பயனர்:Kasijeeva

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியாவில் இணைந்த இலக்கு!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் 2008 இல் இணைய விரும்பி இருந்தேன். காசிஜீவா என்ற புனைபெயரில் உள்நுழைந்தும் இருந்தேன். பின்னர், எனது வலைப்பூ, வலைப்பக்க முயற்சிகளில் இறங்கி இருந்தேன். தொடர்ந்து வரும் நாள்களில் அறிஞர்கள் பலர் விக்கிப்பீடியாவில் இணையுமாறு மதியுரை தந்தனர். உலக வெளியில் விக்கிப்பீடியா சிறந்த அடையாளத்தைப் பெற்றுத் தருமென அவர்கள் சொன்ன மதியுரையை ஏற்றிருந்தேன்.

ஆயினும், இத்தனை நாள் கடந்த பின்னும் 10/04/2017 இல் இருந்து விக்கிப்பீடியாவில் இணைய ஊக்கமளித்த மூத்த விக்கிப்பீடியா அறிஞர்கள் எல்லோரையும் பாராட்டுவதோடு அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கும் நற்றமிழைப் பேணிப் பரப்பவும் இலங்கைத் தமிழர் வரலாற்றை வெளிப்படுத்தவும் விக்கிப்பீடியாவில் இணைந்துள்ளேன்.

என்னைப் பற்றி...

படிமம்:யாழ்பாவாணன்.jpg

ஈழத்து (இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த பண்டிதர் இராமலிங்கம் செல்லமுத்து இணையர்களின் மூத்த மகன் காசிராசலிங்கம் அவர்களுக்கும் அதே இடத்தைச் சேர்ந்த உடையார் விநாயகமூர்த்தி வள்ளியம்மை இணையர்களின் மூத்த மகள் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக நான் 07/10/1969 அன்று பிறந்தேன். எனக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஜீவலிங்கம். இதனைத் தமிழில் மாற்றினால் 'உயிரழகன்' என வரும். ஆனால் நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.

முதலாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன். பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பு எதுவும் படிக்கவில்லை. ஆயினும், திறந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொடக்கநிலை வகுப்பில் ஓராண்டு படித்தேன். ஈழத்துப் போர்ச் சூழல் காரணமாக அதனைத் தொடர முடியவில்லை. எப்படியோ கணினி மற்றும் மென்பொருள் ஆக்கம் சிறப்பாகப் படித்தாலும், ஊடகமும் இதழியலும். உளவியலும் உளச் சிகிச்சையும், மருத்துவமனை முகாமைத்துவம் எனச் சில படித்துள்ளேன்.

நான் 1987 இல் இருந்து எழுதப் பழகினேன். எதிர்பாராத விதமாக எனது "உலகமே ஒருகணம் சிலிர்த்தது" என்ற தொடக்க வரியைக் கொண்ட முதல் கவிதை 25/09/1990 அன்று ஈழநாதம் நாளேட்டில் வெளியாகியது. அதேவேளை ஊரில படிப்பித்த தனியார் கல்வி நிலையத்தில் நாடக வசனம் எழுதி மாணவர்களை வைத்து நாடகத்தை இயக்கியுமுள்ளேன். ஊர் மேடையிலும் கவிதை பாடியுள்ளேன். இவ்வாறு தான் எழுத்துலகில் முன்னேறினேன்.

பின்னர் வீரகேசரி பத்திரிகையிலும் சில கவிதைகள் வெளியாகின. கொழும்பிலும் நாடக ஆற்றுகை ஒன்றில் பங்கெடுத்தேன். முல்லை மாவட்ட, புதுக்குடியிருப்பிலும் சில நிகழ்வுகளில் கவிதை பாடியுள்ளேன். போர்ச் சூழலும் இடப்பெயர்வும் எனது படைப்புகளைப் பேணி வைத்திருக்க இடமளிக்கவில்லை. இறுதிக் கட்டப் போரின் பின் 05/11/2009 இற்குப் பிறகு கருத்துக்களம் (Forum), வலைப்பூ (Blog) போன்றவற்றில் எனது பதிவுகளை எழுதத் தொடங்கினேன்.

தற்போது இணைய வழியில் கணினி சார் வெளியீடுகளுக்கு (எனது கணினி மென்பொருள் வெளியீட்டுக்காக...) https://www.yarlpubs.com/ என்ற தளமும் எனது இலக்கியப் படைப்புகளைப் பகிர http://www.ypvnpubs.com/ என்ற தளமும் மின்நூல் வெளியீட்டிற்கும் மின்நூல் களஞ்சியங்களை வெளிப்படுத்தவும் (ஒரு இலட்சத்திற்கு மேலான தமிழ் மின்நூல்களைப் பேணிப் பகிரும் நோக்கில்...) https://seebooks4u.blogspot.com/ என்ற தளமும் நடாத்துகின்றேன். இவ்வாறு வலை வழியே உலகெங்கும் தூய தமிழைப் பேண விரும்புகின்றேன்.

தொடர்புகளுக்கு: yarlpavanang1@gmail.com, 094 0703 445441

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kasijeeva&oldid=2947467" இலிருந்து மீள்விக்கப்பட்டது