess', talks triple-threat match and her NJ. homecoming". North Jersey Media Group. Archived from the original on June 17, 2012. பார்க்கப்பட்ட நாள் April 12, 2014.
  12. 12.0 12.1 Sinclair, Samantha (October 16, 2012). "Jersey native A.J. Lee living the dream as WWE Raw GM". The Trentonian. Digital First Media. Archived from the original on August 11, 2017. பார்க்கப்பட்ட நாள் August 11, 2017.
  13. 13.0 13.1 13.2 "Miss April". G.L.O.R.Y. Wrestling. April 10, 2009. Archived from the original on April 14, 2009. பார்க்கப்பட்ட நாள் June 21, 2017.
  14. Causey, James E. (August 25, 2012). "AJ Lee is the tiny titan of wrestling". Milwaukee Journal Sentinel. Gannett Company. Archived from the original on March 21, 2017. பார்க்கப்பட்ட நாள் March 21, 2017.
  15. 15.0 15.1 Pierce, Scott (August 20, 2012). "Q&A: AJ Lee, WWE Superheroine". Esquire. Hearst Communications. Archived from the original on September 10, 2015. பார்க்கப்பட்ட நாள் August 9, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஜீ_லீ&oldid=3759147" இலிருந்து மீள்விக்கப்பட்டது