கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ V

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராண்ட் தெப்ட் ஆட்டோ V (Grand Theft Auto V) என்பது அதிரடி-சாகச காணொளி விளையாட்டு ஆகும்.[1] இதனை ராக்ஸ் ஸ்டார் நார்த் நிறுவனம் உருவாக்கியது. ராக்ஸ் ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் இதனை வெளியிட்டது. செப்டமபர் 2013 இல் பிளே ஸ்டேசன்  3, எக்ஸ் பாக்சு 360 இல் வெளியானது. நவம்பர் 2014 இல் பிளே ஸ்டேசன் 4 மற்றும் எக்சு பாக்சு ஒன் போன்ற கருவிகளில் வெளியானது.ஏப்ரல் 2015 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் விண்டோசுவிலும் வெளியானது. இதில் லாஸ் ஏnjசல்ஸ் நகரத்தினை அடிப்படையாகக் கொண்ட லாஸ் சாந்தோஸ் எனும் நகரத்தில் விளையாடுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும். வீரர்கள் இந்த நகரத்தின் எந்த பகுதிகளிலும் சுற்றித் திரியலாம்.

இந்த விளையாட்டானது ஒரு மூன்றாம் நபர் பார்வையில் இருந்து விளையாடப்படுகிறது. மேலும் இந்த விளையாட்டில் நடந்து சென்றோ அல்லது வாகனத்தில் பயனித்தோ விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று கதை மாந்தர்கள் உளனர். அதில் யாரையேனும் ஒருவரைத் தேர்வு செய்து விளையாடலாம். இதில் பெருமாலான மேற்பணிகள் சுடுதல் அல்லது வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றின் மூலமே செய்யப்படுகிறது. இணைய இணைப்பில் விளையாடும் போது 30 பேர் பல வகையான விளையாட்டு நிலைகளில் விளையாட இயலும்.

விளையாடும் முறை[தொகு]

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ V என்பது மூன்றாம் நபரின் பார்வையில் விளையாடும் ஒரு அதிரடி-சாகச விளையாட்டு ஆகும்.[2] முதலாம் நபரின் பார்வையில் விளையாடும் வகையிலும் இந்த பதிப்பு அமைந்துள்ளது[3] குறிப்பிடத்தக்கதாகும்.  இந்த விளையாட்டில் வீரர்கள் தங்களுக்கான மேற்பணிகளை வரும் தடைகளைத் தாண்டி நிறைவு செய்தல் வேண்டும். இதில் வீரர்கள் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மேற்பணிகளைச் செய்ய வேண்டி இருக்கும் சில சம்யங்களில் ஒரு மேற்பணிகளைச் செய்து முடித்த பிறகு அடுத்த பணிக்கான அறிவுறுத்தலுக்காகவோ அல்லது நிகழ்வுகள் வருவதற்கு காத்திருக்க வேண்டியிருக்கலாம். மேற் பணிகளுக்கு அப்பால், வீரர்கள் விளையாட்டின் திறந்த உலகில் சுதந்திரமாக சுற்றலாம், மேலும் விருப்பமான மேற்பணிகளைச் செய்து முடிக்கலாம். இந்த பதிப்பில் லாஸ் ஏஞசல்ஸ் நகரத்தினை அடிப்படையாகக் கொண்ட லாஸ் சாந்தோஸ் எனும் நகரத்தில் விளையாடுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தற்கு முந்தைய பதிப்புகளில் இருந்த இடங்களை விட இந்த நகரத்தின் பரப்பளவு சற்று அதிகமாகும்.

விருதுகள்[தொகு]

காணொளி விளையாட்டுக்களை வெளியிடும் நிறுவனங்களிடம் இருந்து பல விருதுகளையும் பல விருதிற்கானப் பரிந்துரைகளையும் பெற்றது. இந்த விளையாட்டு வெளியிடப்படுவதற்கு முன்னதாக 2012 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டிற்கான 2012 ஸ்பைக் காணொளி விளையாட்டி விருதினை இது வென்றது. 2013 ஆம் ஆண்டில் வெளியான விளையாட்டில் விமர்சகர்களின் தரவரிசையில் அதிக புள்ளிகள்: பெற்றது. மேலும் தற்சார்பு விமர்சகர்களான டாம் சிக், சி என் இ டி , எட்ஜ், முப்பதி ஒன்றாவது கோல்டன் ஜாஸ் ஸ்டிக் அவார்ட்ஸ், ஐந்தாவது இன்சைட் கேமிங் அவார்ட்ஸ், ஸ்பைக் வி இ எக்சு, (2013), சிலாண்ட் இதழ், மற்றும் டைம் ஆகிய விமர்சகர்களிடையே பாராட்டினைப் பெற்றது. சிறந்த எக்சு பாக்சிற்கான விளையாட்டு விருதினை கனடா .காம் வழங்கியது.  எட்ஜ் வழங்கிய சிறந்த விளையாட்டு மேம்பாட்டாளர் விருதினை ராக்ஸ் ஸ்டார் நார்த் நிறுவனம் மற்றும் ராக்ஸ் ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் பெற்றது.  சிறந்த காணொளி விளையாட்டிற்கான பத்தாவது பிரிட்டிசு அகாதமி விருதினைப் பெற்றது.

சான்றுகள்[தொகு]

  1. Pitcher, Jenna (9 October 2013). "Grand Theft Auto 5 smashes 7 Guinness World Records". Polygon. Vox Media. Archived from the original on 9 October 2013. பார்க்கப்பட்ட நாள் 9 October 2013.
  2. Hamilton, Kirk (24 September 2013). "Five Ways You Can Make Grand Theft Auto V More Immersive". Kotaku. Gawker Media. Archived from the original on 6 August 2014. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014.
  3. Krupa, Daniel (4 November 2014). "Grand Theft Auto 5: A New Perspective". IGN. Ziff Davis. Archived from the original on 4 November 2014. பார்க்கப்பட்ட நாள் 4 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராண்ட்_தெஃப்ட்_ஆட்டோ_V&oldid=3714530" இலிருந்து மீள்விக்கப்பட்டது