ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்
வகைகிளை
நிறுவுகை6 மே 1996; 27 ஆண்டுகள் முன்னர் (1996-05-06)
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்சியோன் சீப் கிம் (சிஇஓ)
தொழில்துறைதானியங்கி
உற்பத்திகள்வாகன உற்பத்தி
உற்பத்தி வெளியீடு710,012 units (2018)[1]
தாய் நிறுவனம்ஹூண்டாய் மோட்டார் லிமிடெட்
இணையத்தளம்www.hyundai.co.in

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் ஓர் தென் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் நிறுவன கிளை நிறுவனமாகும்.இந்நிறுவனத்தின் இந்திய வாகன உற்பத்தியின் பங்கு 2019 பிப்ரவரி நிலவரப்படி 16.2 சதவீதமாகும்.


ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் மே 6 1996ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட வாகன உற்பத்தி நிறுவனமாகும். அக்காலகட்டத்தில் பெரும்பாலும் அறியப்படவில்லை.பதிற்றாண்டுகளுக்கு பின்னர் வெளிநாட்டு வாகனநிறுவனங்களின் வருகையால் மாபெரும் போட்டியாளராக தற்போது செயல்பட்டு வருகிறது.

வரலாறு[தொகு]

ஹூண்டாய் சான்றோ எனும் வாகனம் 1998ம் ஆண்டு செம்டம்பர் 22ம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.அதே காலகட்டத்தில் இந்நிறுவனம் நாட்டின் 2வது வாகன ஏற்றூமதியாளராக திகழ்ந்தது.தற்போது வரை 10க்கும் மேற்பட்ட வாகன மாதிரிகளை தயாரித்து சந்தை படுத்தியுள்ளது.

இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் 87க்கும் மேலான நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது

உற்பத்தி[தொகு]

தமிழ்நாட்டில் இந்நிறுவனம் சென்னைஅருகே இருங்காட்டுக்கோட்டை மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய பகுதிகளில் அமைத்துள்ள ஆலைகளில் ஆண்டிற்கு 7.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி திறன் வாய்ந்தவையாகும்.



  1. "Hyundai India Crosses 8 Million Cars Production Milestone". Archived from the original on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2019-10-24.